• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்தா..? கணவரை பிரிந்து வாழ்வது ஏன்? விளக்கம் இதோ

ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்தா..? கணவரை பிரிந்து வாழ்வது ஏன்? விளக்கம் இதோ

ரம்யா கிருஷ்ணன் தற்போது காஸ்டிங் கவுச் பற்றியும் தன் விவாகரத்து சர்ச்சை குறித்தும் பேசி இருக்கிறார்.ரம்யா கிருஷ்ணன் அது குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 18, 2026, 16:15 IST|Updated: Nov 18, 2026, 16:21 IST
joinshare
ரம்யா கிருஷ்ணனுக்கு விவாகரத்தா..? கணவரை பிரிந்து வாழ்வது ஏன்? விளக்கம் இதோ
Image Credit: Ramya Krishan With Her Husband | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

2

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

3

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

4

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

5

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்தவர், ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய இளமை காலத்தில் பல்வேறு படங்களில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்து வந்த இவர், தற்போது காஸ்டிங் கவுச் பற்றிய தன்னுடைய கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

காஸ்டிங் கவுச் என்றால் என்ன?

காஸ்டிங் கவுச் என்பது, திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறைக்ளில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு பதிலாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் (இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், காஸ்டிங் இயக்குநர்கள்) புதிய நடிகர், நடிகைகளிடம் பாலியல் ரீதியான சலுகைகளை கோரும் ஒரு முறையற்ற அதிகார சுரண்டலை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இந்த சொல், ஹாலிவுட்டில் முன்னர் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது இந்திய திரையுலகிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன் கூறியது என்ன..?

சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன், ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது திரையுலகில் காஸ்டிங் கவுச் இன்னும் நடந்து வருகிறது என்று கூறி வருகிறார். கடந்த காலத்தில் இருந்த அந்த முறை, இப்போதும் தினம் தினம் தொடர்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.

இது குறித்த தன் பார்வையை விளக்கிய ரம்யா கிருஷ்ணன், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல வித விஷயங்களை மேற்கோள் காட்டினார். மேலும், இது ஒரு குறிப்பிட்ட நாட்டில்தான் நடக்கிறது அல்லது ஒரு சில துறையில்தான் நடக்கிறது என்பது இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

ரம்யா பேச்சு..

“உதாரணத்திற்கு எப்ஸ்டீன் ஃபைல்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா போன்ற பெண்கள் முன்னோடியாக இருக்கும் ஒரு நாட்டிலேயே அது நடந்திருக்கிறது. அதனால், இங்கு அது நடப்பதில்லை என நம்மால் சொல்லிவிட முடியாது. அது நடந்து கொண்டுதான் இருந்தது, இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இனியும் நடக்கத்தான் செய்யும். ஆனால், அது எப்படி நடந்தது, உங்களுக்கு அதில் கருத்து தெரிவிக்க வாய்ப்பு இருந்ததா இல்லையா என்பது, காலத்திற்கு ஏற்ப மாறும்” இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க | அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே : ரிலீஸிற்கு முன் வெளியாகும் இன்னொரு படம்..! வெறியேத்தும் மார்வல்..

”இதில் உண்மையான ஒரு விஷயம் என்னவென்றால், வலுக்கட்டாயமாகவோ தனிப்பட்ட காரணங்களுக்காகவே அல்லது கேஷுவலாகவோ அது நடந்திருக்கும். இனியும் நடக்கும். இப்போதும் நடந்து வருகிறது. யாரும் அதனை மறக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது கவர்ச்சியான துறை. இதனால், இது குறித்து மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வெளியில் எத்தனை பெண்கள் இதனை சந்திக்கின்றனர்? அனைத்து இடங்களிலும் இது பாலின பாகுபாடின்றி நடக்கத்தான் செய்கிறது” என்று ரம்யா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.

விவாகரத்து சர்ச்சை குறித்து பேச்சு..

ரம்யா கிருஷ்ணன், பிரபல இயக்குநர் கிருஷ்ணா வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகி விட்டதாக சமீப நாட்களாக இணையத்தில் தகவல்கள் வைரலானது. இதற்கு ரம்யா கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தாங்கள் இருவரும் திருமண உறவில்தான் இருப்பதாகவும், இருவரும் தனித்தனியாக வெவ்வேறு நகரங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளர். இது, 100 சதவீதம் தொழில்முறை காரணங்களுக்காகத்தான் என்றும் கூறியிருக்கிறார். இவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடைசியாக நடித்த படம்..

நடிகை ரம்யா கிருஷ்ணன், கடைசியாக ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இன்னும் சில தென்னிந்திய படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார்.

மேலும் படிக்க | இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்கள்! ஓம் to சத்தியவான் சாவித்ரி..முழு லிஸ்ட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema