SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

12 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி, யூடியூப் சேனல்! ஜெயிலர் 2 சிறுவன் இவ்ளோ பெரிய ஆளா..?

ஜெயிலர் 2 திரைப்படத்தில், ரித்விக் எனும் 12 வயது சிறுவன் நடித்திருப்பார். இந்த சிறுவன், தனக்கு சொந்தமாக சாஃப்ட்வேர் கம்பெனி இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 20, 2026, 06:01 PM IST | Updated: Oct 20, 2026, 06:06 PM IST
Join

ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்தின் பேரனாக, சிறுவன் ரித்விக் நடித்திருந்தார். தற்போது இவர் கொடுத்த ஒரு நேர்காணல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் 2 திரைப்படம்:

பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பி வரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சி கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தில் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் 2 திரைப்படத்திலும் அதே கேரக்டரில் வருகிறார். இவரைப்போலவே பிற கதாப்பாத்திரங்களும் அதே கேரக்டர்களில் இரண்டாம் பாகத்தில் தொடர்கின்றன. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டாேர்களுடன் சேர்ந்து, புதிதாக ரித்திக் ரோஷனும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமணம்! 4 குடும்பங்கள் மட்டும் தனி விமானத்தில் கிரீஸ் பயணம்..யார் யார்?

ரஜினியின் பேரனாக நடித்த சிறுவன்..!

ஜெயிலர் படத்தில் பலர் மனங்களில் இடம் பிடித்த சிறுவன்தான், ரித்விக். இவர், இரண்டாம் பாகத்தில் சற்று வளர்ந்து இருக்கிறார். ஜெயிலர் 2வின் வெற்றியை தாெடர்ந்து பலரும் இவரிடம் நேர்காணல் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நேர்காணலில் இவர் சில விஷயங்களை கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரித்விக், படங்களில் நடிக்கும் முன்னர் கொரோனா சமயத்தில், ஒரே ஆளாக அனைத்து கதாப்பாத்திரமாக பல வீடியோக்களில் நடித்து பிரபலமானவர். அதிலும் குறிப்பாக, அவர் மழை சமயத்தில் ரிப்பாேர்ட்டராகவும் செய்தியாளராகவும் நடித்திருந்த வீடியோ அவருக்கு பல்வேறு வாய்ப்புகளை தேடிக்கொடுத்துள்ளது.

சாப்ட்வேர் கம்பெனி வைத்துள்ளாரா?

ரித்விக்கிற்கு தற்போது 12 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே, இச்சிறுவன் மல்டி டாஸ்க் செய்யும் ஆளாக இருக்கிறார். ரித்விக், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார் எனும் தகவலை முதலில் கூறியவர் அவருக்கு தாயாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்த மிர்ணாதான். தற்போது ரித்விக்கிடமே இது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த ரித்விக், தான் சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருப்பது உண்மைதான் என்றும், அதை சும்மா வைத்திருப்பதாகவும் கூறினார். அந்த நிறுவனத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றும், தாங்கள் பைதான் கோடிங் செய்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை கேட்ட பலரும், 12 வயதில் இந்த சிறுவன் இதையெல்லாம் செய்கிறானா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல், ரித்விக் ஒரு யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார்.

நடித்த படங்கள்..

ரித்விக், இதுவரை O2, சர்தார், ஜெயிலர் 800, லக்கி பாஸ்கர், சர்தார் 2, ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு மேலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தேவாவின் சகோதரர் மகன் 37 வயதில் மரணம்..! குடும்பத்தில் தொடரும் சோகம்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES