SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Jailer 2 Vs Om : Ex மாமனாருடன் மோதும் தனுஷ்! யார் படம் ஹிட் ஆகும்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Jailer 2 Vs Om : வரும் தீபாவளிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படமும், தனுஷின் ஓம் திரைப்படமும் வெளியாகப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 09, 2026, 13:02 IST | Updated: Sep 09, 2026, 13:13 IST
Image Credit: Jailer 2 VS Om
Join

Jailer 2 Vs Om : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், ஜெயில் 2. இந்த படம், தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தோடு ஒரே நேரத்தில் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜெயிலர் 2:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், விநாயகம், மிர்னா மேனன, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். முந்தைய படத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். இதில் தமன்னா மற்றும் ஜாக்கி ஷ்ராப்பை தவிர பிற நடிகர்கள் வரும் பாகத்தில் கொளவர தோற்றத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் திரைப்பமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க | டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் : டம்மி விலைக்கு விற்கப்பட்ட ரூ.600 கோடி படம்! கடசியில இப்படி ஆயிருச்சே..

ஓம்:

இந்த ஆண்டில், அதிகம் எதிர்பார்க்கப்பட்டு காத்திருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது, ஓம் திரைப்படம். இந்த படம், தனுஷின் 55வது திரைப்படமாகும். இதனை ’அமரன்’ பட இயக்குநர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார்.

த்ரில்லிங் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட இருவரும் நடிக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரங்களில், மம்மூட்டி, நஸ்ருதீஷ் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இரண்டும் ஒரே சமயத்தில் ரிலீஸ்!

ஜெயிலர் 2 திரைப்படம், முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தில் சில வேலைகள் மிச்சமிருந்ததாலும், ஏற்கனவே எடுத்த காட்சிகள் மீண்டும் ரீ-ஷூட் செய்யப்பட்டதாலும் இந்த ரிலீஸ் அக்டோபர் மாத்திற்கு தள்ளிப்போனது. சமீபத்தில், இப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

‘ஓம்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சத்தமே இல்லாமல் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிக்கும் தருவாயில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் மம்மூட்டியின் கதாப்பாத்திரம் குறித்த வீடியோ ஒன்றினை ‘ஓம்’ படக்குழு வெளியிட்டது. அதில், ஓம் படம் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வெளியாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ex மாமனாருடன் மோதல்..?

அக்டோபர் மாதத்தில்தான், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ச்சியாக பண்டிகைகள் வரும். இந்த சமயத்தில், விடுமுறை என்பதால், படங்கள் இதை குறிவைத்து ரிலீஸ் செய்யப்படுவது உண்டு. ஜெயிலர் 2 படமும், ஓம் படமும் அதை காரணமாக வைத்துதான் அடுத்தடுத்து விடுமுறைக்கு முன்னதாக ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து வாழ முடிவு செய்தனர். இதனால், ரஜினியும் தனுஷுக்கு முன்னாள் மாமனாராக மாறிவிட்டார். என்னதான் குடும்பத்திற்குள் பிரச்சனை என்றாலும், எப்போதும் இப்போதும் ரஜினியின் தீவிர ரசிகராக தொடரும் நடிகர் தனுஷ், தற்போது அவருடன் போட்டிப்போடும் வகையில், அவர் படம் ரிலீஸான மறு நாளே தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்வது குறித்து, சினிமா ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | Bigg Boss 10 : நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட பிளாக் பாண்டி! காரணம் என்ன? மீண்டும் வருவாரா..?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES