Anirudh Kavya Maran Net Worth: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசைப்பாளராக அனிருத் இருக்கிறார். ஜென்சி இளைஞர்கள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரையும் அனிருத் தனது இசையால் கவர்ந்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடங்களை அவர் கொடுத்துள்ளார். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கும் இசையமைத்த நிலையில், ஜெயலிர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.
இதற்கிடையில், நீண்ட நாட்களாகவே அனிருத் குறித்த தனிப்பட்ட விஷயம் சோஷியல் மீடியால் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதாவது, பிரபல சினிமா தயாரிப்பாளரான கலாநிதி மாறனின் மகளும், ஜதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், இருவரின் தரப்பினரின் இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கின்றனர்.
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் ஜெயிலர் 2 திரைப்படத்தை பார்க்க வெற்றி தியேட்டருக்கு அனிருத், காவ்யா மாறன் இருவரும் வந்திருந்தனர். ஆனால், இவருமே தனித்தனியாக இருக்கையில் அமர்ந்து படத்தை கண்டு ரசித்தனர். இந்த நிலையில், காவ்யா மாறன் - அனிருத் காதல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. அதோடு இல்லாமல், அனிருத் - காவ்யா மாறன் இருவரும் நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். நவம்பர் 11ஆம் தேதி கிரிஸ் நாட்டில் அனிருத் - காவ்யா மாறம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இரு குடும்பங்களும் தீவிரமாக செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வரவேற்பு விழா நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நடக்க உள்ளது குறித்து தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதிப்படுத்தினார். முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவருடைய இல்லத்தில் சந்தித்து காவ்யா மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளதை பகிர்ந்து கொண்டார். இதனை அடுத்து, காவ்யா மாறன் - அனிருத் திருமணம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran. The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21. #KalanithiMaran #KavyaMaran
— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026
தமிழகத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றாக காவ்யா மாறன் குடும்பம் இருக்கிறது. அதே நேரத்தில், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் இருக்கிறார். இந்த நிலையில், இரு கோடீஸ்வர குடும்பங்களும் ஒன்று சேர உள்ள நநிலையில், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில், இருவரின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலராக உள்ளது. தொலைக்காட்சி, பத்திரிக்கை, டிடிஎச்,சினமா என பல துறைகளில் மிகப்பெரிய நிறுவனங்களை கலாநிதி மாறன் நடத்தி வருகிறார். இவரின் ஒரே மகள் காவ்யா மாறன். இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது சன் குழுமம் திகழ்கிறது. காவ்யா மாறன் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து, இங்கிலாந்தில் எம்பிஏ பட்டத்தை பெற்றார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளாக தற்போது இருக்கிறார். காவ்யா மாரனின் தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆடம்பர ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளைச் செய்துள்ளார் மற்றும் உயர்தர ஆடம்பர வாகனங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
தென்னிந்தியாவில் முன்னணி இசையசைப்பாளராக அனிருத் இருக்கிறார். நடிகர் ரவி ராகவேந்திரா, பரதநாட்டியக் கலைஞர் லட்சுமி ரவிச்சந்தரின் மகன் அனிருத். கோலிவுட் வட்டாரங்களின்படி, அனிருத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு சென்னையில் சொந்தமாக பல வீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது வருவாயை பல நிறுவனங்களில் முதலீடும் செய்து இருக்கிறார்.