SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

லவ் சொன்னது குத்தமா? பிக்பாஸ் போட்டியாளரை அசிங்கப்படுத்திய பெற்றோர்! மேடையில் சம்பவம்..

Malayalam Bigg Boss : பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரிடம் காதலை சொன்னதன் காரணமாக அவருடைய பெற்றோர் அவரிடம் வீட்டிற்கு வர சொல்லி அழைத்தது மக்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 02, 2026, 10:52 AM IST | Updated: Nov 02, 2026, 11:16 AM IST
Join

இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து மலையாள பிக்பாஸில் நடந்த பரபரப்பான எபிசோட் குறித்துதான் ஊரே பேசி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

மலையாளம் பிக்பாஸ்:

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 8வது சீசனை எட்டி இருக்கிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில், முக்கிய போட்டியாளராக இருக்கிறார், நேஹா பாத்திமா. இந்த பிக்பாஸ் சீசனில் மிக இளம் வயதுடைய போட்டியாளராக இருக்கிறார். இவர், சில நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய சக போட்டியாளரான சந்தோஷ் தாஷி என்பவரிடம் காதலை தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவருடைய பெற்றோரே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து அவரை அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 நிச்சயமாக ரூ.1000 கோடி அடிக்கும்! திருப்பூர் சுப்ரமணியம் உறுதி..

நிகழ்ச்சிக்கு வந்த பெற்றோர்!

நேஹாவை காண, இந்த வார ஞாயிறு எபிசோடில் அவருடைய பெற்றோர் வந்தனர். அவர்கள் இருவரும் நேஹாவிடம் “எங்கை கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா? உன்னை பற்றி எத்தனை வீடியோக்கள் எத்தனை செய்திகள் வருகிறது தெரியுமா?” என்று பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நேஹா துளியும் பயப்படாமல் தைரியமாக பேசினார். மேலும், “நான் என்ன ரோபாேவா? எனக்கென்று உணர்ச்சிகள் இருக்காதா? நான் என்ன தவறு செய்தேன்? காதலை தானே கூறினேன்” என்று எமோஷனலாகி பேசினார். நேஹாவின் பெற்றோர், “உன் உணர்ச்சிகளை அவன் உபயோகித்து கொள்கிறான். முதல் மூன்று வாரம் எப்படி விளையாடினாய்..அப்போ எங்களுக்கு எவ்வளவு நல்ல பெயர் வந்தது தெரியுமா..? இப்போது நீ இதை செய்யவா பிக்பாஸிற்கு வந்தாய்? உன்னை எந்த கேம் விளையாடாதே என்று கூறினோமோ, அந்த கேமைத்தான் விளையாடுகிறாய்” என்று கூறி அவரை திட்டி தீர்த்தனர். நேஹா, தன் பெற்றாேர் பேச்சால் கோபப்பட்டதுடன், தான் காதலித்தது தவறா என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்.

இறுதியில் என்ன ஆனது?

மோகன்லால், நேஹாவின் பெற்றாேர் தன் மகளை பார்க்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்ததால்தான், அவர்களை இப்படி நிகழ்ச்சியில் காட்ட வேண்டியதாக போய் விட்டதாக தெரிவித்தார். மேலும், தான் ஒரு பெண் பிள்ளையை பெற்றவர் என்பதால் பெற்றோரின் வலியை புரிந்து கொள்ள முடிவதாகவும் புரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், நேஹா தொடர்ந்து இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

அரசியலான போட்டி நிகழ்வு..

நேஹாவும், அவர் காதலை தெரிவித்த சந்தோஷும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். அது மட்டுமன்றி, கேரளாவில் 100% படிப்பறிவு இருப்பதாக சொல்லிக்கொள்வதாகவும், ஆனால் வெவ்வேறு மதத்தில் காதல் வந்தால் மட்டும் இப்படி அதை ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இதை ஒரு சேனல் செய்யலாமா என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

மேலும், நேஹா தற்போது போட்டியில் தொடர்வதுடன் தான் இப்போதும் சந்தோஷை விரும்புவதாக கூறியிருக்கிறார். ஆனால் சந்தோஷோ தான் நேஹாவை உபயோகித்து கொண்டதாக அவருடைய பெற்றோர் கூறியதால் அப்செட் ஆகி அப்படியே உட்கார்ந்து கொண்டார். இவர்களின் கேம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கே.என்.நேரு ஊழல் வழக்கில் எனக்கு தொடர்பா? கொதித்தெழுந்த பிரபல நடிகை.. பரபரப்பு அறிக்கை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES