K.N.Nehru Case: திமுக முன்னாள அமைச்சர் கே.என்.நேரு முறைகேடு வழக்கில் சீரியல் நடிகை ஷபானாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த சூழலில், நடிகை ஷபானா தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனக்கு இந்த வழக்கிற்கு எந்தவித சம்மந்தமும் கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
1/6
கே.என்.நேரு முறைகேடு வழக்கு
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்போது, அத்துறையில் 2538 உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்டடோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கல் சின்னத்திரை நடிகைகள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவியது.
2/6
ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக புகார்
சின்னத்திரை நடிகை ஜனனி, ஷபானா ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சுகள் எழுந்தன. இதற்கு ஏற்கனவே நடிகை ஜனனி விளக்கம் அளித்து இருந்தார். அவரை தொடர்ந்து, தற்போது நடிகை ஷபானா கே.என்.நேரு வழக்கு தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, இன்ஸ்டாகிராமில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
3/6
கே.என்.நேரு வழக்கில் சின்னத்திரை நடிகைகளுக்கு தொடர்பா?
நடிகை ஷபானா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்த சில நாட்களா அரசியல்வாதி ஒருவரின் ரூ.634 கோடி முறைகேடு வழக்கில் தனது பெயரும், புகைப்படங்களும் தகவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பு கிடையாது. இருந்தாலும், தனது பெயரை குறிப்பிட்டு பலரும் விளக்கம் கேட்டு வருகின்றனர். குறிப்பாக, தன்னை இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறான மீம்கள், பதிவுகள் பரப்பப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
4/6
முற்றிலும் பொய்யானவை பரப்பப்படுகிறது
தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் மக்களை திசைதிருப்பும் நோக்கில, கொண்டவை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்காகவும், நலம் விரும்பிகளுக்காகவும் இந்த விளக்கத்தைப் பகிர்வதாகக் கூறியுள்ள அவர், தன் சுயமரியாதையை யாரிடமும் கெஞ்சிக் கேட்கப் போவதில்லை என்றும், தன் குடும்பத்திற்கும் தனக்கும் நான் யார் என்பது நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார்.
5/6
நடிகை ஷபானா அடுக்கடுக்கான கேள்வி
இந்த வழக்கில் தன் பெயர் எந்த ஆவணத்தில் உள்ளது, எனக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது, தன் பெயரை முதலில் தவறாக பரப்பியது என நடிகை ஷபாபா பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
6/6
நடிகை ஷபானா வெளியிட்ட அறிக்கை
ஆதாரமற்ற தகவல்களை பரப்பி பணம் சம்பாதிப்பவர்கள், நீங்கள் பரப்பும் இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தால், எந்த அளவுக்கு இதை அகலமாகப் பரப்பினீர்களோ, அதே அளவுக்கு பகிரங்கமாகத் திருத்தம் செய்வீர்களா? என் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க இதே போன்ற முயற்சிகளை எடுப்பீர்களா? அல்லது எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த பிரச்சனையைத் தேடிச் சென்றுவிடுவீர்களா? என பகீரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.