SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

Ramayana Movie OTT Release Update: ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இராமாயணா திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

Written By R Balaji
Published: Nov 27, 2026, 13:03 IST | Updated: Nov 27, 2026, 13:10 IST
Join

நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பிரமாணடமாக உருவாக்கப்பட்ட இராமாயணா திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 05 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர் ராமராகவும், தென்னிந்திய பிரபல நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் யஷ் இராவணனாகவும் நடித்திருக்கிறார்கள்.

இதிகாச கதையாக கருதப்படும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதாலும், சினிமாவின் உச்ச நடிகர்கள் நடித்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகுதியாய் இருந்தன. இதனாலேயே தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் ரிலீஸானது நல்ல வரவேற்பை பெற்றது. வட இந்தியாவில் தீபாவளிக்கு பிறகு வசூலை குவிக்க தொடங்கியது.

21 நாட்கள் வசூல் என்ன?

இந்திய சினிமாவில் ரூ. 1500 கோடி வசூலை தாண்டிய பல சில மட்டுமே. தற்போது அந்த பட்டியலில் இராமாயணம் படமும் இணைந்துள்ளது. இதுவரை சுமார் ரூ. 1755.60 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மட்டும் 1000 கோடியை நெருங்கி உள்ளது. வெளிநாட்டு வசூல் 582 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் உலகளாவிய வசூல் சாதனை இராமாயணா திரைப்படம் தாண்டி உள்ளது. மேலும், இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படங்கள்

  1. தங்கல் - சுமார் ரூ. 2070 கோடி
  2. துரந்தர் 2 - சுமார் ரூ. 1813 கோடி
  3. பாகுபலி 2 - சுமார் 1,788 கோடி
  4. இராமாயணா - 21 நாட்களில் சுமார் ரூ. 1,755 கோடி
  5. புஷ்பா 2 - சுமார் ரூ. 1742 கோடி.

இராமாயணா பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில், இராமாயணா படத்தை தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் மத்தியில் அப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இராமாயணா படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகவில்லை.

இராமாயணா படத்தை பார்க்க வழக்கமான மாத சந்தா போதுமா?

இராமாயணா படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வழக்கமான மாத சந்தாவை கொண்டு பார்க்க முடியாதாம். பே பர் வியூ முறையில் தனியாக பணம் செலுத்தி பார்க்கும் வகையில் தான் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருந்தாலும் இந்த படத்தை பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES