• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

Madurai News: அஸ்வினி வைஷ்ணவோ, அவரது கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்றும்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை என்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

Written BySudharsan G
Published: Nov 27, 2026, 13:34 IST|Updated: Nov 27, 2026, 13:39 IST
joinshare
எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி
Image Credit: Union Minister Ashwini Vaishnav (Left), MP Su Venkatesan (Right) | Image Source: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

2

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

3

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

4

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

5

தமிழகத்திற்குப் புதிய விரைவுச் சாலைகள் இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு – பின்னணி என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai District Latest News: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவுக்கு அருகே அமைந்திருக்கும் கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. திருப்பரங்குன்றம் தற்போது தேசியளவில் கவனம் பெரும் பகுதியாகி உள்ளது.

கார்த்திகை தீபம் திருநாள் அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், தர்ஹா அருகே உள்ள தூணில்தான் நீண்ட காலம் முன்னரே தீபம் ஏற்றியதாகவும், தற்போது அங்கு தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கின்றன.

ஆனால், அந்த கல் தூண் என்பது தீபத்தூண் இல்லை, வெறும் நில அளவைக் கல்தான் என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டு வருகிறது. மேலும், தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதித்தால் தேவையற்ற பதற்றம் உண்டாகும் என்றும் தமிழ்நாடு அரசு வாதிடுகிறது. இந்தச் சூழலில் இந்து அமைப்புகள் - தமிழ்நாடு அரசு இடையே தொடர்ச்சியான சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? மதுரை ஆட்சியரின் 17 பக்க அறிக்கை - ஹைலைட்ஸ்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

உயர் நீதிமன்றம் அந்த கல் தூணில் தீபம் ஏற்ற எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பளித்த நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், கல் தூண் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க 6 வாரக்காலம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இருப்பினும், இந்தாண்டு கார்த்திகை தீபம் (நவ. 24) அன்று மட்டும் ஒரே ஒருமுறை தீபம் ஏற்றலாம் என உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் - இன்று விசாரணை

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கல் தூணில் தீபம் ஏற்றவில்லை. இந்து அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

இந்தச் சூழலில், நேற்று (நவ. 26) சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திருப்பரங்குன்ற தீப விவகாரம் குறித்து பரபரப்பாக பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக, தீபத்தை ஏற்றாததன் மூலம் லட்சக்கணக்கானவர்களின் மனதை தமிழ்நாடு அரசு புண்படுத்தி உள்ளது என்று கூறினார்.

மேலும், இன்று  தீபத்தை ஏற்ற மறுத்து நீங்கள், நாளை கோயிலுக்குள் யாரும் செல்லக்கூடாது என சொல்வீர்களா? இதுதான் மக்களின் விருப்பமா? இதுதான் அரசியலமைப்பு சொன்னதா? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இன்று தீபத்தை தடுத்து நிறுத்துவார்கள், நாளை கோயிலுக்கு போக வேண்டாம் என்று சொல்வார்கள், நாளை கோயிலை பூட்டவும் செய்வார்கள் என்றும் சாடினார்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்றப்படுமா...? உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை

'ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்'

ஒரு தீபம் ஏற்றுவது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது தீபம் ஏற்றுவது எங்கள் நாகரிகத்தில் ஒரு பகுதி என்றும் நாங்கள் கடவுள் முருகப் பெருமானை வழிபடுகிறோம், நீங்கள் ஒரு தீபத்தை தடுத்துவிட்டதாக எண்ண வேண்டாம் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் பேசியிருந்தார்.

மேலும், மதுரையில் புனரமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையம் கோயில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பின் புகைப்படத்தை காட்டி பேசிய அஸ்வினி வைஷ்ணவ், இந்த ரயில் நிலையத்திலேயே நாம் தீபம் ஏற்றலாம் என பேசியிருந்தார்.

அப்போது அரங்கில் இருந்த பாஜகவினர் கைத்தட்டி, ஆரவார ஒலி எழுப்பினர். அதற்கும் அவர்கள் (தமிழக அரசு) தீயணைப்பு வண்டியை அழைத்து வருவார் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்திருந்தார். அவரின் இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

சு. வெங்கடேசன் விமர்சனம்

இந்நிலையில், மதுரை மக்களவை உறுப்பினரும், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சை கடுமையாக விமர்சித்து இன்று அவரது X பக்கத்தில் பதிவட்டுள்ளார்.

“புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்” என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை. #மதுரைரயில்நிலையம் #MaduraiRailwayStation

— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 27, 2026

அதில், "'புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்' என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை" என விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu