Ramayana Twitter Review Tamil : இந்தியாவில் ஒரே கதையை பல பேர் படமாக எடுத்தது எந்த கதை என்றால், அது ‘ராமாயணா’ கதையாகத்தான் இருக்கும். காரணம், 60களில் ஆரம்பித்து இப்போது வரை பல ஹீரோக்கள், பல இயக்குநர்களை வைத்து இந்த கதை எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 2026ஆம் ஆண்டிலும் ரன்பீர் கபூரை ராமனாகவும், யாஷை ராவணனாகவும் வைத்து ராமாயணா படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை நித்தேஷ் திவாரி இயக்கியிருக்கிறார். இப்படம், நவம்பர் 5ஆம் தேதியான இன்று, தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ராமாயணா திரைப்படத்தை தமிழில் பார்த்த ஒருவர், படத்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கிறார். படத்தின் தியேட்டர் அனுபவம் ரொம்பவே நன்றாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். படத்தின் முதல் 30 நிமிடத்திற்கு ஃபயர் விட்டிருக்கும் இவர், க்ராஃபிக்ஸ் மற்றும் டப்பிங்கிற்கும் நல்ல மார்க் வழங்கியிருக்கிறார்.
#Ramayana (Tamil) 4/5 What an effort from the team👍 Theatrical experience at its peak .. First 30 mints is 🔥🔥🔥 with an awesome @TheNameIsYash as Ravana .. The making & lip sync is commendable and the graphics are top class. Def a one time watch 👍 #RanbirKapoor @Sai_Pallavi92
— sridevi sreedhar (@sridevisreedhar) November 4, 2026
படத்தை ஒருமுறை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராமாயணா படத்தை பார்த்த ஒருவர், ஆரம்பத்தில் இது வில்லனின் கதையில் இருந்து ஆரம்பிப்பதாகவும், படத்தின் திரைக்கதையை சரியாக எழுதியிருக்கின்றனர் என்றும் கூறியிருக்கிற்றார். ஹான்ஸ் சிம்மரின் இசை, படத்தின் கிராஃபிக்ஸை பாராட்டியிருக்கும் அவர், சூர்பனகையாக வரும் கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
More thoughts on #Ramayana The backstory portions of Raavana works so well. The establishment of how he becomes immortal and the stories that go with it are quite fresh. I think this is intentional from the creators and the highlight of the movie
— Dhee 🏒 (@Dheepuck) November 5, 2026
ராவணனின் கதையை விரிவாக காண்பித்திருப்பதாக கூறும் இந்த ரசிகர், படம் இதனால்தான் சர்வதேச தரத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ராமாயணா திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹேன்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இவர்கள், படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றிருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். அவர்களின் இசையால், அய்யோத்தியாவிற்கே சென்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
⭐ 4/5 #Ramayana is a visual spectacle that blends grandeur, emotion and cutting-edge AI technology. Watched the Tamil-dubbed version, and the lip-sync technology is remarkably impressive! Yash absolutely dominates the film with his commanding screen presence, while Ranbir Kapoor delivers a subtle yet effective performance. Sai Pallavi adds her own charm and grace. Rahman sir enna panirkeeeengaa , Hans zimmer and ARR has taken the soundscape to next level ... Made us to actually transport to ayodhya , lanka and lot more ancient trance zone My only concern is the 195-minute runtime. A tighter screenplay with a more seamless narrative flow could have made this experience even more extraordinary. Part 2 awaits and what's gonna be given in there ... Let's wait Nevertheless, a timeless epic brought to life beautifully! ❤️🙏 4000 crs worth it ... Do experience in theatre and let me know #Ramayana #Yash #RanbirKapoor #SaiPallavi #NamitMalhotra
— VJ Santhosh aka LavyyBoii (@VJSanthosh02) November 4, 2026
படத்தின் 195 நிமிடங்கள் இருப்பது கொஞ்சம் கடுப்பாக இருப்பதாக கூறியிருக்கும் அந்த ரசிகர், இன்னும் இதனை கொஞ்சம் சுருக்கி இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
“ராமாயணம் என்பது உணர்ச்சிகள் எனும் பொன்நூல்களால் பின்னப்பட்ட ஒரு பிரம்மாண்டம். அதில் கம்பீரம் குறையாத ஒரு காட்சி கூட இல்லை. ஏறக்குறைய ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் ஒரு செழுமையை உணர்வீர்கள். இத்தகைய காட்சிகள் இந்தியத் திரையுலகில் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராதவை” என்று ஒரு ரசிகர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் நித்தேஷ் திவாரி, ஒரு அற்புதமான படத்தை எடுத்திருப்பதாகவும், வனவாசம் செல்லும் காட்சி வரும் போது தன்னால் அசையவே முடியவில்லை என்றும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, “ரன்பீர்கபூர் உங்களுக்கு என் வணக்கங்கள், நீங்கள் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த நடிகர், இனிவரும் யுகங்களுக்கு மக்கள் உங்களை ராமர் என்றே நினைவில் வைத்திருப்பார்கள், ராமர் கதாபாத்திரத்திற்கு நீங்கள் அளித்த நியாயம் அபாரமானது, உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன, சண்டைக் காட்சிகள், ஆளுமையை வளர்த்தல், கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், வசன உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கங்கள், பரசுராமர் காட்சியில் உங்களை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. உங்கள் நடிப்பைப் பற்றி ஒரு கட்டுரையே எழுத முடியும்” என்று கூறியிருக்கிறார்.
#RamayanaReview : ⭐️⭐️⭐️⭐️⭐️ : A MAGNUM OPUS MARVEL FOR AGES. Ramayana is a SPECTACLE embroidered with GOLDEN THREADS of EMOTIONS, There is not a single sequence which does not look GRAND, You’ll feel Richness in almost every frame, The Visuals are NEVER SEEN BEFORE in INDIAN CINEMA. Director @niteshtiwari22 has created a MARVELLOUS CINEMA, I got numbed during Vanvaas Sequence, then again on Climax during Jatayu scene, The Overwhelming Emotions and Character Setup, The way he has drawn Parallels is UNMATCHED. Kudos to @malhotra_namit for investing in this subject, DNEG HAS COOKED, Jungles are even better than Avatar at some points, The Particle effects, CG design of Jungle Monsters, Brahma and Vishnu, 14K Fight was literall PEAK, The Palaces, Underwater scenes, Universe, Hell, Mountains, Never seen before visuals. #RanbirKapoor Take a Bow, You are Greatest Actor of this Generation, People will remember you as Lord Ram for ages to come, The way you did justice to character of Lord Ram is Remarkable, The Emotions were overflowing, The Action Blocks, Aura Farming, Restrained Emotions, Dialogue Delivery, Modulations, I was not able to recognise you during Parshuram Sequence. I can write a whole essay on your performance. #Yash has given a Remarkable and Spectacular performance as Ravana, You’ll see YASH THE ACTOR this time, He has nailed the action blocks and All the different looks, The Jatayu Fight is Spectacular. #SaiPallavi is Grace, The way she has portrayed emotions, This is literally the best Character Arc of Mata Sita I’ve ever seen. She is carrying an Innocence, Divinity with her throughout. @raviedubey Take a Bow, The most apt portrayal of Lakshman ever on screen, The Chaotic essence, One liners, Innocent expression and Yes Dialogue Delivery, Nailed everything to Perfection. @arungovil12 has given an emotional performance as Dashrath, He will make you numbed, He will make you cry during Vanvas scene. Kunal Kapoor, Lara Dutta, Sheeba Chadha, Rakul Preet Singh, Vivek Oberoi, Shobhana, Chetan Hansraj did their parts well, all of them did praiseworthy work. The Soul of Ramayana is Music of Hans Zimmer and AR Rahman, Oscar worthy music, Oscar worthy stuff, They are called Greatest of All time for a reason. Go and Watch the movie in the Biggest Screen Possible, It’s ONCE IN A LIFETIME EXPERIENCE. @WorldOfRamayana
— KBP Reviews🏹 (@KshitizCritic) November 5, 2026
தொடர்ந்து, “ராவணனாக யாஷ் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த முறை நீங்கள் நடிகர் யாஷைப் பார்ப்பீர்கள். அவர் சண்டைக் காட்சிகளையும், அனைத்து விதமான தோற்றங்களையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். ஜடாயு சண்டை பிரமாதமாக உள்ளது. சாய் பல்லவி ஒரு பேரழகி. அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம், நான் இதுவரை பார்த்ததிலேயே சீதை அம்மையாரின் மிகச் சிறந்த கதாபாத்திர வளர்ச்சி இதுதான். அவர் படம் முழுவதும் ஒரு அப்பாவித்தனத்தையும், தெய்வீகத்தையும் தன்னுடன் கொண்டு செல்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.