SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இறுதி சடங்குகளில் இளையராஜா ஏன் கலந்து கொள்வதில்லை? அவரே சொன்ன காரணம்!

தமிழ் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர், இளையராஜா. இவர், சமீபத்தில் தான் என் இறுதி சடங்குகளில் கலந்து காெள்வதில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 30, 2026, 01:50 PM IST | Updated: Oct 30, 2026, 01:55 PM IST
Join

இசையுலகின் அரசான இருக்கும் இளையராஜாவை கேப் கிடைக்கும் போதெல்லாம் திட்டித்தீர்க்க எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டம், அடிக்கடி விமர்சிக்கும் ஒரு விஷயம், “இளையராஜா ஏன் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதில்லை” என்பதுதான். இதற்கு, இளையராஜாவே விளக்கம் அளித்துள்ளார்.

இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளாத இளையராஜா!

இந்த 2026ல் மட்டும் பல்வேறு முக்கிய திரை பிரபலங்களை தமிழ் திரையுலகம் இழந்து விட்டது. அதிலும் குறிப்பாக, எஸ்.ஜானகி, தேவா, சமீபத்தில் கிட்டார் கலைஞர் சதானந்தம் உள்ளிட்ட பலர் உயிரிழந்து விட்டனர். இவர்கள் அனைவரும், தமிழ் திரையுலகை தாண்டி இந்திய இசையுலகிலேயே பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களாக இருந்தவர்கள். இவர்கள், இசைஞானி இளையராஜாவுக்கும் நெருக்கமானவர்கள்.

இவர்களின் இறப்பின் போது, இசையமைப்பாளர் இளையராஜா, இரங்கல் பதிவை வெளியிட்டு, அவர்களுடனான நட்பு குறித்து பேசி, வீடியோ வெளியிட்டாாரே தவிர, அந்த இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. தேவாவின் மறைவின் போது, தன்னுடைய ஸ்டுடியோ பணிகளை ஒரு நாள் தள்ளி வைத்தார் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் செய்த அவர், ஏன் இறுதி சடங்குகிற்கு மட்டும் வருவதில்லை எனும் கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது.

மேலும் படிக்க | காவ்யா மாறன் - அனிருத் திருமண அழைப்பிதழின் விலை! அடேங்கப்பா இவ்ளோ அதிகமா?

இளையராஜா விளக்கம்!

இளையராஜா, சமீபத்தில் தன்னுடன் நீண்ட நாட்களாக வேலை பார்த்த இசைக்கலைஞர் சதானந்தம் அவர்களின் இறப்பு செய்தியை கேட்டு துக்கமடைவதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்போது கூடவே, “காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுடன் கலந்தவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவருடை இந்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துக்கம் கூட தெரிவிக்காத ஒருத்தர்..

இளையராஜா மட்டுமல்ல, திரையுலகில் இன்னொரு பிரபலம் ஒருவர் இருக்கிறார். அவர், பாக்யராஜ், பாரதிராஜா என இருவரும் இறந்த போது, அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே அறிக்கையாக வெளியிட்டார். மேலும், அவர் நடித்த படங்களிலேயே, ஹிட் பாடல்கள் நிறைய அமைந்தது தேவாவின் இசையில்தான். கிட்டத்தட்ட அவருடைய 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். அப்படிப்பட்டவர் இறப்பிற்கு கூட, அந்த நடிகர் ஒரு இரங்கல் செய்தியோ அல்லது இறுதி மரியாதையோ செலுத்த வரவில்லை. தன் பின்னால் ரசிகர்கள் சுத்தினால், “டீசண்டா இருங்க” என்று கூறும் அவர், தான் டீசண்டாக நடந்து கொள்கிறாரா என்பது குறித்து சற்று சிந்திக்க வேண்டும். அவருடைய ரசிகர்கள் என்னதான் ஆதரவு தெரிவித்தாலும், “எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ..” என்று அவர்களுக்கும் சில நேரம் அவர் செய்யும் சில விஷயங்கள் அலுத்து போகத்தான் செய்கிறது. அப்படிப்பட்டவரை போட்டு அடிக்காமல், இப்படி வயதான காலத்திலும் தனக்கு பிடித்த இசையை உயிர் மூச்சுபோல இழுத்து பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவை மட்டும் இத்தனை குறை சொல்வது ஏன் என தெரியவில்லை.

மேலும் படிக்க | ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மரணம்! அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவில் முக்கிய கேரக்டராக இருப்பவர்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES