SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சர்தார் 2 படம் எப்படி? முதல் பாகம் அளவிற்கு இருக்கா? ரசிகர்களின் X விமர்சனம்!

Sardar 2 X Review : கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் இன்று வெளியாகி இருப்பதை அடுத்து இந்த படத்தின் விமர்சனம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 10, 2026, 13:09 IST | Updated: Sep 10, 2026, 13:25 IST
Image Credit: Sardar 2 | X Page
Join

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன. அப்படி ரிலீஸ் ஆகும் படங்களுள் முக்கிய திரைப்படம்தான், சர்தார் 2.

சர்தார் 2 :

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம்தான், சர்தார் 2. இதன் முதல் பாகம் 2022ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் தொடர்ச்சியாக, அடுத்த பாகம் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் ஆஷிகா ரங்கனாதன், மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருப்பதை அடுத்து அதன் விமர்சனங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

லாஜிக்கே இல்லை!

சர்தார் 2 திரைப்படம் பார்த்த பல பேர், படத்தில் லாஜிக்கே இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஒரு ரசிகர், படம் சிறந்த பொழுதுபோக்காக இருப்பதாக கூறியிருப்பதோடு, ஒரு சில இடங்களில் படம் இழுவையாக இருப்பதாகவும், படத்தில் லாஜிக் இல்லை என்றும், பார்க்க தகுந்த படம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | 43 வயதிலும்..சிங்கிளாக இருப்பது ஏன்? ‘பொல்லாதவன்’ ரம்யா சொன்ன நச் பதில்!

இன்னொருவர், படத்தில்  பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், முழுக்க முழுக்க எண்டர்டெயினிங் ஆக இருந்ததாக கூறியிருக்கின்றார்.

இன்னொருவர், படத்தில் லாஜிக் இல்லை என்றாலும், படம் முழுக்க எங்கேஜிங் ஆக இருப்பதாக கூறியிருக்கிறார்.

படமா இது?

ஒருவர் “Go Back Sardar" என்றே கூறியிருக்கிறார். 3 மணி நேரம் தன்னை இந்த படம் சோதித்ததாக கூறியிருக்கிறார்.

முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக விமர்சனம்!

ஒரு சிலர், இந்த படத்தை முதல் பாகத்தை விட நல்ல படம் என்று கூறியிருக்கிறார்.

படத்தில் இருக்கும் மெசேஜ்!

ஒருவர், சர்தார் 2 படத்தில் இருக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், ”இப்படத்தின் கருப்பொருளும் அது சொல்லும் செய்தியும் பாராட்டத்தக்கவை. 'ஆன்டிபயாடிக் எதிர்ப்புத் திறன்' (antibiotic resistance) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற படக்குழுவினருக்குப் பாராட்டுகள். இருப்பினும், படத்தை உருவாக்கும் மற்றும் காட்சிப்படுத்தும் விதத்தில், விறுவிறுப்பான திரைக்கதையை வழங்குவதில் இப்படம் தவறிவிட்டது. தொடர்ச்சியான சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் மட்டுமே ஒரு படத்தை ஈர்க்கக்கூடியதாக மாற்றிவிடாது. கதாபாத்திரங்கள் யாரையாவது துரத்துவதிலோ அல்லது தொழில்நுட்பச் சொற்களைப் பற்றி விவாதிப்பதிலோ மட்டுமே மும்முரமாக இருப்பதால், பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் வாய்ப்பு இதில் குறைவாகவே உள்ளது” என கூறியிருக்கிறார்.

எல்லாமே கார்த்திதான்!

சர்தார் 2 படத்தை பார்த்த ஒருவர், படத்தில் ஆர்ட் வொர்க் நன்றாக இருப்பதாகவும், கார்த்திதான் தன் தோளில், சுமப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இரண்டாம் பாதி மோசம்..

ஒரு ரசிகர், படத்தின் இரண்டாம் பாதி மொத்தமாக மிஸ்ஃபயர் ஆகியிருப்பதாகவும், இதில் பி.எஸ்.மித்ரன் டச்சை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

படத்தில் தரவுகள் குறித்த டைலாக்குகளை குறைத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார் ஒரு ரசிகர்.

மேலும் படிக்க | போலீஸாக மாஸ் காட்டும் சூர்யா..47வது படத்தின் டைட்டில் ‘சீன்’! வெளியான டீசர்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES