SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘சிக்மா’ படம் எப்படியிருக்கு? ரசிகர்கள் கருத்துகள் என்ன? X விமர்சனம்..

தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் படம்தான், சிக்மா. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 02, 2026, 11:17 AM IST | Updated: Oct 02, 2026, 12:03 PM IST
Join

புதிய இயக்குநரும், முதல்வரின் மகனுமான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான், சிக்மா. இந்த படத்தை லைகா சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இந்த படம் குறித்து ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

சிக்மா திரைப்படம்:

ஜேசன் சஞ்சய் முதன்முதலாக இயக்கியிருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

எல்லாமே சூப்பர்!

 ஒரு ரசிகர், ‘சிக்மா’ திரைப்படத்தில் எல்லாமே சூப்பராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், படத்தில் நிறைய திருப்பங்கள் இருப்பதாகவும், படத்தில் இடைவேளை இருக்கும் காட்சி நல்ல ஆக்‌ஷன் நிறைந்ததாக இருக்கிறது என்றும், முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் முதிர்ச்சி தெரிவிதாகவும் கூறியிருக்கிறார்.

நல்ல கதாப்பாத்திரங்கள்..

அதே ரசிகர், இன்னொரு டிவீட்டையும் வெளியிட்டிருக்கிறார். அதில், சந்தீப் கிஷன் நன்றாக நகைச்சுவை செய்திருப்பதாகவும், படத்தில் கதாப்பாத்திரங்கள் நன்றாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விஜய்க்காக பார்க்க வந்தேன்..

ஒரு ரசிகர், தன்னை படத்தின் ட்ரெயிலர் பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை என்றும், விஜய்க்காக பார்க்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதே போல, முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் நன்றாக இருப்பதாகவும், படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக்கிற்கு ஒரு ஸ்பெஷல் மென்ஷன் என்றும் தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | ரஜினிகாந்த் திருமண மண்டபம் இடிக்கப்படுகிறதா? மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்!

முதல் பாதி ஓகே..

ஒரு ரசிகர், படத்தின் முதல் பாதி Okayish என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அறிமுகம் செய்ய 40 நிமிடங்கள் ஆகிறது என்றும், அது கொஞ்சம் நீளமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக படம் த்ரில்லராக மாறுவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநராக ஜேசன் சஞ்சய் படத்தை நன்றாக எடுத்திருப்பதாகவும், இன்னும் கொஞ்சம் திரைக்கதையையும் கதையையும் நன்றாக எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். சந்தீப் கிஷன் நன்றாக தன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், படம் ஒரு கொள்ளை கடத்தலை நோக்கி நகர்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நம்பிக்கைக்குரிய இயக்குநர்..

 சிக்மா படத்தின் முதல் பாதியை பார்த்த ஒருவர், முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் நம்பிக்கைகுரிய இயக்குநராக மாறி இருப்பதாகவும், படத்தின் டெக்னிக்க வேலைகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெங்கட் பிரபு ஸ்டைடில் இந்த கடத்தல் த்ரில்லர் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இப்போது வரை படம் போர் அடிக்காமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES