• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

சிக்மா திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பிரபல நடிகை ஜோதிகா படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கும், ஹீரோ சந்தீப் கிஷனிற்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 01, 2026, 06:20 PM IST|Updated: Oct 01, 2026, 06:28 PM IST
joinshare
‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?
Image Credit: Jyothika Wishes Jason Sanjay | X Pages

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜோதிகா வாழ்த்து:

ஜோதிகா, ஜேசன் சஞ்சய்க்கும் சந்தீப் கிஷனுக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அதில், ”SIGMA-விற்காக என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் விளம்பரங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன். முதிர்ச்சியும் நிதானமும் இயல்பான தன்மையும் கொண்ட ஒரு இளைஞராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பெற்றோரைப் போற்றும் மிகச் சிறந்த மகனாகவும் நீங்கள் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது, ​​உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் வெற்றிக்கு நீங்கள் முழுத் தகுதியுடையவர் என்பது தெளிவாகிறது. உங்களுக்கும் உங்கள் ஒட்டுமொத்தக் குழுவிற்கும் இப்படம் ஒரு சிறப்பான வெளியீடாக அமைய வாழ்த்துகிறேன். இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பாராக” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிக்மா குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு!

ஜேசன் சஞ்சய படத்தை பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், “’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.

அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களை முன்னின்று வழிநடத்திய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி. என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகிய இருவருக்கும் நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | பிக்பாஸ் வரலாற்றில்..பணப்பெட்டியுடன் வெளியேறி அதிர்ச்சி காெடுத்த போட்டியாளர்கள்!

தொடர்ந்து, “எந்தவொரு இயக்குநருக்கும், குறிப்பாக அறிமுக இயக்குநருக்கு அவரது சிந்தனையுடன் ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்த் அவர்களுடன் பணியாற்றியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் சிக்மா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோல், எங்கள் படத்தின் எடிட்டராக அனுபவமும் புரிதலும் கொண்ட பிரவீன் கே.எல். அமைந்ததும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்டும் திரைப்படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது.

ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. குறிப்பாக, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. எங்களது ஆக்‌ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.  படத்தின் மையக் கதைக்களத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும், சுவாரஸ்யத்தையும் சேர்த்துள்ளனர். திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களையும் சென்றடையும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம். ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும், பணிவுடனும், அக்டோபர் 2 ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு, எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. ’சிக்மா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்த் திருமண மண்டபம் இடிக்கப்படுகிறதா? மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema