அனிருத்துக்கு திருமணம்..Love Failure-ல் பிரபல பாடகி? ஒரு பாட்டால் எழுந்த சர்ச்சை!
இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத்திற்கு, விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சமயத்தில், அவருடன் பயணித்த பிரபல பாடகி ஒருவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஒரு பாடலை வைத்து அவர் காதல் தோல்வியில் இருப்பதாக நெட்டிசன்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ‘ராக் ஸ்டார்’ இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவருக்கும், காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், இவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்த பிரபல பாடகி ஒருவர், இந்த செய்தியால் செம அப்செட்டில் இருப்பதாக நெட்டிசன்கள் சரச்சையை கிளப்பி வருகின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அனிருத்-காவ்யா மாறன் திருமணம்!
இசையமைப்பாளர் அனிருத், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு 3 திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கிய அவர், தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் பயணித்து, வருகிறார். இவருக்கும், தொழிலதிபரும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் காதல் என பல நாட்களாக பேசி வந்தனர். இந்த சமயத்தில், இவர்களின் திருமணம், வரும் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வரவவேற்பு வந்ததில் இருந்து, பலரும் அனிருத்துடன் சேர்த்து முன்னர் பேசப்பட்ட ஒரு பாடகி குறித்து பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
அனிருத்-ஜாேனிடா காந்தி:
அனிருத், பல பாடல்களை பாடகி ஜாேனிடா காந்தியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். ஜொனிடா காந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர், ஜொனிடா காந்தி.
ஓகே கண்மனி திரைப்படத்தில் வரும் ‘மெண்டல் மனதில்’ பாடலை பாடி, தமிழில் பிரபலமான இவர், கூடவே இண்டோ-வெஸ்டர்ன் கலந்த பல தமிழ் பாடல்களை பாடி பிரபலமானவர்.
குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘செல்லம்மா’ பாடலை பாடியிருந்தார். அந்த சமயத்தில் இப்பாடலின் மியூசிக் வீடியோ வெளியானது. ஒரு பக்கம் அனிருத் ஒரு பக்கம் ஜொனிடா இருவரும் ஆடுவதை பார்த்த ரசிகர்கள், ஜோடி பொருத்தம் சூப்பராக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்தனர்.
இதற்கு பின்னர் அனிருத் இசையில் அரபிக்குத்து, ப்ரைவேட் பார்டி உள்ளிட்ட பல பாடல்களை பாடினார். இதனால் இவர்களுக்குள் காதல் இருப்பதாக பலரும் பேசி வந்தனர். ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள காவ்யா மாறன்-அனிருத்தின் திருமணம் இவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து வந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
லவ் ஃபெயிலிரயல் இருக்கிறாரா?
ஜோனிடா, அனிருத்-காவ்யாவின் திருமண அறிவிப்பு வெளியான போது தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தார். அதில், ட்யூட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘விட்டுப்போன வாசலிலே..வாழ்க்க தீர காத்திருக்கேன்’ எனும் பாடலை இணைத்திருந்தார். இதனை ஜோனிடா காந்திதான் பாடியிருந்தார். இது ஒரு காதல் தோல்வி பாடலாகும். இந்த பாடலை அவர் இன்ஸ்டாவில் இணைத்ததற்கு அவர் காதல் தோல்வியில் இருப்பது காரணமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ட்யூட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆகி இருக்கிறது. இதனால், அதன் நினைவாக இந்த பாடலை இணைத்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். அந்த ஒரு பாடலை வைத்து, இன்வெஸ்டிகேட் செய்ய வேண்டாம் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அனிருத்-காவ்யாவிற்கு நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கடுத்து 21ஆம் தேதி, இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடக்க இருக்கிறது. இதில் முதல்வர் விஜய் உள்பட பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ