• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /சர்தார் 2 டூ மண்டாடி : செப்டம்பர் மாதம் வெளியாகும் டாப் 7 படங்கள்! முழு லிஸ்ட்..

சர்தார் 2 டூ மண்டாடி : செப்டம்பர் மாதம் வெளியாகும் டாப் 7 படங்கள்! முழு லிஸ்ட்..

September Films: வரும் செப்டம்பர் மாதம், பல தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த முழு லிஸ்டை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 30, 2026, 16:52 IST|Updated: Aug 30, 2026, 17:04 IST
joinshare
சர்தார் 2 டூ மண்டாடி : செப்டம்பர் மாதம் வெளியாகும் டாப் 7 படங்கள்! முழு லிஸ்ட்..
Image Credit: September Films | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

September Films: எப்போதும் புது மாதம் பிறந்தாலே, அந்த மாதத்தில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்த மாதம் எந்தெந்த திரைப்படங்கள் அதிகமாக வெளி வருகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஐ ஆம் கேம்:

துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதயா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம், ஐ ஆம் கேம். இந்த திரைப்படம் இந்த மாதமே வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மலையாள த்ரில்லர் படம், ஆக்‌ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகிறது.

தி பேரடைஸ்:

ஸ்ரீகாந்த் ஓடெல்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், தி பேரடைஸ். இந்த படத்தில், நானி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், செப்டம்பர் 24ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதில் வந்த ‘ஆயாஷேர்’ பாடல் ஏற்கனவே இணையத்தில் பல நூறு மில்லியன்களை தாண்டியிருக்கிறது.

டொரோத்தி:

ரிஷிகாந்த், சனாத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம், டொரோத்தி. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம், வரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

மண்டாடி:

சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம், மண்டாடி. இந்த படத்தை எல்ரெட் குமார் இயக்கியிருக்கிறார். இதில் மகிமா நம்பியார், கிரிஷ் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தமிழில் உருவாகி வரும் இந்த படம், ஆக்‌ஷன் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரி கபடி வீரராகவும் மீனவராகவும் நடித்திருக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மீசைய முறுக்கு 2:

ஹிப் ஹாப் ஆதி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், மீசைய முறுக்கு 2. இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சைத்ரா, ரம்யா ரங்கநாதன், யோகி பாபு உள்ளிடோர் நடித்துள்ளனர். இப்படம் அதன் முதல் பாகம் போலவே இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

டிமாண்டி காலனி 3:

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், டிமாண்டி காலனி 3. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கிறார். ஹாரர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், தமிழில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னர் ரிலீஸான இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் 2:

கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம், சர்தார் 2. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கார்த்தி தந்தை-மகன் என இரு வேறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படம், வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema