• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /டாக்ஸிக் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி : எம்ஜிஆர், ரஜினி, விஜய் குறித்து பேசிய நடிகர் யாஷ்!

டாக்ஸிக் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி : எம்ஜிஆர், ரஜினி, விஜய் குறித்து பேசிய நடிகர் யாஷ்!

டாக்ஸிக் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் யாஷ், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜய் என பலர் குறித்தும் பேசினார்.

Written ByYuvashree M
Published: Aug 25, 2026, 15:12 IST|Updated: Aug 25, 2026, 15:18 IST
joinshare
டாக்ஸிக் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி : எம்ஜிஆர், ரஜினி, விஜய் குறித்து பேசிய நடிகர் யாஷ்!
Image Credit: Yash | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு  அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது. யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.

விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள், படத்தின் உலகம் மற்றும் தமிழ் ரசிகர்களுடனான தங்களது எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் யாஷ் பேசியதாவது ..,

“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.

நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும் அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன் மூலம் யாஷின் ரசிகர் வட்டத்தை தாண்டி, இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema