SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

6 வருடங்களுக்கு பின் வெளியாகும் ‘சண்டக்காரி’ படம்? விமல்-ஸ்ரேயாவின் ரோம்-காம்

ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம், சண்டக்காரி. இந்த படத்தை ஆர். மாதேஷ் இயக்கியுள்ளார். இதனை கீதா தயாரித்துள்ளார்.

Written By Yuvashree M
Published: Sep 05, 2026, 16:10 IST | Updated: Sep 05, 2026, 16:23 IST
Image Credit: Sandakkari | X Page
Join

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கதை என்ன?

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா  மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

யாரெல்லாம் நடித்துள்ளனர்?

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!

விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

6 வருடங்களுக்கு பிறகு!

இந்த படம் உருவாகி கிட்டத்தட்ட 5-6 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் இருந்த இந்த படம், தற்போது விரைவில் வெளியாகப்போவதாக தகவல் வெளியாகி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் படிக்க | Fact Check : அமைச்சர் ராஜ்மோகனுக்கு மரியாதை செலுத்தாத ரம்யா கிருஷ்ணன்? நடந்தது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES