பெண்ணை கொன்று சாக்குப்பையில் அடைத்த லிவ்-இன் பார்ட்னர்: ஹைதராபாதில் திகில் சம்பவம்
Hyderabad Crime News: தனது லிவ்-இன் பார்ட்னரால் பெண் கொல்லப்பட்ட செம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
Hyderabad Crime News: ஹைதராபாத்தில், திருமணம் தொடர்பான தகராறு காரணமாக 23 வயதுடைய பெண் ஒருவர் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஆணால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கொலைக்குப் பிறகு, உடலை அப்புறப்படுத்தும் முயற்சியாகக் குற்றவாளி அதை ஒரு சாக்குப்பையில் அடைத்து வைத்தாகக் காவல்துறையினர் திங்களன்று தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் கொடூரம்
தனது லிவ்-இன் பார்ட்னரால் பெண் கொல்லப்பட்ட செம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிவதாகவும், தற்போது அந்தக் குற்றவாளி தலைமறைவாக உள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரைப் பிடிக்கக் காவல் துறை பல குழுக்களை அமைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு நடந்தது என்ன?
முதற்கட்ட விசாரணையின்படி, பீகாரைச் சேர்ந்த அப்பெண், குற்றவாளியுடன் சுமார் ஓராண்டாக உறவில் இருந்து வந்ததோடு, கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | கோவிலில் திடீர் கூட்டநெரிசல்: 7 பேர் உயிரிழப்பு - பீகாரில் நடந்தது என்ன?
ஞாயிற்றுக்கிழமை இரவு, அப்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு குற்றவாளியிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
திருமணம் தொடர்பான இந்த கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், குற்றவாளி அப்பெண்ணைக் கத்தியால் தாக்கியுள்ளார்.
பாலாபூர் காவல்துறையினரின் தகவலின்படி, அவசர அழைப்பு ஒன்று வந்ததையடுத்து இன்று அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
"இந்த தாக்குதலில் பெண் இறந்துவிட்டார். பின்னர் அந்த நபர் பெண்ணின் இரு கைகளையும் கால்களையும் கட்டி, உடலை அப்புறப்படுத்த அதை ஒரு சாக்குப்பையில் வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
சாக்குப்பையில் பெண் உடல்
சாக்குப்பையைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறைக் குழுக்கள், சாக்குப்பைக்குள் அப்பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்தன. அறையின் உள்ளேயும் ரத்தக் கறைகள் காணப்பட்டன.
காவல்துறையினர் அப்பெண்ணின் அடையாளத்தை உறுதிசெய்து, பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
"இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், படுக்கையறை ஒன்றில் சாக்குப்பைக்குள் சடலம் ஒன்று இருப்பதாகத் தெரிவிக்கும் 'டயல் 100' (Dial 100) அவசர அழைப்பு எங்களுக்கு வந்தது. எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். உயிரிழந்தவர் பீகாரைச் சேர்ந்த 21 வயதான ரெஹானா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அகமது சலாம்; அவருக்கும் வயது 21," என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கொலை வழக்கு பதிவு செய்த ஹைதராபாத் போலீஸ்
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளியைக் கண்டறியும் பணியில் காவல் துறைக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தவும், குற்றத்தை மறைப்பதில், குற்றவாளியின் தாய், நண்பர்கள் அல்லது வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | ஏர்போர்டில் பயணி திடீர் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் காயம்.. வாரணாசியில் நடந்தது என்ன?