Karnataka Forest Shooting : கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் பகுதியில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயம் பகுதியில் மான் வேட்டையாடியதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அதிகாலையில் மூன்று பேர் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் ராமபுரா அருகே ஹனூரில் வனத்துறையின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
ஏற்கெனவே, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில், தற்போது மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அரசியல் ரீதியாகவும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன என்பதை விரிவாக இங்கு காணலாம்.
இவர்கள் மூன்று பேரும் ஹனூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள்தான்.
உயிரிழந்தவர்களுடன் வந்த மகிமைதாஸ் (45) என்பவர் காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (ANI செய்தி முகமை அடிப்படையிலான தகவல்)
இதன் அடிப்படையில் ஹனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கை (FIR) கொல்லேகலாவில் உள்ள கூடுதல் உரிமையியல் நீதிபதி மற்றும் JMFC நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகளை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Kodagu, Karnataka: On three alleged poachers killed in shootout in Chamarajanagar, Chief Minister DK Shivakumar says, "Not everything can be told to everyone. I also received the information in the morning. The forest department officials came and gave me the first han
— IANS (@ians_india) August 16, 2026
மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்" என தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை: குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச்…— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 16, 2026
அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, முதலமைச்சர் விஜய் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி முறையான விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆளுங்கட்சி என்பதால் முதல்வர் விஜய் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.