• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained: 5 வாரத்தில்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரைந்த வழக்கறிஞர் - யார் தெரியுமா?

Explained: 5 வாரத்தில்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரைந்த வழக்கறிஞர் - யார் தெரியுமா?

Independence Day Explained: நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கோடு என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எல்லைக் கோட்டை வரைந்தவர்கள் யார் என்றும், இந்தியாவுக்கே ஒருமுறை கூட வராத ஒருவர் எப்படி வரைந்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Written ByUmabarkavi K
Published: Aug 14, 2026, 06:59 PM IST|Updated: Aug 21, 2026, 04:31 PM IST
joinshare
Explained: 5 வாரத்தில்.. இந்தியா - பாகிஸ்தான் எல்லையை வரைந்த வழக்கறிஞர் - யார் தெரியுமா?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Independence Day Explained: இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை நாளை, ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. 1947ஆம் ஆண்டு இதே நாளில் பல நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  இந்த பிரிவினை மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வையும், வன்முறையையும் ஏற்படுத்திய துயரமான வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

இந்து முஸ்லீம் இடையே கலவரத்தை ஏற்படுத்தியது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக உருவான நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை தான் இன்று வரை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த எல்லையை வரையறுக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான், சர் சிரில் ராட்கிளிஃப்.

யார் இந்த சர் சிரில் ராட்க்ளிஃப்?

சர் சிரில் ராட்க்ளிஃப் ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞர். இவர் 1899ஆம் ஆண்டு வேல்ஸில் (UK) பிறந்தார். இவர் ஆக்ஸ்போர்ட்டில் தனது கல்வியை முடித்தார். பின்னர், லண்டனில் வழக்கறிஞராக பணியாற்றினார்.  இரண்டாம் உலகப் போரின் போது, ​​அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் முக்கியமான நிர்வாகப் பதவிகளில் பணியாற்றினார்.

  இவருக்கு தான், இந்தியா பாகிஸ்தான் எல்லை கோட்டை வரைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 1947ஆம் ஆண்டுக்கு முன்பு, ராட்க்ளிஃப் இந்தியாவிற்கு ஒருபோதும் வருகை தந்ததில்லை. இவர் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றாசிரியரோ, புவியியலாளரோ, அதன் மதங்கள் மற்றும் மொழிகளின் அறிஞரோ அல்ல. 

இருப்பினும், பிரிட்டிஷ் அரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்க எல்லை கோட்டை வரையும் பொறுப்பை அவருக்கு வழங்கியது.  இந்தியாவுக்கு இவருக்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாததால், அவரை நடுநிலையாளராக கருதி, இந்தியா பாகிஸ்தான் எல்லையை வரைய பிரிட்டிஷ் அரசு நியமித்தது.

எல்லை தீர்மானிக்கும் ஆணையம்

1947-ஆம் ஆண்டளவில், பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விரைவாக வெளியேற முடிவு செய்திருந்தனர். கடைசி வைஸ்ராயான லார்ட் மவுண்ட்பேட்டன், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரம் கைமாற்றப்படும் என்று அறிவித்தார். இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளுக்கு பிரியும் என முடிவு செய்யப்பட்ட போதிலும், இருநாடுகளின் எல்லைகள் முடிவு செய்யப்படாமல் இருந்தன. மேற்கில் பஞ்சாப், கிழக்கில் வங்காளம் ஆகிய இரண்டு மாகாணங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. இதனால், எல்லை கோட்டை  முடிவு செய்ய குழப்பங்கள் நீடித்தது.

இதை தீர்மானிக்க பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகியவற்றுக்காக தனித்தனியாக இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆணையங்களுக்கு ராட்க்ளிஃப் தலைமை தாங்கினார். ஒவ்வொரு ஆணையத்திலும் தலா 4 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.  இவர்களின் பாதி பேர் காங்கிரஸாலும், மீதிப் பாதி பேர் முஸ்லிம் லீகாலும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்போதெல்லாம், இறுதி முடிவு திறம்பட அவரிடமே இருக்கும்.

5 வாரங்களில் வரைந்தார்

1947 ஜூலை 8 அன்று ராட்க்ளிஃப் இந்தியா வந்தடைந்தார். இந்தியா பாகிஸ்தான் எல்லை கோட்டை வரைய ராட்க்ளிஃப்புக்கு ஐந்து வாரங்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஐந்து வாரங்களில் அவர் மக்கள்தொகை கணக்கெடுப்பு, மாவட்ட எல்லைகள், கால்வாய் அமைப்புகள்,  பாதைகள், நிர்வாக இணைப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், அரசியல் தலைவர்களிடம் விசாரணையை நடத்தினார். இந்தியா பாகிஸ்தான் பிரநிதிகளின் வாதங்களை கேட்டறிந்தார்.

சுதந்திரத்திற்கு பின்னரே வெளியானது

பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உருவானது. இந்தியா 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திரம் பெற்றது. இந்தியா பாகிஸ்தான் எல்லை கோட்டை ஆகஸ்ட் 17ஆம் தேதி ராட்கிளிஃப் வெளியிட்டார்.  இருநாடுகளும் பிரிந்த பிறகு தான், எல்லை கோடு தீர்மானிக்கப்பட்டு, வரையப்பட்டது. இந்த எல்லை வரையறைக்கு பிறகு, கலவரங்கள் வெடித்தன.  சொந்த ஊருக்கு வீடும் எந்த நாடுகளுக்குள் வருகிறது என்றே தெரியாமல் மக்கள் திகைத்தனர்.

மக்கள் இந்தியா, பாகிஸ்தான் என இடம்பெயர்ந்தனர். வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வு நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் பூர்வீக வீடுகளையும், சொத்துகளையும் அப்படியே விட்டுவிட்டு, புதிய எல்லைகளை நோக்கி சென்றனர்.  இந்த அவசர பிரிவினையால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த இடப்பெயர்வின்போது பயங்கரமான மதக்கலவரங்களும் உயிர் சேதமும் நிகழ்ந்தன. இந்த பிரிவினைக்கு பிறகு ஏற்பட்ட வன்முறைகளையும் துயரங்களையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பிரிட்டிஷ் அரசு இதற்கு வழங்கிய எந்தவொரு கௌரவத்தையோ அல்லது பணத்தையோ ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாராம்.

80 ஆண்டுகளுக்கு பிறகும் தொடரும் பிரச்னை

1947ஆம் ஆண்டு வரையப்பட்ட எல்லை, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எதிர்கால உறவுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையிலான நீண்டகால மோதலுக்கு முக்கிய காரணமாக மாறியது. 1947 பிரிவினையால் உருவான அரசியல் மற்றும் பிராந்திய சிக்கல்கள் பின்னர் இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் நீடித்த பிரச்னைகளா மாறின. இந்த கோடு தான், பல தசாப்த காலப் பதற்றத்திற்கு தொடக்கமாக அமைந்தது.

ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடும் நாள் மட்டுமல்ல. அந்த சுதந்திரம் எத்தகைய வரலாற்றுச் சூழலில் கிடைத்தது என்பதை நினைவுகூரும் நாளும்கூட. ஒருபுறம் இந்தியா சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சி; மறுபுறம் பிரிவினையால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள் மற்றும்  பிரிவுகள் என 1947 பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய ஆண்டாக இருந்தது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Independence Day
Explainer