• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?

14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?

Criminal Cases Against Chief Ministers: இந்தியாவில் மொத்தமுள்ள முதலமைச்சர்களில் எத்தனை பேர் மீது, எவ்வளவு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்த தகவலை மூத்த வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 19, 2026, 08:44 AM IST|Updated: Aug 19, 2026, 09:08 AM IST
joinshare
14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?
Image Credit: Criminal Cases In Chief Ministers | Image Source : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Criminal Cases Against Chief Ministers: மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள், ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளை சுதந்திர இந்தியா பார்த்திருக்கிறது. இதில் முதலமைச்சர்களும் விதிவிலக்கல்ல. பல ஊழல் வழக்குகளில் முதலமைச்சர்கள் கைதாகி சிறைக்கும் சென்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின்போது, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்கள் மீதான கிரிமீனல் வழக்குகள்

மொத்தமுள்ள 28 மாநிலங்களில், 14 மாநில முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி எந்தெந்த முதலமைச்சர்களின் மீது எவ்வளவு கிரிமீனல் வழக்குகளும் உள்ளன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். அவை கீழ்வருமாறு:

முதலமைச்சர் பெயர் மாநிலம்கட்சிவழக்குகளின் எண்ணிக்கை
ரேவந்த் ரெட்டிதெலங்கானா காங்கிரஸ் 89 குற்ற வழக்குகள்
சுவேந்து அதிகாரி மேற்கு வங்கம் பாஜக 29 குற்ற வழக்குகள்
டி.கே.சிவக்குமார் கர்நாடகா காங்கிரஸ் 19 குற்ற வழக்குகள்
ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் JMM5 குற்ற வழக்குகள்
தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராபாஜக4 குற்ற வழக்குகள்
சுக்விந்தர் சிங் ஹிமாச்சல்காங்கிரஸ்4 குற்ற வழக்குகள்
ஜோசப் விஜய் தமிழ்நாடுதவெக 2 குற்ற வழக்குகள்
சாம்ராட் சௌத்ரி பீகார் பாஜக 2 குற்ற வழக்குகள்
பிரேம் சிங் தமாங் சிக்கிம்  SKM1 குற்ற வழக்கு
பகவந்த் மாண் சிங் பஞ்சாப் ஆம் ஆத்மி 1 குற்ற வழக்கு
மோகன் சரண் மாஞ்சி ஓடிசா பாஜக 1 குற்ற வழக்கு
பஜன் லால் சர்மா ராஜஸ்தான் பாஜக 1 குற்ற வழக்கு

எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்

நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள் மீதும் அதிகப்படியான குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருக்கும் 290 எம்எல்ஏக்களில் 170 பேர் (58%) மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன.

அதேபோல், கேரளாவில் 57%, ஆந்திராவில் 56%, தெலங்கானா 49%, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் தலா 45%, பீகார் 42%, மகாராஷ்டிரா 40% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகள்

மக்களவை உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள்

மக்களவை உறுப்பினர்கள் சார்ந்த தரவுகளும் உள்ளன. மொத்தம் இருக்கும் 543 மக்களவை உறுப்பினர்களில் 170 எம்.பி.க்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது 31% பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

தெலங்கானாவின் 17 எம்பிக்களில் 11 பேர் மீதும், கேரளாவில் 21 எம்பிக்களில் 11 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. பீகாரில் 40 எம்பிக்களில் 19 பேர் மீதும்; உத்தர பிரதேசத்தின் 80 எம்பிக்களில் 34 பேர் மீதும்; மகாராஷ்டிரா 48 எம்பிக்களில் 17 பேர் மீதும்; மேற்கு வங்கம் 42 எம்பிக்களில் 16 பேர் மீதும்; ஆந்திராவின் 25 எம்.பி.க்களில் 9 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

நிலுவையில் உள்ள வழக்குகள்

2026ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி இன்னாள்/முன்னாள் எம்பி., எம்எல்ஏக்கள் மீது மட்டும் 4,192 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்தான் 1,171 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா தாக்கல் செய்த 96 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களில்...

மாநிலங்களவையை பொருத்தவரை 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள் என்பது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை வழங்கக்கூடிய தீவிர குற்ற வழக்குகளாகும். இவை வழக்கறிஞர் சினேகா கலிதா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
India