• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /மம்தாவுக்கு நெருக்கமான... TMC மூத்த தலைவர் உயிரிழப்பு - கட்சி ஆபிஸில் கிடந்த உடலால் பரபரப்பு

மம்தாவுக்கு நெருக்கமான... TMC மூத்த தலைவர் உயிரிழப்பு - கட்சி ஆபிஸில் கிடந்த உடலால் பரபரப்பு

Ashish Banerjee Found Dead: மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜியின் உடல் கட்சி அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written BySudharsan G
Published: Aug 16, 2026, 11:13 AM IST|Updated: Aug 16, 2026, 11:18 AM IST
joinshare
மம்தாவுக்கு நெருக்கமான... TMC மூத்த தலைவர் உயிரிழப்பு - கட்சி ஆபிஸில் கிடந்த உடலால் பரபரப்பு
Image Credit: Ashish Banerjee, Mamta Banerjee | Image Source : Facebook/AshishBanerjee

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ashish Banerjee Found Dead: மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்மும் மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) கண்டெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, ஆஷிஷ் மிக நெருக்கமானவர்.

தொடர்ந்து 5 முறை எம்எல்ஏ

ஆஷிஷ் பானர்ஜி முன்னாள் அமைச்சரும் ஆவார். ராம்பூர்ஹாட் தொகுதியில் ஐந்து முறை தொடர்ச்சியாக எம்எல்ஏவாக இருந்தவர், ஆஷிஷ் பானர்ஜி. இவர் 2001ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டுவரை இந்த தொகுதியில் ஐந்து முறை அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வேட்பாளரிடம் ஆஷிஷ் பானர்ஜி தோல்வியடைந்தார்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்பு

ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில்தான் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று கூட உள்ளூரில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒன்றில் கலந்துகொண்டு, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.

#WATCH | West Bengal | Former Deputy Speaker and TMC former MLA from Rampurhat, Asish Bandyopadhyay, was found dead by hanging himself in his party office.

Visuals from Rampurhat Medical College in Birbhum pic.twitter.com/d1aYUsFOhs

— ANI (@ANI) August 16, 2026

கைப்பற்றப்பட்ட குறிப்பு

இவரது உடலை கைப்பற்றி போது அத்துடன் தற்கொலை குறிப்பு என கூறப்படும் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் எவ்வித ஊழலிலும் தான் ஈடுபட்டதில்லை என்றும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அந்த குறிப்பில் அவர் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது வாழ்வில் எந்த பிரச்னைக்கும், எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)

ஊழல் குற்றச்சாட்டு

தாராபீத் ராம்பூர்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தில் (TRDA) ஆஷிஷ் பானர்ஜி பதவி வகித்த காலத்தில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுகுறித்தே அவர் அதில் குறிப்பிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அவர் உயிரிழந்ததன் காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவரது உடல் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Add Zee News as a Preferred Source
TAGS:
India