• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /3 தமிழர்கள் பலி: தமிழகம் தலையிடக்கூடாது; உங்கள் வேலையை பாருங்கள் - டி.கே. சிவக்குமார்

3 தமிழர்கள் பலி: தமிழகம் தலையிடக்கூடாது; உங்கள் வேலையை பாருங்கள் - டி.கே. சிவக்குமார்

DK Shivakumar : கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் உயிரிழந்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Aug 18, 2026, 01:25 PM IST|Updated: Aug 18, 2026, 01:34 PM IST
joinshare
3 தமிழர்கள் பலி: தமிழகம் தலையிடக்கூடாது; உங்கள் வேலையை பாருங்கள் - டி.கே. சிவக்குமார்
Image Credit: Karnataka CM DK Shivakumar | Image Source : X/@ANI

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

3 Tamils Killed In Karnataka, DK Shivakumar : கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் ஹனூர் வட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தரப்பில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

மான் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டதாகவும், அதை தடுக்கச் சென்றபோது தாக்குதல் நடத்தியதற்கு தற்காப்புக்காக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளார்.

இன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கர்நாடகாவின் விசாரணையில் சந்தேகம்

கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், "வாழ்வாதாரத்திற்காக புலம் பெயர்ந்து சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். தங்களின் மாடுகளை தேடி சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஏற்றுக்கொல்ள முடியாது.

ஆனால் இந்த சம்பவம் தற்காப்புக்காக நடைபெற்ற சம்பவம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார். என்கவுண்டர் நடந்த இடத்தில் விலை ஸ்டிக்கர்களுடன் புதிய பாரகன் செருப்புகள் கைப்பற்றப்பட்டன.

ரூ. 1 கோடி நிவாரணம் கோரிக்கை

எனவே அங்கு நடந்தது உண்மையான என்கவுண்டரா என்ற சந்தேகம் எழுகிறது.  இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மட்டும்தான் உரிய நீதி கிடைக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

அமைச்சரின் பதில்

இத்தீர்மானத்தின் மீது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய். தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் குரலாக முதலமைச்சர் விஜய்யின் குரல் ஓங்கி ஒலிக்கும்" என அரசு தரப்பில் பதிலளித்தார்.

டி.கே. சிவக்குமார் சொன்ன மேட்டர்?

இந்நிலையில், தமிழ்நாடு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், "மாநிலங்களுக்கு தங்களின் சொந்த பிரச்னைகள் உண்டு. ஓ.பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இநத் அடிப்படை புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்னைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

#WATCH | Bengaluru: On statements by Tamil Nadu leaders regarding the Chamarajanagar shootout, Karnataka Chief Minister DK Shivakumar says, "No state should interfere with another state's administration. States have their own problems. They should also know that we know how to… pic.twitter.com/QJsyNdtPwu

— ANI (@ANI) August 18, 2026

அவர்கள் அவர்களின் பணியைச் செய்யட்டும். எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம். எந்த மாநிலமும் மற்ற மாநில நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் நாங்கள் பார்த்து கொள்வோம்" என தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா - தமிழ்நாடு இடையே ஏற்கெனவே பல பிரச்னைகள் நிலவுகிறது. காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் தற்போது மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
India