Uttarakhand Tunnel Accident : உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நீர்மின் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்தில் சேறும், நீரும் அதிவேகத்தில் புகுந்தது. இதனால், அதில் உள்ளே இருந்த 7 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சுரங்கத்தில் இரண்டு பேர் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டியில் உள்ள டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) இந்த சுரங்கத்தில் மொத்தம் 22 பேர் பணிபுரிந்து கொண்டிருந்ததாகவும், திடீரென சேறுடன் கலந்த நீர் உள்ள பாய்ந்தது என்றும் நீரோட்டம் வேகமாக இருந்ததன் காரணமாக, அவர்களில் பலரை தண்ணீரே சுரங்கத்தின் வெளியேறும் பாதை நோக்கி அடித்துச் சென்றது என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Chamoli, Uttarakhand: Rescue operation underway after debris and water entered the under-construction tunnel of Tehri Hydro Development Corporation Limited (THDC) at Pipalkoti.
Team commander, NDRF, Amrit Lal Meena, says, "When our team arrived and commenced operations,… pic.twitter.com/WjNTlEoQtE— ANI (@ANI) August 13, 2026
மாவட்ட ஆட்சித் தலைவர் கௌரவ் குமார் கூறுகையில், " (வியாழக்கிழமை - ஆகஸ்ட் 13) மாலை 6.30 மணிக்கு குறிப்பிடத்தக்க அளவிலான சேறும் நீரும், பணிகள் நடைபெற்று வந்த சுரங்கத்திற்குள் அடித்துக்கொண்டு வந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) சமோலி மாவட்டத்தில் உள்ள நிதி பள்ளத்தாக்குப் பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், ஆற்றின் வேகமும் உயர்ந்தது.
இதனால், ஆற்றுப் பாலமே அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போது, சேறு கலந்து பெருமளவு நீர் கீழ்நோக்கி பாய்ந்து அந்த உலோக பாலத்தின் மீது மோதியது. சில நொடிகளிலேயே நீரினாலும் சகதியாலும் பாலம் அடியோடு பிடுங்கப்பட்டது, அது ஆற்றங்கரையை நோக்கி தள்ளப்பட்டது.
आपदा परिचालन केंद्र, देहरादून पहुंचकर मायापुर (पीपलकोटी) स्थित टीएचडीसी की निर्माणाधीन टनल में चल रहे रेस्क्यू ऑपरेशन की प्रगति की जानकारी ली और अधिकारियों को आवश्यक दिशा-निर्देश दिए।
टनल में फंसे 22 श्रमिकों में से अब तक 16 श्रमिकों को सुरक्षित बाहर निकाल लिया गया है। शेष… pic.twitter.com/4QZ8I8lHSB— Pushkar Singh Dhami (@pushkardhami) August 13, 2026
இந்நிலையில், சுரங்கத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி போர் கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த தொழிலாளர்களிடம் பேசினேன். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள் காயமடைந்து இங்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்களிடமும் பேசி உள்ளேன்.
சுரங்கத்திற்குள் இன்னும் சிக்கியிருக்கும் இரண்டு பேரை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை படை (NDRF), தேசிய பேரிடர் மேலாண்மை படை (SDRF) ஆகியவை பணியாற்றி வருகின்றன.