• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained: சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி? 1947 ஆகஸ்ட் 15 எங்கு இருந்தார்?

Explained: சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி? 1947 ஆகஸ்ட் 15 எங்கு இருந்தார்?

Independence Day: 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை அனைவரும் கொண்டாடிய நிலையில், காந்தி மட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை. ஏன் இவர் கொண்டாடவில்லை? அன்றைய நாள் எங்கு இருந்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக அறியலாம்.

Written ByUmabarkavi K
Published: Aug 13, 2026, 10:01 PM IST|Updated: Aug 21, 2026, 04:31 PM IST
joinshare
Explained: சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி? 1947 ஆகஸ்ட் 15 எங்கு இருந்தார்?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Independence Day 2026: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, நீண்ட கால விடுதலைப் போராட்டத்திற்கு பிறகு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர்.  

மகாத்மா காந்தி

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை தவிர்த்து, அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடியவர்.  1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம், 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல்வேறு போராட்டங்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தியவர் மகாத்மா காந்தி. 

'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கம் விடுதலைப் போராட்டததில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இப்படியாக இந்தியாவுக்கு சுதந்திர கிடைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த காந்தி, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்த நாளை கொண்டாடாமல் இருந்தார். மகாத்மா காந்தி ஏன் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை.

நாட்டின் தலைநகரான டெல்லி, சுதந்திரப் போராட்டத்திற்காகவும் அதிகாரப் பரிமாற்றத்திற்காகவும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதும், இந்தியர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தபோதும், சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காந்தி எங்கே இருந்தார் என்ற கேள்வி எழுகிறது. 'தேசத்தின் தந்தை' எனப் போற்றப்படும் காந்தி, சுதந்திர தினத்தன்று அவர் எங்கே இருந்தார் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

இந்து முஸ்லீம் கலவரம்

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பது என முடிவு செய்த பிறகும், இந்தியாவை இரண்டாக பிரிப்பது என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். தேசப்பிரிவினை என்பது நாட்டின் சகிப்புத்தன்மையையும், பன்முகத்தன்மையையும் சீர்குலைத்துவிடும் என மகாத்மா காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

காந்தி அச்சப்பட்டது போலவே  நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்துகள் அதிகம் வசிக்கும் பகுதி இந்தியாவுக்கும் எனவும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி பாகிஸ்தானுக்கும் என காங்கிரஸ் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டது.

ஆனால், தேசப்பிரிவினையால் நாடு முழுவதும் அச்சம் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, புதிய இடத்திற்கு குடிபெயர்ந்தனர். சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாபிலும், வங்கத்திலும் கலவரங்கள் தீவிரம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஏராளமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக மாறினர். தனி நாடு கோரி முஸ்லீம் லீக் விடுத்த அழைப்பால் கல்கத்தாவில் இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சுதந்திர தினத்தை கொண்டாடாத காந்தி

இந்து முஸ்லீம் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக காந்தி கல்கத்தாவில் இருந்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை லாகூரில் இருந்து கல்கத்தாவுக்கு புறப்பட்டார். 1947 ஆகஸ்ட் 9 அன்று கல்கத்தா சென்றடைந்தார்.

கல்கத்தாவில் இந்து முஸ்லீம் வன்முறை தொடர்ந்த நிலையில், கல்கத்தா முஸ்லிம் லீக்கின் தலைவர் முகமது உஸ்மான் தலைமையிலான இஸ்லாமியர்கள் குழு காந்தியை சந்தித்து, கல்கத்தாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இங்கேயே சில நாட்கள் தங்க வேண்டும் என காந்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட, காந்தி கல்கத்தாவிலேயே தங்கிய காந்தி, பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய அவர், "ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக நான் டெல்லி செல்லவில்லை. இந்த துயரங்களுக்கு மத்தியில் உங்களுக்கு இருக்க விரும்புகிறேன். கல்கத்தா அமைதியாக இருந்தால், அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அற்புத பாடமாக இருக்கும். இது கொண்டாட்டத்திற்கான தினமாக இருக்கலாம்.

ஆனால், இது எனக்கு சோகமான தினம். சுதந்திரம் வந்துவிட்டது. ஆனால், ரத்தக்கறைகளுடன் வந்திருக்கிறது. இந்த ரத்தக்கறையை அன்பாலும், ஒற்றுமையாலும் துடைத்து ஏறிவோம் என உறுதி ஏற்போம்" என்று கூறினார். இந்து முஸ்லீம் கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற, ஐந்தே மாதங்களில் அதே காரணத்திற்காக உயிரையே தியாகம் செய்தார்.

முதல் சுதந்திர தினத்தில் டெல்லியில் நடந்தது என்ன?

கல்கத்தா நவகாளியில் தொடங்கிய மதக்கலவரம் கட்டுப்படுத்த அங்கு சென்ற காந்தி, டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பங்கேற் மாட்டேன் என சொல்லிவிட்டார். இது டெல்லியில் நேருவுக்கு மனம் கனத்து போனது. 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றைய நாள் டெல்லியே கோலாகலமாக இருந்தது.  

ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947ம் ஆண்டு மாலையில் அரசு அலுவலகங்களில் பிரிட்டிஷ் கொடிகள் இறக்கப்பட்டு, நள்ளிரவு அறிவிப்புக்கு பின், இந்திய கொடி ஏற்றப்பட்டது. முதல் சுதந்திர தினவிழாவில் நேரு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல் சுதந்திர தினத்தன்று பிரதமர் நேருவின் பேச்சு உலக அரசியல் வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்துள்ளது.

  • பல வருடங்களுக்கு முன்னர் நாம் விதியை குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் இப்போது வந்து விட்டது.
  • உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்தரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது.
  • இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து, மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
  • ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இந்தப் புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
  • ஏழ்மை, அறியாமை, நோய் மற்றும் வாய்ப்புகளற்ற தன்மையை ஒழிப்பதே நாட்டின் முதன்மைக் குறிக்கோள் என்று தொடங்கிய அந்த உரை 15 நிமிடங்களுக்கு நீண்டது.

இப்படியாக டெல்லியில் முதல் சுதந்திர தினம் காந்தி இல்லாமலேயே கொண்டாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Independence Day
Explainer