SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நவம்பர் 13..என்னது இன்று உலகம் அழியுமா? பகீர் கிளப்பிய ஆய்வாளர்கள்..என்ன விஷயம்?

நவம்பர் 13ஆம் தேதியான இன்று, உலகம் அழியப்போவதாக 1960ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வில் உலகம் அதிக மக்கள் தொகையை எட்டும் எனவும், இது Doomsday வாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 13, 2026, 01:01 PM IST | Updated: Nov 13, 2026, 01:08 PM IST
Image Credit: Doomsday November13th | X Page
Join

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வறிக்கையில், வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி, நவம்பர் 2026ஆம் ஆண்டின் இந்த நாளை 'Doomsday' என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இதோ விவரம்!

அறிவியல் ஆய்வறிக்கை!

நவம்பர் 4ஆம் தேதி, 1960ஆம் ஆண்டு Journal Science எனும் அறிவியல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதனை Heinz Von Foerster மற்றும் Patricia M.Mora மற்றும் லாரன்ஸ் W.Amiot என்பவர்கள் சேர்ந்து எழுதியுள்ளனர். இந்த அறிக்கைக்கு Doomsday : Friday, November 13, A.D.2026 என பெயரிடப்பட்டுள்ளது.

இதை எழுதிய எழுத்தாளர்கள், 400 BC முதல் 1958ஆம் ஆண்டு வரை இருந்த மக்கள் தொகையை கணக்கிட்டு எழுதி இருந்தனார். இதனால், இந்த மக்கள் தொகை இரு மடங்காக உயர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர். இதை பின் தொடர்ந்து அவர்கள் ஒரு கணித சூத்திரத்தை (Formula) எழுதியிருந்தனர்.

இதை வைத்து பார்க்கும் போது, 2025ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 25 பில்லியனை எட்டும் என்றும், 2026ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை Infinity-ஐ எட்டும் எனவும் அதாவது முடிவிலியை எட்டும் என்றும் குறிபிட்டிருந்தனர்.

என்ன அழிவு வரும்?

இந்த ஆய்வறிக்கை குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, அந்த ஆய்வறிக்கையில் எரிகல் பூமியை தாக்குவது குறித்தோ, போர் குறித்தோ, ஏதேனும் இயற்ற்கை பேரிடர் குறித்தோ குறிப்பிடவில்லையாம். இதற்கு மாறாக, கணிதத்தை வைத்து ஒரு கணிப்பின் அடிப்படையில் இவர்கள் எந்த ரிசல்ட வருமோ அதை வைத்து எழுதி இருக்கின்றனர்.

அந்த ஆய்வறிகையில், “நமது கொள்ளுப் பேரக்குழந்தைகள் பட்டினியால் சாக மாட்டார்கள். அவர்கள் நெரிசலில் சிக்கி இறந்துவிடுவார்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்? Explained

நவம்பர் 13 என்று இந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. இதுதான் இந்த ஆய்வை எழுதியவர்களுள் ஒருவரான  Foresterஇன் 115ஆவது பிறந்தநாள் கூட.

இந்த கணிப்பு வெளியான போது, பெரும் சர்ச்சையை கிளப்பியதாம். வரலாற்று கணிப்பாளரான Alan MacEachern, இதை அதிகம் பேர் விவாதித்ததாகவும் பல அரசியல் பேச்சுகளிலும் இந்த கணிப்புகள் இடம் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

பலிக்கவில்லை..

பல ஆண்டுகளுக்கு முன்பாக வைக்கப்பட்ட இந்த கணிப்பு, பலிக்கவில்லை. 30 வருடங்களுக்கு இதை பற்றி பேசிய மக்கள், 1993ஆம் ஆண்டு குறித்து இதில் எழுதப்பட்டிருந்த கணிப்பு ஒத்துப்போகவில்லை என்பதை புரிந்து கொண்டனர்.

இப்போது ஐநா சபை உலக மக்கள் தொகையை 8.2 பில்லியன் என நிர்ணயித்துள்ளது. இது, Infinity நம்பர் கிடையாது என்பதும் நமக்கு தெளிவாக தெரியும். அந்த கணித கணிப்புகளின் படி, 2025ஆம் ஆண்டிற்குள் 131 பில்லியன் மக்கள் தொகை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

1960ஆம் ஆண்டில் மக்கள் தொகை அதிகரித்து வந்ததால், இப்படி ஒரு அறிக்கை வெளியாகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல, இந்த ஆய்வறிக்கைக்கு பின் எந்த அறிவியல் காரணமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முடங்கிய மைக்ரோசாப்ட்: அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் சேவைகள் பாதிப்பு!! யாருக்கெல்லாம் பிரச்சனை?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES