SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2100-க்குள் மனிதகுலமே அழியும்.. 17 பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்.. விஞ்ஞானிகள் பகீர்

Humanity 2100 Survival Warning: 2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலத்தை அழியும் என்றும் மனிதகுலத்தையே அழிக்கக் கூடிய 17 பேரழிவுகளை உலக நாடுகள் சந்திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 12, 2026, 01:41 PM IST | Updated: Oct 12, 2026, 02:02 PM IST
Join

Humanity 2100 Survival Warning:  உலக நாடுகள் தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. வறட்சி, வெள்ளம், நிலநடுக்கம், உணவு பஞ்சம் போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இப்படியாக சென்றால், அடுத்த 70 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி நம்மிடையே ஏற்படுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? உலகமே இருக்குமா? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

2100க்கும் உலகம் அழியுமா?

இப்படியாக நிலையில், 2100-ஆம் ஆண்டுக்குள் மனிதகுலமே அழியும் என்றும் 17 பேராபத்துக்குள் நடக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  அடுத்த 75 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய 17 அச்சுறுத்தல்கள் இருக்கும என லான்செட் (Lancet) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதப் போர், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், சர்வதேச உதவிகளின் ஏற்படும் குறைப்புகள், குறைந்த கல்வித் தரம், பெருந்தொற்றுகள், மோசமான மனநலம், புகைப்பிடித்தல் போன்ற 17 பேரழிவுகள் ஏற்படக் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகமே அழிந்துவிடும் என்ற அர்த்தம் கிடையாது. அப்படியாகவும் ஆய்வறிக்கையில் சொல்லவில்லை.  

இந்த ஆபத்துக்கள் அதிகரிக்காமல், உல க நாடுகள் தடுக்க வேண்டும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அப்படி ஒரு நிலை வராமல், உலக நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதேல லான்சேன் ஆய்வறிக்கை கூறுகிறது. லான்சன் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 பேரழிவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

14 பேராபத்துகள் என்னென்ன?

  1. செயற்கை நுண்ணறிவு - செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டால், அது உயிரியல் ஆயுதங்கள் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்துகளை உருவாக்கக் கூடும். இது மனிதகுலத்தின் அழிவிற்கே வழிவகுக்கும்  அளவுக்கு ஆபத்தானது என் எச்சரிக்கப்படுகிறது.
  2. அணு ஆயுதப் போர் - அணு ஆயுத மோதல்கள் ஏற்படக் கூடும் என்றும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, உலக நாடுகளில் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்பு உணவு பஞ்சத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், போரில் ஈடுபடாத நாடுகளும் கடுமையாக விளைவுகளை சந்திக்க நேரிடும்.
  3. காலநிலை மாற்றம் - பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்றத்தால் மனிதர்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். இது உணவுப் பற்றாக்குறையை உருவாக்குவதுடன், மக்கள் தங்கள் வாழும் இடத்தை விட்டு இடம்பெயரும் சூழலையும் தீவிரப்படுத்துகிறது.
  4. காற்று மாசுபாடு - காற்று மாசுபாட்டால் சுவாச நோய்கள், இளவயது மரணங்கள் அதிகரிக்கலாம். குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழும் மக்களும், ஏழை, எளிய மக்களும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
  5. ஊட்டசத்து குறைபாடு - குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படும் என்றும் இதனால் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சியை பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.  உடல்நலம் மனித வளர்ச்சியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  6. போர்கள் - உலக நாடுகளில் நடக்கும் போர்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம். மக்கள் இடம்பெயர்வு நடக்கும். சுகாதார உள்கட்டமைப்புகளை அழிக்கலாம். அதே நேரத்தில், உணவு, நீர், மருந்து  தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புள்ளது.
  7. நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் - நாம் தேவையின்றி அல்லது சரியாக மருந்துச் சீட்டைப் பின்பற்றாமல் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும்போது, கிருமிகள் அந்த மருந்துகளுக்குப் பழகி, தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதனால் சாதாரண காய்ச்சல், இருமல், காயம் மற்றும் சிறுநீரகத் தொற்றுகள் கூட குணமாவதில் சிக்கல் ஏற்படும். மேலும், சாதாரண அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவச் சிகிச்சைகளின் போது ஏற்படும் தொற்றுகளைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகவும், ஆபத்தானதாகவும் மாறிவிடும்.
  8. சுகாதாரத்திற்கான வளர்ச்சி உதவி குறைதல் - சர்வதேச அளவில் சுகாதாரத்திற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுவது, ஏழை நாடுகளின் மருத்துவக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தலாம். இதனால் அத்தியாவசிய மருத்துவத் திட்டங்கள் முடங்குவதோடு, தொற்றுநோய் பரவலை எதிர்கொள்ளும் திறனை ஏழை நாடுகள் இழக்க நேரிடுகிறது.
  9. மது அருந்துவது - மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரல் பிரச்னைகள், புற்றுநோயக்ள், இதய நோய்கள் போன்ற பல ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தும்.
  10. உயர் ரத்த அழுத்தம் - உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் (Stroke), மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் மற்றும் அகால மரணம் (இளவயது மரணம்) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  11. வருமான சமநிலையின்மை - வருமானம் சமநிலையின்மை இருப்பதால், ஊட்டச்சத்து, கல்வி  மருத்துவச் சேவைகளில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இது மக்களின் ஆயுட்காலத்தையே மாற்றுகின்றன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எளிதில் உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகும் சூழல் அதிகம் உருவாகிறது.  
  12. குறைந்த கல்வித்தகுதி - கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுவது மக்களின் விழிப்புணர்வையும், வேலைவாய்ப்பையும் மற்றும் மருத்துவச் சேவைகளைப் பெறும் வசதியையும் பாதிக்கிறது. இதனால் எளிதில் தடுக்கக்கூடிய நோய்களும், முன்கூட்டிய மரணங்களும் அதிகரிக்கின்றன.
  13. தொற்றுநோய்கள் - கொரோனா தொற்று போன்று, புதிதாக உருவாகும் தொற்று நோய்கள் உலக நாடுகளில் பரவி மருத்துவ கட்டமைப்புகளை முடக்குவததோடு, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என கூறப்பட்டுள்ளது.
  14. உடல் பருமன் - உடல் பருமனால், நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய்களுக்கு வழிவகுக்குகிறது. இதனால், மருத்துவ துறைக்கு நீண்ட கால சுமையை கொடுக்கலாம்.
  15. மனநில பிரச்னை - மனநல பிரச்னையால் மக்களின் வாழ்க்கை முறை, சமூகத் தொடர்பு மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இதற்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை.
  16. புகைப்பிடித்தல் - புகைப்பிடிப்பதால் நுழையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை, இதய பிரச்னைகள் ஏற்படும். இதனால், உலக நாடுகளில் மனிதர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
  17. ஆரோக்கியமற்ற முதியோர் வாழ்க்கை - ஆயுட்காலம் அதிகரிப்பது மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிவிடாது. வயது முதிர்வால் ஏற்படும் நோய்கள், இயலாமை மற்றும் போதிய பராமரிப்பின்மை ஆகியவை சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சவால்களை கொடுக்கும்.

3 முக்கிய பிரச்னைகள் என்ன?

இதில் உலக நாடுகளை அழிக்கக் கூடிய மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளன. அதாவது, ஏஐ, அணு ஆயுத போர், காலநிலை மாற்றம் முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன.  ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் அல்லது தொழில்கள் பாதிக்கப்படும் என்பது மட்டும் கவலைக்குரிய விஷயம் அல்ல. மாறாக அதன் பயன்பாடு தவறாக பயன்படுத்தப்பட்டு, ஆபத்தான நச்சுப் பொருட்களை உருவாக்கவும், மிக முக்கியமான கட்டமைப்பை தாக்குதல்களை எளிதாக்கவும் அல்லது பிற அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தவும் கூடும்.

மறுபுறம், அணு ஆயுதப் போர் என்பது மனிதகுலத்தை மொத்தமாக அழிக்கக்கூடிய  ஒரு வழியாகும். உடனடி உயிரிழப்புகளைத் தாண்டி, பெரிய அளவிலான அணு ஆயுதப் பரிமாற்றம் விவசாய உற்பத்தியைச் சீர்குலைக்கும், அத்தியாவசியக் கட்டமைப்புச் சேதங்களை உருவாக்கும், மேலும் போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் வாழும் மக்களையும் கடுமையான விளைவுகளுக்கு ஆளாக்கும்.

கணிப்பின்படி, அணு ஆயுதப் போரைத் தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் 2100-ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 133 மில்லியன் இறப்புகளையும், 9.35 பில்லியன் ஆயுட்காலத்தை தவிர்க்க முடியும். அதேபோல், தீமை விளைவிக்கும் AI பயன்பாடுகளின் ஆபத்தைக் குறைப்பதன் மூலம், அதே காலகட்டத்தில் தோராயமாக 10.4 பில்லியன் ஆயுட்கால இழப்புகளைத் தடுத்து நிறுத்தலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு... மாயமான மக்கள்... பாலங்கள், வீடுகள் தரைமட்டம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES