• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /வேலையை விட்டு தூக்கிய ஊழியர்களுக்கு..மீண்டும் வேலை கொடுக்கும் அமேசான்!

வேலையை விட்டு தூக்கிய ஊழியர்களுக்கு..மீண்டும் வேலை கொடுக்கும் அமேசான்!

அமேசான் நிறுவனம், தாங்கள் பணி நீக்கம் செய்த ஊழியர்களை தற்போது மீண்டும் வேலைக்கு அழைத்து இ-மெயில் அனுபியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 24, 2026, 03:53 PM IST|Updated: Sep 24, 2026, 04:03 PM IST
joinshare
வேலையை விட்டு தூக்கிய ஊழியர்களுக்கு..மீண்டும் வேலை கொடுக்கும் அமேசான்!
Image Credit: Amazon Company | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உலகளவில், அவ்வப்போது அதிகம் பேரை பணி நீக்கம் செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கிறது, அமேசான். இந்த நிறுவனம், தாங்கள் வேலையை விட்டு அனுப்பிய ஊழியர்களை மீண்டும் தங்கள் நிறுவனத்தில் வந்து பணிபுரிய அழைத்து வருகிறதாம். இது குறித்த முழு விவரத்தைதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (Machine Learning) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) ஆகிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து, பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உட்பட முன்னாள் ஊழியர்களை அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம்:

கடந்த ஆகஸ்ட் மாதம், அமேசான் ஏஐ-ல் பணியமர்த்துபவராக வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஏஐ மற்றும் மெஷின் லர்னிங் ஊழியர்களை அணுகி, புதிய பணிக்காக பேசியதாக கூறப்படுகிறது. இந்த அமைப்புக்கு அமேசான் வெப் சர்வீசஸ் துணைத் தலைவர் சுவாமி சிவசுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். அந்த ஆட்சேர்ப்பாளர் இந்த அணுகுமுறையை “சுவாமியின் பூமராங் மறுஈடுபாட்டு முயற்சி” என்று அழைக்கிறார்.

இன்னொரு பக்கம், AWS துறையில் பணியமர்த்துபவராக வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் முன்னாள் ஊழியரை தொடர்பு கொண்டு, சிறிய முறையில் நேர்காணலை வைத்து அவருக்கு வேலை வாங்கிக்கொடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அமேசானின் 'அலுவலகத்திற்குத் திரும்புதல்' கொள்கை வேலையை விட்டு விலகியதற்கு ஒரு காரணமாக இருந்ததா? என்றும் அந்த பணியமர்த்துபவர் கேட்டுள்ளார். அந்த அறிக்கை, முன்னாள் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று அடையாளம் காட்டவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்கிய ரஷ்யா: நிற்காமல் தொடரும் பதற்றம்

இது குறித்து அமேசானின் ஹெய்லி சில்வா பேசுகையில், முன்னாள் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவது என்பது, செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது கிளவுட் சார்ந்த பணிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு புதிய திட்டம் அல்ல என்றும், அது நிறுவனம் முழுவதும் நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், இந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட வேலைகளுக்கு எக்ஸ் அமேசான் ஊழியர்களை மட்டும் அழைக்கவில்லை என்று அவர் தெளியப்படுத்தி உள்ளார்.

பணிநீக்க செய்யப்பட்ட ஊழியர்கள்:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மொத்தம் 14,000 ஊழியர்களை அமேசான் வேலையை விட்டு தூக்கியது. பின்னர், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 16,000 பேரை பணிநீக்கம் செய்தது. அந்த சமயத்தில், அமேசான் நிறுவனம், ஒரு சில துறைகளில் புதிய பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும், பிற துறைகளில் ஆட்குறைப்பு நடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ஆண்டி ஜேசி ஏஐ-ன் வளர்ச்சியால் ஒரு சில துறைகளில் ஆட்கள் குறைவாக தேவைப்படுவார்கள் என்றும், ஒரு சில இடங்களில் ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். கார்ப்ரேட்டில் வேலை செய்பவர்கள், இன்னும் சில நாட்களில் குறைவார்கள் என்றும், அது எந்த அளவிற்கு குறையும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்கிய ரஷ்யா: நிற்காமல் தொடரும் பதற்றம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia