• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /அரச குடும்பத்தில் அவலம்! இளவரசரின் மாமனார் போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்..

அரச குடும்பத்தில் அவலம்! இளவரசரின் மாமனார் போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்..

பிரிட்டிஷ் இளவரசரான ஹேரியை திருமணம் செய்த நடிகைதான், மேகன் மார்கல். இவருடைய தந்தை தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 05, 2026, 01:32 PM IST|Updated: Nov 05, 2026, 01:42 PM IST
joinshare
அரச குடும்பத்தில் அவலம்! இளவரசரின் மாமனார் போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்..
Image Credit: Thomas Markle | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

2

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

3

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

4

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

5

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2018ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இளவரசரான ஹேரியை மேகன் மார்கல் காதல் திருமணம் செய்தார். பின்னர், 2020ஆம் ஆண்டில் இந்த தம்பதியினர் தாங்கள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்ச்சி மற்றும் லிலிபெட் எனும் குழந்தைகள் இருக்கின்றனர். மேகன் மார்கலின் தந்தை குறித்து தற்போது வெளிவந்துள்ள விஷயம்தான் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேகன் மார்கலின் தந்தை..!

மேகன் மார்கலின் தந்தை பெயர், தாமஸ் மார்கல். மேகனும் அவருடைய கணவரும் அரச குடும்பத்திலிருந்து விலகிய போது, அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தனர். அரச குடும்பத்தின் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பின. இதையடுத்து, மேகனின் தந்தையான தாமஸ் மார்கல், தன் மகளின் கருத்துகளுக்கு எதிராக பேசினார்.

ஹேரியும் மேகனும், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இனவெறி பிடித்தவர்கள் என்று கூறியிருந்தார். இந்த கருத்துடன் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்த தாமஸ், தனக்கு ராயல்ஸ் மீது மிகுந்த மரியாதை இருப்பதாக தெரிவித்தார். மேலும், மேகனின் இந்த கருத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தன் மகள் தன்னை கைவிட்டதாகவும் அந்த சமயத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேகன்-தாமஸ் உறவு எப்படி?

மேகன் - ஹேரியின் திருமணத்திற்கு முன்பிருந்தே மேகன் தன்னுடைய தந்தையிடமிருந்து விலகியே இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திலும், மேகனின் தந்தை கலந்து கொள்ளவில்லை, இப்போது தன் பேரன் பேத்திகளை பார்க்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தாமஸ் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | Explained : அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றிய தேர்தல்! வரலாற்றில் இடம்பிடித்த வெற்றியாளர்கள்

2025ஆம் ஆண்டில், மேகனின் தந்தை கால் அறுவை சிகிச்சை, டிமென்ஷியா உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பிய மேகன், அதில் எப்போதும் தன் குழந்தைகளை நீங்கள் சந்திக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டுகள்..!

தன் தந்தை மீது, மேகன் வைத்த குற்றச்சாட்டுகள், அதிர்ச்சியளித்தன. பிலிபைன்ஸில் இருக்கும் தாமஸின் வீட்டில், 2019ஆம் ஆண்டு மேகனை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான சில ஆதாரங்களை போலீசார் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது, பிலிபைன்ஸ் இல்லத்தில் தாமஸின் வீட்டில் 3 மெமரி கார்டுகள் மற்றும் ஒரு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், போலீசார் தாமஸின் வீட்டில் கிடைத்த லேப்டாப்பை ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து, மேகனின் தந்தைக்குச் சொந்தமான, அமெரிக்காவில் உள்ள சேமிப்புப் பெட்டிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் படங்களைத் தேடுமாறு FBI-யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தன் தந்தை குறித்த விஷயத்தை, அவரது மகனே போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

82 வயதாகும் தாமஸுக்கு சொந்தமான வீட்டில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருப்பதால் இந்த விஷயம் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | Explained: அமெரிக்க அதிபரின் Veto அதிகாரம்... டிரம்பால் என்ன செய்ய முடியும்?

Add Zee News as a Preferred Source
TAGS:
World