• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /முதுகு சொரிந்தால்..ரூ.14 லட்சம் சம்பளம்! இதுக்கு ரொம்ப டிமாண்ட் இருக்காம்..

முதுகு சொரிந்தால்..ரூ.14 லட்சம் சம்பளம்! இதுக்கு ரொம்ப டிமாண்ட் இருக்காம்..

சீனாவை சேர்ந்த ஒரு நபர், உடலில் அரிப்பு ஏற்பட்டால் அதை சொரிந்து விடும் தொழில் செய்து சம்பாதித்து வருகிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 04, 2026, 12:09 IST|Updated: Sep 04, 2026, 12:16 IST
joinshare
முதுகு சொரிந்தால்..ரூ.14 லட்சம் சம்பளம்! இதுக்கு ரொம்ப டிமாண்ட் இருக்காம்..
Image Credit: Backscratching jobs china | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

வளர்ந்து வரும் உலகில், பல்வேறு இளைஞர்கள், யாருக்கு கீழும் வேலை செய்ய விரும்புவதில்லை. தாமாக சொந்த தொழிலை செய்கின்றனர். இங்கும், அப்படித்தான் சீனாவை சேர்ந்த ஒரு இளைஞர் ‘சொறியும்’ தொழிலை வைத்து சம்பாதித்து வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

முதுகு சொறியும் தொழில்:

சீனாவை சேர்ந்த 32 வயது இளைஞர், ஒரு சிம்பிளான ஐடியாவை பிசினஸ் ஐடியாவாக மாற்றி இருக்கிறார். முதுகில், யாராவது ‘அறிக்கிதுப்பா..கொஞ்சம் சொரிந்து விடு..’ என்று கூறினால், அதற்காக அவர்களிடம் காசை வாங்கி விட்டு, சொரிந்து விடுகிறார்கள். அந்த நபரின் பெயர், Zhang Xiaoquio ஆகும். இவர், சீனாவின் Hubei Province-ஐ சேர்ந்தவர். இவர்தான், ‘சுமா’ என்கிற பிராண்டை ஆரம்பித்திருக்கிறார்.

மசாஜ் பார்லர் போன்ற செட்-அப் வைத்து இருக்கும் இவர், தன்னிடம் வரும் வாடிக்கையாளரை முதலில் அதில் படுக்க வைக்கிறார். பின்பு, கைகளில் நகம் போன்ற இரு குச்சிகளை வைத்திருக்கிறார். அதை வைத்து, வாடிக்கையாளர் எங்கே அறிக்கிறது என்று கூறுகிறாரோ அங்கே தன் வேலையாட்களை வைத்து சொறிய வைக்கிறார்.

லாபம் இவ்வளவா?

இதன் மூலம், ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் 300 யுவான் வரை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4200 வரை ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் வரும் வாடிக்கையாளர்கள் ரிலாக்ஸ் ஆவதோடு, அவர்களுக்கு மன அழுத்தம் நீங்குவதோடு நல்ல தூக்கமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

வாடிக்கையாளர்கள், தனக்கு சொரிந்து விடுபவர்களிடம் எங்கெல்லாம் அரிக்கிது என கூறுகிறார்களோ, அங்கெல்லாம் சொரிந்து விட வேண்டுமாம். ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு சொரிந்து விடும் போது அவர்களுக்கு கிச்சுகிச்சு ஏற்பட்டு சிரிப்பும் வருமாம்.

Zhang சொல்வது என்ன?

தன்னுடைய தொழில் குறித்து பேசும் போது, டாப் மாகாணங்களில், பல பேருக்கு அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இருப்பதாகவும், இதன் காரணமாக இந்த தொழிலுக்கு நிறைய டிமாண்டிருப்பதகவும் Zhang கூறுகிறார்.

கடந்த மே மாதம் Zhang, ஒரு அவுட்லெட்டை திறந்துள்ளார். பின்னர், வேறு ஒரு இடத்தில் இரண்டாவது கிளையை திறந்திருக்கிறார். இப்போது இதன் மூலம் அவர் மாதம் சுமார் 100000 யுவான் வரை சம்பாதிக்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

அனைவருக்குமானது..!

இந்த சொரிந்து விடும் தொழில் மூலம் ஆண்-பெண் என அனைவரும் பயன்பெறலாம் என Zhang கூறுகிறார். ஆனாலும், இங்கு 70% வருவது ஆண்களாகத்தான் இருக்கிறார்களாம். ஒரு சில வாடிக்கையாளார்கள், மசாஜ் செய்வதை விட, இதுதன் ரிலாக்ஸ் ஆக இருப்பதாக கூறுகிறார்களாம். இது ரொம்பவே பிடித்திருப்பதால் இவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்ஸும் இருக்கிறார்களாம்.

எப்படி இந்த ஐடியா வந்தது?

Zhangற்கு இந்த ஐடியா, சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பார்க்கும் போது வந்ததாம். அந்த வீடியோவில், ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு முதுகு சொரிந்து விடுவது போலவும், அதில் கமெண்ட் செய்திருந்தவர்கள், “இப்படி எனக்கு யாராவது சொரிந்தால், அவர்களுக்கு காசு கொடுப்பேன்” என்று குறிப்பிட்டு இருந்ததால் இந்த தொழிலை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia