சிலுவை விழுந்து பலியான பாதிரியார்! இறக்கும் முன் மரணத்தை பற்றி பேசினாரா? அதிசயமா இருக்கே..
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டில், சிலுவை விழுந்து பாதிரியார் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஈக்வேடார் நாட்டில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில், பாட்ரீசியோ அல்ஃபெர்டோ சான்செஸ் மொலினரி எனும் நபர் பாதிரியாராக இருந்தார். அந்த தேவாலையத்தில் அவர் மத போதனைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்த சிலுவை அவர் மீது விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த சனிக்கிழமையன்று, மேற்குறிப்பிட்ட தேவாலயத்தில், பாதிரியார் பாட்ரிஷியோ அல்ஃபெர்டோ மத போதனை செய்து கொண்டிருந்தார். இதனை லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர்.
பாதிரியார் தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், மக்களை பார்த்தவாறு முன்னே நின்று பேசிக்கொண்டிருக்க, அடுத்த கணம் அந்த இடமே களேபரமாகி இருக்கிறது.
லைவ் வீடியோவிலேயே, சிலுவை அந்த பாதிரியார் மீது விழுவதும், அவர் நிலைகுலைந்து கீழே விழுவதும் பதிவாகி இருக்கிறது. அதில் பலர் அவரை தூக்க வருவதும், அலறுவதும் பதிவாகி இருக்கிறது பின்னர், இந்த லைவ் நிறுத்தப்பட்டது. உடனடியாக அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக அந்த நாளிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் அனைத்து குழந்தைகளுக்கும் SpaceX பங்கு! எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு
இறப்பதற்கு முன்பு பேசிய விஷயம்..
ஒருபுறம், ஒரு பாதிரியார் சிலுவை விழுந்து இறந்து விட்டார் எனும் செய்தி வலம் வர, இன்னொரு புறம் அவர் இறப்பதற்கு முன்பு பேசியதாக கூறப்படும் தகவல் பகீர் கிளப்பியிருக்கிறது. அந்த பாதிரியார், தான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் இறப்பு குறித்தும், வாழ்க்கை எவ்வளவு சிறிது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
அந்த மத போதனையில் அவர், இயேசு கிறிஸ்து குறித்தும், யாரும் தங்கள் வாழ்க்கையை போனை பார்த்து ஸ்க்ரோல் செய்து வீணாக்க கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், உங்கள் வாழ்க்கையை கடவுளுக்கும் அன்புக்குரியவர்களுக்கூம் அர்ப்பணிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
“ஒரு நாள் நாம் அனைவரும் இறந்து விடுவோம். நாம் எதெற்கெல்லாம் நிறைய நேரம் செலவிட்டோமோ அவை அனைத்தும் நீங்கள் கடவுளுடன் செலவிடும் நேரத்துக்கு முன், அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று கூறியிருக்கின்றார்.
மேலும், இன்னொரு பிரார்த்தனையையும் அவர் ஆரம்பித்திருக்கிறார். “இங்கு இருக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்க வேண்டும்” என்று அவர் கூறியவுடன் அந்த சிலுவை அவர் மீது விழுந்திருக்கிறது.
பாதிரியாருக்கு இரங்கல்..
பாதிரியார் எந்த தேவாலயத்தில் இருந்தாரோ, அந்த தேவாலயம் இவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அவரது மறைவு தங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அவருக்கு இறுதி சடங்கும் நடக்கும் தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து தேவாலயம் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வட கொரிய அதிபர் மரணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! இது உண்மையா?