• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Explainer : ஈஃபில் டவரில் பூஜை! அனுமதிக்கப்படாத பெண்கள்..என்ன நடந்தது?

Explainer : ஈஃபில் டவரில் பூஜை! அனுமதிக்கப்படாத பெண்கள்..என்ன நடந்தது?

பிரான்சின் உலகப்புகழ்பெற்ற கோபுரமாக திகழும் ஈஃப்பில் டவர்தான் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இங்கு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 09, 2026, 18:39 IST|Updated: Sep 09, 2026, 18:51 IST
joinshare
Explainer : ஈஃபில் டவரில் பூஜை! அனுமதிக்கப்படாத பெண்கள்..என்ன நடந்தது?
Image Credit: Eiffel Tower | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

2

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

3

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

4

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

5

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உலகம் முழுக்க இருக்கும் காதல் ஜோடிகள் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடமாக இருக்கிறது பிரான்ஸ் ஈஃபில் டவர். ஆனால், அந்த சுற்றுலாத்தளம் தற்போது மூடப்பட்டிருக்கிறது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடக்கக்கூடிய போராட்டம் தான் இதற்கு காரணமாக இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

போராட்டம்-காரணம் என்ன?

ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு காரணம், ‘BAPS’ என சொல்லப்படக்கூடிய போச்சா சன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சஸ்தா எனும் இந்து ஆன்மீக அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழு ஐஃபல் கோபுரத்தை தனிப்பட்ட முறையில பார்வையிடுவதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு பணியாற்றியிருந்த பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து விலகி செல்லுமாறு கூறப்பட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

பின்னணி என்ன?

கடந்த சனிக்கிழமை அன்று, இந்த பாப்ஸ் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் ஈஃபில் கோபுரத்திற்கு தனிப்பட்ட முறையில் போயுள்ளனர். அப்போது அந்த குழு செல்லும் பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஊழியர்கள் அந்த பகுதியிலிருந்து விலகி செல்லுமாறும் அவங்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் அங்கு பணியமர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
‘சிஜிடி’ எனும் பிரெஞ்ச் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி டயன் டவைன் என்பவர் இந்த குழுவினர் கடந்து செல்லும்போது பெண் ஊழியர்கள் தங்களுடைய பணியிடங்களை விட்டு வெளியேறி அவங்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் நிற்க சொல்லப்பட்டதாக சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டிரம்பை விட அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்.. யார் தெரியுமா? இத்தனை கோடியா?

ஏன் பெண் ஊழியர்களை விளக்க வேண்டும்?

ஈஃபில் கோபுரத்தை நிர்வகிக்கும் அமைப்பானது, சோசைட்டி டி எக்ஸ்ப்ளோட்டேஷன் டேலா டூர் ஐஃபல் (Société d'Exploitation de la Tour Eiffel) என அழைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் தனிப்பட்ட சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்போது, பெண் ஊழியர்களுடனான தொடர்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்று BAPS தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கைக்கு இந்த அமைப்பு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், இது போன்ற நிபந்தனையை ஏற்று இருக்க கூடாது என்றும் அந்த அமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்காக ஊழியர்களிடம் இந்த நிறுவனம் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது. இப்போது இதனால் ஒரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. பெண் ஊழியர்களை அவர்கள் பெண்கள் என்பதற்காக மட்டும் பணியிடத்திலிருந்து விலகிப் போக செல்லுவது பாலியல் அடிப்படையிலான பாகுபாடு என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியிருக்கிறது.

போராட்டம்:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்காலத்தில் எந்த ஒரு பெண் ஊழியரும் இப்படி நடத்தப்படக்கூடாது என்பதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
ஊழியர்களுடைய போராட்டத்தால் ஈஃபில் கோபுரத்தின் வழக்கமான திறப்பு தாமதமாகி, இருக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசியல் தலைவர்கள் இது குறித்து என்ன சொல்றாங்க அப்படின்னு இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது.

பிரான்ஸ் தேசிய நாடாளுமன்ற தலைவர் ஏல் பிரான் பிவெட், வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பார்வையாளர்களின் கோரிக்கையை தங்களுடைய பணியிடத்திலிருந்து விலக வேண்டிய நிலையை ஏற்க முடியாது என்றும் அவர்களுடைய கோரிக்கைக்காக நம் நாட்டில் இருக்கும் ஊழியர்களை வெளியே போக சொல்வது நியாயம் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்.

மேலும், பிறரை வரவேற்பது ஒரு நல்ல விஷயம்தான் என்றும், ஆனால் அதற்காக நம்மளுடைய அடிப்படை மதிப்புகளை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியது இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது தொடர்பா பிரான்ஸினுடைய துணை மேயர் இமானுவேல் கிரிகோரே பேசியிருக்கிறார். இதனை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் mayor தெரிவித்துள்ளார்.

பாப்ஸ் அமைப்பு கூறுவது என்ன?

இந்த விவகாரத்தில் பாப்ஸ் அமைப்பு தரப்பிலிருந்து, இந்த விவிகாரம் குறித்து வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், இதனால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மனவருத்தத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோ என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பெரிய குழு என்பதால், பிற பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஈஃபில் கோபுர நிர்வாகத்துடன் இணைந்து அதிகாலை நேரத்தில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மேலும் பெண் ஊழியர்களை அவர்களது பணியிடங்களில் இருந்து வெளியேறச் சொன்ன சம்பவம் தங்களுக்கு தெரியாது என்றும் பாப்ஸ் தரப்பில் சொல்லப்படட்டுள்ளது. அதே நேரத்துல இந்த விவகாரம் குறித்து எழுந்த கவலைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் அந்த அமைப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட காேயிலின் ஒரு பகுதியாக நடந்த பயணமா?

இந்த பயணத்தை ஏன் அவர்கள் முன்னெடுத்துள்ளனர் எனும் பின்னணியை பார்க்கும்போது, பாப்ஸ் குழுவின் பாரிஸ் பயணம் பாரிஸுக்கு அருகில் இருக்கக்கூடிய புதிதாக திறக்கப்பட்டிருக்கும் கோயில் தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாவே அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது.  இந்த கோயில் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
பாப்ஸ் அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ தகவலின்படி செப்டம்பர் மாதத்துல பாரிஸில் கோயில் திறப்பு மற்றும் அதை சுற்றிய கலாச்சார நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுள்ளது. அதற்காகவே இவர்கள் அங்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

உள்நாட்டு விசாரணை:

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈஃபில் கோபுரத்தை நிர்வகிக்கக்கூடிய நிறுவனமும் பாரிஸ் நகர அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து முழுமையான உள்நாட்டு விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையில இந்த ஏற்பாட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது? அது எவ்வாறு முடிவு செய்யப்பட்டது? போன்ற கேள்விகளுடன் விசாரிக்கப்படும். எதிர்காலத்தில் பாலின அடிப்படையில் ஊழியர்களை வேறுபடுத்தாத வகையில் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருக்கின்றனர்.

மேலும் படிக்க | Explainer: தமிழகத்தில் எலும்பு மஜ்ஜை பதிவு மையம்-அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு... யாரெல்லாம் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முடியும்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer