Nepal Floods : நேபாளம் - திபெத் எல்லையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இதுவரை 1,280 பேர் உயிரிழந்த நிலையில், 4,798 பேர் காணாமல் போயுள்ளனர் என நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். திபெத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 541 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தில் பல்வேறு நீர்மின் நிலையத் திட்டங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சுரங்கப்பாதைகளில் சிக்கி உள்ளனர். அதேநேரத்தில், குறைந்தபட்சம் 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 1,907 இந்திய குடிமக்கள் நேபாளத்திற்கு பாதுகாப்பாக நுழைந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Delhi: MEA Spokesperson Randhir Jaiswal says, "The figures we currently have show that 275 Indian citizens are missing. Since this is a dynamic situation, the numbers may fluctuate slightly as new information comes in. Of these 275 individuals, 49 are listed as missing in China,… pic.twitter.com/MHVeZ5tQ0Y
— IANS (@ians_india) September 4, 2026
மேலும் நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் பகுதியில் இருந்து 5 வயது குழந்தை உட்பட மேலும் மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். திரிசூலி பஜார் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மூன்று இந்தியர்கள் அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார், ஐந்து வயதான சமர்த் அபிஜித் பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் அவர்கள் மூவரும் தாயகம் திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், 275 இந்தியர்களை இன்னும் காணவில்லை. 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல், இந்தியா நேபாளத்திற்கு சுமார் 95 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
நேபாள அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்பதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "சீனாவில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்திய பயணிகள் யாரும் சீனாவின் திபெத்தில் சிக்கியிருக்கவில்லை" என்றார்.
நேபாளத்தில் இதுவரை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, இந்தியா இதுவரை 7 விமானங்கள் மூலம் சுமார் 95 டன் நிவாரணப் பொருட்களையும், 54 பணியாளர்களையும் அனுப்பி உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது.