SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்திய விமானியை தாக்கிய துணை விமானி யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்

ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானியை தாக்கிய ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் குறித்த அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.

Written By Sudharsan G
Published: Oct 03, 2026, 08:27 AM IST | Updated: Oct 03, 2026, 08:50 AM IST
Join

துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் (Flydubai FZ1073) விமானத்தில், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானியின் அடையாளம் தற்போது வெளியாகி உள்ளது.

இச்சபம்வத்தின் முழு பின்னணி என்ன...? அவர் யார்...? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.

யார் அந்த துணை விமானி?

விமானத்தை வீழ்த்த முயன்றி துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹமாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சௌதி அரேபியா மற்றும் சர்வதேச ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | Flydubai விமான சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - நெதன்யாகு சொன்ன முக்கிய விஷயம்

துணை விமானி குறித்த அதிர்ச்சி தகவல்கள்

தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இவர் ஓமன் ஏர் (Oman Air) நிறுவனத்தில் விமானத்தை இயக்க ஓமன் அரசு ஏற்கெனவே தடை விதித்திருந்தது தெரியவந்துள்ளது.

ஓமனில் தடை செய்யப்பட்ட பின் அவர் சிரியா உள்ளிட்ட பிற நாடுகளுக்குச் சென்று பயங்கரவாதக் கொள்கைகளால் மேலும் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவும், அதன் பிறகே அவர் ஃப்ளைதுபாயில் பணிக்குச் சேர்ந்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட ஒரு நபர் எப்படி மீண்டும் சர்வதேச விமான நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார் என்ற கோணத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன.

சௌதி அரேபிய போலீசார் பிடியில் துணை விமானி

சம்பவம் நடந்த அன்று அந்த விமானம் அவசர விமானிகள் குழுவின் மூலம் சௌதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

படுகாயம் அடைந்த இந்தியாவைச் சேர்ந்த விமானி  கேப்டன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார்.

மேலும் படிக்க | விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவரிடம் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தார். அதேநேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட துணை விமானி சௌதி அரேபியாவின் போலீசாரின் பிடியில் உள்ளார்.

கடந்த செப். 30ஆம் தேதி அன்று துபாயில் இருந்து டெல் அவிவ் நகரை நோக்கி, 174 பயணிகள் உள்பட மொத்தம் 180 பேருடன் சென்ற ப்ளைதுபாய் விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.

Boeing Max 8 ரக விமானம் சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, துணை விமானி திடீரென இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கினார். அவர் கத்தியால் தாக்கினாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் ஸ்மித் மச்சார் படுகாயமடைந்தனர்.

அவரை தாக்கி விமானத்தின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்ற முயன்றார். விமானம் செங்குத்தாகக் கீழே சரியத் தொடங்கியது. பலத்த காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் விமான அறையின் கதவை சாதுரியமாகத் திறந்து உதவி கோரினார். பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.

மேலும் படிக்க | Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES