• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained

விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained

Flydubai விமானத்தில் ஏற்பட்ட திடீர் அசம்பாவிதம் பெரும் விமான விபத்தாக ஆகாமல் இந்திய விமானியின் துணிச்சலான செயலால் தடுக்கப்பட்டது. Flydubai விமானத்தில் என்ன நடந்தது...? கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயல் ஆகியவை குறித்து இங்கு விரிவாக அலசலாம்.

Written BySudharsan G
Published: Oct 01, 2026, 08:24 AM IST|Updated: Oct 01, 2026, 09:32 AM IST
joinshare
விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained
Image Credit: Indian Pilot Captain Smit Machchhar saves 174 lives | AI Designed Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு புறப்பட்ட Flydubai விமானத்தில் ஏற்பட்ட திடீர் அசம்பாவிதம் பெரும் விமான விபத்தாக ஆகாமல் இந்திய விமானியின் துணிச்சலான செயலால் தடுக்கப்பட்டது.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீரதீர செயலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளனர். கேப்டன் மச்சாரைப் பற்றி இந்தியாவே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், Flydubai விமானத்தில் என்ன நடந்தது...? கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயல் ஆகியவை குறித்து இங்கு விரிவாக அலசலாம்.

மேலும் படிக்க | சிறுசேமிப்புத் திட்டங்கள்: 3ஆம் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன... மாற்றம் உண்டா?

விமானத்தில் நடந்தது என்ன?

  • Flydubai நிறுவனத்தின் FZ1073 விமானம் நேற்று (செப். 30) துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்டது.
  • Boeing MAX 8 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணியாளர்களை சேர்த்தால் மொத்தமாக 180 பேர் விமானத்தில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • விமானம் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, காக்பிட்டுக்குள் இரு விமானிகளுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மச்சாரை அர் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஸ்மித் மச்சார் காயமடைந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த மோதலின் போது விமானம் திடீரென மிக வேகமாக கீழே இறங்கியது. Flightradar 24 அளித்த தரவுகளின்படி, சுமார் 30 ஆயிரத்து 875 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் வெறும் 29 விநாடிகளில் 16 ஆயிரத்து 750 அடி வரை இறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானியின் வீரதீர செயல்...

  • கத்திக்குத்து வாங்கிய பிறகு காயமடைந்திருந்தபோதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்த்து போராடியதாகவும், காக்பிட் கதவைத் திறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இதன்மூலம் பயணிகள், விமானக் குழுவினர் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்திய நபரை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
  • அதன்பிறகு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மற்ற விமானிகள் உடனே விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்று, விமானத்தை சௌதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் ரேட் எவ்வளவு?

துணை விமானி தாக்கியது ஏன்...?

  • சில இஸ்ரேலிய அதிகாரிகள் இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஆனால், இது தீவிரவாத தாக்குதல் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.
  • தற்கொலை முயற்சி அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • இந்த தாக்குதலின் நோக்கம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • எனவே, தாக்குதல் நடத்திய துணை விமானியின் நோக்கம் தொடர்பானவை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆரம்பகட்ட தகவல்களை உறுதிசெய்யப்பட்ட இறுதி முடிவாகக் கருத முடியாது.

உண்மையான ஹீரோ - இஸ்ரேலிய பிரதமர் பாராட்டு

கேப்டன் ஸ்மித் மச்சாரின் நடவடிக்கையை பாராட்டி, அவர் 174 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு அவரது X தளத்தில், "இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான வீரரத்திற்கு எனது சல்யூட்... கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த போதிலும், அவர் எதிர்த்து போராடி, விமானி அறைக்கதவை திறந்து, பயணிகளும் குழுவினரும் தாக்குதல் நடத்தியவரை அடக்க வழிவகுத்தார். இதன்மூலம் நடுவானில் நிகழவிருந்த ஒரு பெரும் விபத்தைத் தடுத்தார்.

My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.

Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker — preventing a catastrophic mid-air…

— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) September 30, 2026

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் உட்பட 174 பேரின் உயரை அவர் காப்பாற்றினார். கேப்டன் மச்சார் விரைவில் முழுமையாக குணமடைய நான் வாழ்த்துகிறேன். அவர் ஒரு உண்மையான ஹீரோ" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவே பெருமை கொள்கிறது - பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி அவரது X பதிவில், "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு மாவீரர். மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்திருந்தபோதும், மற்றவர்களின் உயிரைக் காப்பதற்காக அவர் அளவற்ற தைரியத்தையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார்.

Captain Smit Machchhar is a HERO.

In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others. 

His valour helped save hundreds of lives and avert a great tragedy.

India is proud of…

— Narendra Modi (@narendramodi) October 1, 2026

அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பற்றவும், ஒரு பெரும் துயரச் சம்பவத்தை தடுக்கவும் உதவியது. கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியாவே பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணைமடையவும், புத்துணர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ஸ்மித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு?

  • விமானத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, விமானம் சௌதி அரேபியாவின் Tabuk நகரில் தரையிறக்கப்பட்டது. தற்போது அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இந்திய தூதரகம் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் நிலையாக இருப்பதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
  • கேப்டன் மச்சார் முன்னதாக SpiceJet நிறுவனத்தில் சுமார் 11  பணியாற்றிய பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டில்தான் Flydubai விமான நிறுவனத்தில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Boeing 737 விமானங்களை இயக்குவதில் அவருக்கு நீண்டகால அனுபவம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விமானத்தில் சில நிமிடங்கில் 174 பேரின் உயிருக்கும் ஆபத்தான சூழ்நிலை வந்தபோது, காயங்களையும் பொருட்படுத்தாமல் வீரமாக செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாரின் நடவடிக்கை, இந்த விமானப் பேரழிவைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Explained : Apple Pay என்றால் என்ன? இதை எப்படி உபயோகிப்பது? முழு விவரம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia