• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Flydubai விமான சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - நெதன்யாகு சொன்ன முக்கிய விஷயம்

Flydubai விமான சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - நெதன்யாகு சொன்ன முக்கிய விஷயம்

Flydubai விமானத்தில் விமானி மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் ஈரானுக்கும் தொடர்பிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பி உள்ளார். தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமியப் பயங்கரவாத கருத்தியல் திணிப்புக்கு உள்ளானவர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 02, 2026, 07:30 AM IST|Updated: Oct 02, 2026, 07:42 AM IST
joinshare
Flydubai விமான சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - நெதன்யாகு சொன்ன முக்கிய விஷயம்
Image Credit: Flydubai Plane, Benjamin Netanyahu (L-R) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இந்திய அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு... பிரசித் கிருஷ்ணா விலகல்

இந்திய அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு... பிரசித் கிருஷ்ணா விலகல்

2

Flydubai விமான சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - நெதன்யாகு சொன்ன முக்கிய விஷயம்

3

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

4

இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

5

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நேற்று முன்தினம் (செப். 30) துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி சென்ற விமானத்தில் நடந்த களேபரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

Flydubai நிறுவனத்தின் FZ1073 என்ற Boeing 737 Max 8 விமானத்தின் விமானி ஸ்மித் மச்சார் இந்தியாவைச் சேர்ந்தவர். ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானிக்கும், ஸ்மித் மச்சாருக்கும் காக்பிட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | விமானத்தில் கத்திக்குத்து... 174 உயிர்கள் தப்பியது எப்படி? இந்திய விமானியின் வீரதீர செயல் முழு பின்னணி - Explained

பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது...

இதைத் தொடர்ந்து, ஸ்மித் மச்சாரை துணை விமானி தாக்கி உள்ளார். இதில் அவர் கடுமையாக காயமடைந்துள்ளார். மேலும், விமானம் அதிவேகத்தில் கீழே சரிந்து விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தக்க நேரத்தில் செயல்பட்டு காக்பிட் கதவை ஸ்மித் மச்சார் திறந்திருக்கிறார்.

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்தினர். இதனால்,  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே அவசர விமானக் குழு உடனடியாக விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சௌதி அரேபியாவின் Tabuk நகரில் தரையிறக்கியது.

ஈரானுக்கு தொடர்பிருக்கா...?

காயமடைந்தாலும் 174 பயணிகளின் உயிரை காக்க துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலகம் முழுவதும் இருந்து ஸ்மித் மச்சாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சூழலில், Flydubai விமான சம்பவத்தில் ஈரான் நாட்டுக்கு தொடர்பிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பி உள்ளார். இதுகுறித்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும், தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதற்கு வாய்ப்பிருப்பதாகவே அவர் கூறினார்.

அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?

Flydubai சம்பவத்திற்கும் ஈரானுக்கும் தொடர்பு குறித்து யாரேனும் உங்களிடம் தெரிவித்தார்களா என அதிபர் டிரம்பிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பதிலளித்தார்.

அதில் அவர், "நாங்கள் தற்போது அதை கண்டறிய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அதுகுறித்து நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருப்போம். நான் கேள்விப்பட்டதை வைத்துப் பார்க்கையில், இதற்கு பதில் "ஆம்" என்றுதான் சொல்வேன். ஆனால், நாங்கள் தற்போது விசாரித்து கொண்டிருக்கிறோம்" என்றார். இதன்மூலம், Flydubai சம்பவத்திற்கும் ஈரான் நாட்டிற்குமான தொடர்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை.

மேலும் படிக்க | Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம்...!

தொடர்ந்து அந்த செய்தியாளர் டிரம்பிடம், அந்த நபரை (தாக்குதல் நடத்தியவரை) IRGC படையினர் விமானத்தில் ஏற்றியிருக்க வாய்ப்புள்ளதா அல்லது அவர் பயங்கரவாத மூளைச்சலவை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப், "வாய்ப்பிருப்பகலாம், ஆம்..." என பதிலளித்தார். மேலும், அவர் கேப்டன் ஸ்மித் மச்சாரை ஹீரோ என்றும் பாராட்டியிருந்தார்.

நெதன்யாகு சொன்ன முக்கிய மேட்டர்

இதே பிரச்னை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் மற்றொரு நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தாக்குதல் நடத்தியவருக்கு ஈரானுடனோ அல்லது வேறு யாருடனோ ஏதேனும் தொடர்புகள் இருந்ததா என்பதைச் சொல்வதற்கு இன்னும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

בפגישה עם גיבורי המטוס מדובאי. עם של אריות! 🦁🇮🇱 pic.twitter.com/ogOiat1Vk3

— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 1, 2026

அப்படி ஏதேனும் தொடர்புகள் இருந்ததா என்பதை ஓரிரு நாட்களில் கூறிவிட முடியும். மேலும், அவரது தனிப்பட்ட விவரங்களை பார்க்கும்போது, அவர் இஸ்லாமியப் பயங்கரவாத கருத்தியல் திணிப்புக்கு உள்ளானார் என்பது நமக்கு தெரியவருகிறது" என தெரிவித்தார்.

இன்னும் தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரே அந்த துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றார். மேலும், தாக்குதல் நடத்தியவர் எந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. கத்தியால் அல்லது கோடாரியால் தாக்கியிருக்கலாம் என நெதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மிகப்பெரிய எண்ணெய் வயலைத் தாக்கும் ஈரான்.. ஒரு பெரிய போரை நோக்கி நகரும் அபாயம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia