SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை.. உயிரிழந்த பிரபல இன்புளூயன்சர்! அதிர்ச்சி

தாய்லாந்துக்கு மனைவியுடன் சென்றிருந்த பிரிட்டிஷ் - நைஜீரிய தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான இகோ டைனி உபிரிபோ, காஸ்மடிக் சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் இகோ தனது ஆணுறுப்பை பெரிதாக்க முயற்சித்ததே அவரது மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Written By R Balaji
Published: Sep 07, 2026, 08:28 IST | Updated: Sep 07, 2026, 08:33 IST
Join

பிரபல பிரிட்டிஷ் - நைஜீரிய தொழிலதிபரும் இன்புளூயன்சருமான இகோ டைனி உபிரிபோ, கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் அதிர்ச்சி தரும் விதமாக அமைந்திருக்கிறது.

இகோ டைனி உபிரிபோ, கடந்த மார்ச் மாதம் தனது மனைவி டேனியல் சிம்பா ஆலனுடன் தாய்லாந்து சென்றிருந்தார். இருவரும் பாங்காக்கில் உள்ள மேரியர் ஹோட்டலில் தங்கிருந்த நிலையில், அங்குள்ள மருத்துவ நிலையம் ஒன்றில் இகோ காஸ்மடிக் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சிகிச்சையில் அவரது அந்தரங்க பகுதியில் சுமார் 40 மில்லிலிட்டர் அளவிலான லிடோகைன் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்த பின்னர் மனைவியுடன் மசாஜ் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது இகோவுக்கு திடீரென மார்பு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இகோ டைனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், மருத்துவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இகோவின் உடல்நிலை பிரச்சனையை கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அப்போதுதான் டேனியல் மருத்துவர்களிடம் சிகிச்சையின்போது ஃபில்லர் ஊசி செலுத்தப்பட்ட தகவலை தெரிவித்தார். இதை கூறிய பின்னர் மீண்டும் இகோ சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து சிகிச்சையில் அவரது நுரையீரலுக்கு செல்லும் ரத்த குழாயில் ரத்தக்கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ ரீதியாக இது Pulmonary  Embolism என அழைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இகோவின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் நீண்ட நேரம் முயற்சித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இகோவின் மரணம் தொடர்பாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் முக்கியமான தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அவரது நுரையீரலில் கண்டறியப்பட்ட்ட சில செல்கள், காஸ்மடிக் சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட ஹைலூரோனிக் அமிலத்துடன் ஒத்துப்போனதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் காஸ்மடிக் சிகிச்சையின்போது பய்ன்படுத்தப்பட்ட ஃபில்லர் பொருள் தக்கையடைப்பு அவரது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இகோ உபிரிபோ சமூக வலைதளங்களில் இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை சுமார் 1.85 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். லண்டனில் சுமார் 6 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பும், லாஸ் ஏஞ்சல்ஸின் கிரென்ஷா பகுதியில் சுமார் 11 லட்சம் டாலர் மதிப்புள்ள வீடும் அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இகோவின் இறுதிச்சடங்கும் அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. லண்டனில் சுமார் 7.45 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய தங்க நிற சவப்பெட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES