• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Explained : மெட்டாவுக்கு இத்தாலி ரூ.8359 கோடி அபராதம் விதித்தது ஏன்? பெரிய காரணம் இதுதான்..

Explained : மெட்டாவுக்கு இத்தாலி ரூ.8359 கோடி அபராதம் விதித்தது ஏன்? பெரிய காரணம் இதுதான்..

மெட்டா தளத்திற்கு, இத்தாலி சுமார் 805 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்திருக்கிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Written ByYuvashree M
Published: Nov 16, 2026, 18:08 IST|Updated: Nov 16, 2026, 18:15 IST
joinshare
Explained : மெட்டாவுக்கு இத்தாலி ரூ.8359 கோடி அபராதம் விதித்தது ஏன்? பெரிய காரணம் இதுதான்..
Image Credit: Italy Fines Meta | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சமூக வலைதளங்களின் மையப்புள்ளியாக திகழும் மெட்டாவிற்கு இத்தாலி அரசு ரூ.8359 கோடி வரை அபராதம் விதித்திருக்கிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இதுவரை கூறப்படுவது என்ன...?

இத்தாலியின் தரவுகளை பாதுகாக்கும் துறை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா சுமார்  ரூ.8359 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதித்திருக்கிறது. இதற்கு காரணமாக, ஆண்ட்ராய்ட் பயணாளர்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அவர்களின் அனுமதியின்றி அவர்களின் போன் கேலரியில் இருந்து திருடிய குற்றத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் இதுவரை இத்தாலி நாடு ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விதித்ததிலேயே அதிக அபராத தொகை என்று கூறப்படுகிறது.

என்ன பிரச்சனை..?

பேஸ்புக் நிறுவனம், தங்களின் பயனாளர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவதற்கு தங்களின் மொபைல் கேலரியில் இருந்தே பதிவிடும் வகையில் ஸ்க்ரோல் செய்யும் பக்கத்தில் ஒரு ஆப்ஷனை வைத்துள்ளது. அதில், “Get Tips From Your Gallery While Browsing Facebook" எனும், ஸ்க்ரோல் செய்யும் போதே உங்கள் கேலரியியில் இருந்து டிப்ஸை பெருங்கல் எனும் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த ஆப்ஷன், 2023ல் இருந்து பேஸ்புக் பக்கத்தில் இருந்து வருகிறது.

இத்தாலிய அதிகாரிகள், பொலான்ஸோவின் நுகர்வோர் உரிமைகள் ஆணையத்தில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஒரு விசாரணையை தொடங்கியிருக்கிறது. அந்த புகாரில், “பயனரின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள வெளியிடப்படாத கோப்புகள் (Unpublished files stored on a user's smartphone)” எனும் பெயரில் ஒரு ஆப்ஷன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரிக்க ஒரு முக்கிய டெக் குழு அமைக்கப்பட்டது.

அந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றின்படி, ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய செயலி முழுமைக்குமான ஒரு பொதுவான அங்கீகாரத்தின் மூலம், பயனர்களின் தொலைபேசி கேலரியை அணுக அனுமதி கோரியிருந்தது. அந்த அங்கீரத்திற்ற்கு முன்னதாகவே பிற அம்சங்களை செயல்படுத்துமாறு கோரும் ஒரு பொதுவான அறிவிப்பு மட்டுமே காட்டப்பட்டது. இதன் மூலமாக பயனர்கள் தங்களின் கேலரீயில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு பரிந்துரைகளை உருவாக்க, பேஸ்புக் அனுமதி வழங்குகிறோம் என்பதை அவரகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றின்படி,  இந்த அனுமதி பயனரின் தொலைபேசியிலுள்ள புகைப்படத்தொகுப்பு முழுவதையும் தொடர்ந்து அணுகுவதற்கு அந்த தள்த்திற்கு வழிவகை செய்கிறது என்று ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியது. எந்த தகவல்கள் பயன்படுத்துகின்றன என்பதை பயனராலோ அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தாலோ சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | AI உலகின் அரசனுக்கு என்ன ஆனது? ஜென்சன் ஹுவாங் இல்லாமல் Nvidia இயங்குமா? The Real Story

மெட்டா நிறுவனத்தை ஆணையம் செய்ய சொன்னது என்ன?

அதிகாரிகள், தங்களின் Article 122 இத்தாலிய தனியுரிமை சட்டத்தை மெட்டா மீறியதாக தெரிவிக்கின்றனர். சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை அணுகுவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இ-பிரைவசி' (ePrivacy) விதிகளைச் செயல்படுத்தும் முறையும் இதில் மீறப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

இந்த அபராத தொகைக்கான காரணங்களை விளக்கிய அந்த ஆணையம், இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை விதிமீறல் நீடித்த காலம் மற்றும் விசாரணையின் போது மெட்டா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை ஆகிய அம்சங்களை கருத்திற்கொண்டதாக தெரிவித்திருக்கிறது.

இவ்வளவு பெரிய அபராத தொகைக்கு காரணம் என்ன?

இவ்வளவு பெரிய அபராத தொகையை விதிக்க காரணங்களையும் ஒழுங்குமுறை ஆணையம் விவரித்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பயனர்களின் எண்ணிக்கி அதிகம் (இத்தாலியில் சுமார் 20 மில்லியன் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் வரை உள்ளனர்). இதை கருத்திற்கொண்டும், விதிமீறல் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை கருத்திற்கொண்டும், செயலியினை புதுப்பிக்காத பயனர்களுக்கு இது இன்னும் தொடர் தொடரும் என கூறப்படுகிறது. மேலும் விசாரணையின் போது, மெட்டா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது. இந்த அபராத தொகை, அந்த நிறுவனத்தின் உலகளாவிய் ஆண்டு வருவாயில் சுமார் 0.4 சதவீதத்திற்கு சமமாக இருக்கிறது.

கடந்த 60 நாட்களுக்குள் ஏற்கனவே ஒப்புதல் அளித்த பயனர்களுக்கு கூட, இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு, பயனர்களிடம் தனிப்பட்ட மற்றும்  பிரத்யேக கோரிக்கையின் மூலம் மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், இந்த அம்சம் குறித்த விரிவான விளக்கத்தையும், கேலரியை அணுகுவது தொடர்பான தகவல்களையும் மெட்டா நிறுவனம் வழங்க வேண்டும். இத்துடன், அந்த அம்சத்தை எவ்வாறு முடக்குவது என்பதற்கான வழிமுறைகளையும் பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மெட்டா கூறிய பதில் என்ன?

இத்தாலியின் இந்த முடிவை அடுத்து, மேல்முறையீடு செய்யப்போவதாக மெட்டா தெரிவித்திருக்கிறது. இது குறித்து பேசிய அந்த நிறுவனம், ஒழுங்முறை ஆணையத்தின் உண்மைத்தன்மை மதிப்பீடு, சட்டத்தை பயன்படுத்திய விதம் மற்றும் விதிக்கப்பட்ட அபராத தொகையின் அளவு ஆகியவை நியாயமற்றைவை. நாங்கள் இதை வன்மையாக எதிர்க்கிறோம் எனவும் கூறியிருக்கிறது.

மேலும், இந்த அம்சம் மிகவும் எளிமையானது என்று குறிப்பிட்டிருக்கும் அந்த நிறுவனம் இது பயனர்கள் தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்ற உதவும் ஒரு எளிமையான அம்சம் என்றும் கூறியிருக்கிறது.

இது செயல்படுவதற்கு முன்பாக, பயனர்கள் தங்களின் சாதனத்தில் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் அமைப்புகள் (Settings) வழியாக இந்த அனுமதியை மாற்றிக்கொள்லலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மெட்டாவிற்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளில் இது முதன்முறை அல்ல. உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள், நிறுவனங்கள் பயனர்களின் தரவுகளை அணுகும் விதம் குறித்துக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கடந்த அக்டோபரில், நியூ மெக்ஸிகோவில் மெட்டா நிறுவனம் தனது வணிக நடைமுறைகளுக்காக இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய அபராதத்தைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நிதி நெருக்கடி.. சாப்பாட்டுக்கே கஷ்டம்! விந்தணு உறுப்பை விற்கும் அவலம்.. கண்ணீர் விடும் மக்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer