• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

சமீபத்தில், மிஸ் யுனிவர்ஸ் 2026 பிரபஞ்ச அழகி தேர்வு நடைப்பெற்றது. இந்த படத்தை, புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் பாரெட்டோ எனும் பெண் வென்றிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 25, 2026, 16:17 IST|Updated: Nov 25, 2026, 16:30 IST
joinshare
Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..
Image Credit: Miss Universe 2026 | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

2

CSK அணிக்கு பென் ஸ்டோக்ஸ் ஏன் சரியான ஆப்ஷன்...? எவ்வளவு கோடி வரை ஏலம் கேட்கலாம்? Explained

3

முதலீட்டாளர்கள் மாநாடு: குமரி முதல் கொங்கு வரை புதிய தொழிற்சாலைகள்.. 66000 பேருக்கு வேலை

4

UP Elections 2027: தேர்தல் கூட்டணியில் விரிசலா? "நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" -வெடித்த காங்கிரஸ் எம்.பி!

5

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மிஸ் யுனிவர்ஸ் 2026 எனும், 2026ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப்போட்டி, சான் யுவானில் நடைப்பெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த அழகிப்போட்டியில், புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் என்பவர் வென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் 2026:

மிஸ்  யுனிவர்ஸ் எனும் பிரபஞ்ச அழகிப்போட்டியானது, கடந்த 1952ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. வருடா வருடம் நடைபெறும் போட்டியில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வர். அந்த வரிசையில், 75ஆவது ஆண்டு பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி, புரெட்டோ ரிக்கோ நாட்டின் தலைநகரான சான் யுவான் நகரில் நடந்தது.

இந்த போட்டியில், இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல நாட்கள், பல்வேறு ரவுண்ட்களின் அடிப்படையில் நடைப்பெற்ற இந்த போட்டியில், மொத்தம் 116 பெண்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..

வெற்றியாளர் யார்..?

ஜெனிஃபர் பரோடெட்டா எனும் புவெர்ட்டோ ரிக்கோ நாட்டின் அழகிதான், இந்த வருடத்திற்கான பிரபஞ்ச அழகிப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு “பிரபஞ்ச அழகி 2026” என்பதற்கான மகுடம் வழங்கப்பட்டது. அதோடு, அவருக்கு 3,150 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளை தங்க கிரீடம் தலையில் சூட்டப்பட்டது.

போட்டியிட்ட இந்திய பெண்!

இந்த பிரபஞ்ச அழகிப்போட்டியில், இந்தியாவிற்கு மகுடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. காரணம், கேரளாவை சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ என்பவர் இதில் பங்கேற்றிருந்தார். இவர், பெங்களூருவில் உள்ள கல்லூரியில் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர், பிற நாட்டு போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்ததோடு, இந்தியர்கள் மத்தியிலும் வெற்றிக்கான நம்பிக்கையை விதைத்தார்.

இறுதியில், ‘டாப் 12’ சுற்றுகுள் நுழைய முடியாமல் அவர் வெளியேறினார். இந்த காசியா லிஸ் மெஜோ, கேரளாவில் உள்ள மாவெளிக்கரை பகுதியை சேர்ந்தவர். ஆனால், இவர் வளர்ந்தது அனைத்தும் அபுதாபியில்தான். அங்கு அவர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு சட்டப்படிப்பு பயில, பெங்களூருவிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு நிறைய மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.

பன்முக திறமை கொண்டவர்..

காசியாவிற்கு, பாடல்கள் பாடுவது, வயலின் வாசிப்பது, ட்ரம்ஸ் இசைப்பது உள்ளிட்ட பல கலைகள் தெரிந்துள்ளது. இவர் அவை அனைத்தையும் கற்றுக்கொண்டதோடு, ஷைலாக் எனும் திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கிறார்.

மிஸ் யுனிவர்ஸ் கேரளா பட்டத்தை இந்த ஆண்டில் வென்ற இவர், இந்த பட்டத்தை பெற்ற மிக இளம் வயது நபர் எனும் பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். ஜெய்பூரில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால், தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்ல முடியாமல் போயுள்ளது.

இதுவரை வென்ற இந்தியர்கள்..!

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இதற்கு முன்னர் 3 முறை இந்தியாவை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். 1994ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென் வென்றார்ல், 2000ம் ஆண்டில் லாரா தத்தா வென்றார், 2021ல் ஹர்னாஸ் சந்து இப்பட்டத்தை வென்றார். இந்த முறை மிஸ் ஆனால் என்ன, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் இணையத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஈரான் பாடகிக்கு 74 கசையடி தண்டனை! ஹிஜாப் அணியாததால் கொடூர தீர்ப்பு..

Add Zee News as a Preferred Source
TAGS:
World