நேபாளத்தில் அதிசயம்... 9 நாட்களுக்கு பின் 2 பேர் மீட்பு - உயிர் பிழைத்தது எப்படி?
நேபாள பெருவெள்ளத்தால் நீர்மின் நிலையத்தின் சுரங்கப் பாதையில் 9 நாட்களாக சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது மீட்புப் படையினருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
திபெத் - நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று ஏற்பட்ட பெருவெள்ளம் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வையே முற்றிலும் சிதைத்திருக்கிறது. நேபாளத்தில் மட்டும் 1,252 உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் 21 உடல்கள் மீட்கப்பட்டன.
12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டோ அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டோ உள்ளனர். திபெத் - நேபாளம் சேர்த்து சுமார் 5,600 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதில் நீர்மின் நிலையங்களின் சுரங்கங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்களும் அடக்கம். இந்தச் சூழலில், 10வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
9 நாட்களுக்கு பின் உயிருடன்...
நேபாள ராணுவத்தினரும் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றின் நடந்த திருச்சுழி-3 A நீர்மின் நிலையத்தின் சுரங்கத்தில் பணியாற்றி, பெருவெள்ளத்தின் காரணமாக ஒரு வாரத்திற்கு மேல் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
சுமார் 9 நாட்களாக இடிபாடுகளில் சிக்கி, உயிரை தங்களின் கைகளில் பிடித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு ராணுவத்தினர் அவர்களின் நம்பிக்கையை மெய்யாக்கினர். இடிபாடுகளில் இருந்து இரண்டு தொழிலாளர்களை உயிருடன் ராணுவத்தினர் இன்று மீட்டனர்.
மீட்கப்பட்ட 2 பணியாளர்கள்
அதில் முதலில் மீட்டவர்களை தங்களின் தோள்களில் சுமந்துசென்று மருத்துவ முகாமிற்கு கொண்டுசென்றனர். முதலில் மீட்கப்பட்டவரின் பெயர் சஞ்சய் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருச்சுழியில் உள்ள நேபாள ராணுவ முகாமுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
அடுத்து சுரங்க இடிபாடுகளில் இருந்து கபிர் மகர்ஜன் என்பவரையும் ராணுவத்தினர் மீட்டனர். மீட்கப்பட்ட இரண்டு பேரும் சுரங்கப் பாதையின் உள்ளே சுமார் 17 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 வயதான சஞ்சய் ஷா நேபாள மின்சார ஆணையத்தின் இயந்திரப் பிரிவு மேற்பார்வையாளர் ஆவார். 45 வயதான மகர்ஜன் திரிசுலி-3 A நீர்மின் திட்டத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர்.
மீட்புப் படைக்கு ஏற்பட்ட நம்பிக்கை
சுரங்கப்பாதைக்குள் தவழ்ந்து சென்றதால், மீட்கப்பட்ட இருவருக்கும் கைகளிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரையும் உயிருடன் மீட்டதால் இன்னும் அதில் சிக்கி இருக்கும் பலரையும் உயிருடன் மீட்கலாம் என்ற நம்பிக்கை மீட்புப் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
BBC ஊடகத்திடம் மகர்ஜனின் மனைவி, "சுரங்கத்தில் இருந்து எனது கணவர் வெளியே எடுக்கப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார். காத்மாண்டுவில் உள்ள ராணுவ மருத்துவமனையான சௌனி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல தயாராகி கொண்டிருக்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
9 நாட்கள் உயிருடன் இருந்தது எப்படி?
சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருந்தவர்களிடம் இருந்து சத்தம் கேட்டதும், உடனே அவர்களிடம் மீட்புப் படையினர் உரையாடி உள்ளனர். அதன் பின்னரே அவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். தடைபட்ட சுரங்கப்பாதைக்குள் சஞ்சய் ஷா மற்றும் மகர்ஜன் ஆகியோர் உயிர் பிழைத்ததற்கு அங்கு இருந்த Air Pockets தான் காரணம் என கூறப்படுகிறது.
அதாவது, பெருவெள்ளம் காரணமாக சுரங்கப்பாதையில் உயிரமான இடங்கள், கூரையின் இடைவெளிகள் அல்லது மூடப்பட்ட நீர் குழாய்களின் அடைப்பபட்ட பகுதிகள் ஆகியவற்றிற்குள் அடைபட்டு உள்ளே சிக்கிக் கொள்ளும் காற்று அல்லது வாயுவின் கன அளவுதான் அது. இதனால் அவர்கள் உயிர் பிழைக்கும் அளவுக்கு காற்று இருந்திருக்கிறது.
இன்னும் நீர்மின் நிலையப் பகுதிகளில் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி சகதி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்புப் பணிகளை மீட்பு படையினர் பணியாற்றி வருகின்றனர்.