“எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை” பேரழிவிற்கு பின் நேபாளம் எடுத்த பெரிய முடிவு! ஏன்?
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல நூறு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த நாடு, தங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை என கூறியிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இரு தினங்களுக்கு முன்பு, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதிலும், கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், பல்வேற் உலக நாடுகள் நேபாளத்திற்கு உதவ முன் வந்ததை அடுத்து, அந்த நாடு தங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!
நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு உலகையே உலுக்கி இருக்கிறது. ஆரம்பத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டதால்தான் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பலரும் நம்பினர். இதன்மூலம் நிலச்சரிவு ஏற்பட்டு, அதன் மூலம் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இது குறித்து விளக்கம் அளிக்கையில் இந்த பேரிடர், பணிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்த வெள்ளப்பெருக்கானது, நேபாளத்தின் எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின்லெண்டே ஆற்றில் பெருவெள்ளமாக உருவாகி, போடே கோஷி ஆற்றின் வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கானது, சகதி, பாறைகள் அடித்துக்கொண்டு வரப்பட்டு, இரு பக்க கரைகளையும் சூழ்ந்தாபடி பல அடி உயரத்துக்கு இந்த வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் என பல, வெள்ளத்தின் கோர தண்டவத்தில் அழிந்து போயின.
உதவிகள் தேவையில்லை!
நேபாளத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில், பாதிப்புக்குள்ளானோரை மீட்கும் பணிகள் ஈடுபட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும், தோண்டத்தோண்ட வந்துகொண்டே இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இருகும் நேபாளத்திற்கு உதவ வேண்டும் என வெளிநாடுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், நேபாளம் யார் உதவியும் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.
நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் பதிவின் படி, தங்களுக்கு அதிகாரப்பூர்வமாகவும் தனிப்பட்ட முறையிலும் பல நாடுகளில் இருந்தும், சர்வதேச அமைப்புகளும் மீட்புபணிகளில் உதவ காத்திருப்பதாக தங்களிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் நாட்டு அரசாங்கம் யார் உதவியும் தேவையில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு படையினரே போதும் என்றும் தெரிவித்திருகிறது.
காரணம் என்ன?
பல பேரை இழந்து தவிக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் பேரிடர் மீட்பு குழுவினரை வேண்டாம் என சொல்வது ஏன் என்கிற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம். ஆனால், இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமும் இருக்கிறதாம். 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஏராளமான வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகை ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டே நேபாளம் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு பதில் என்ன உதவி கேட்கிறார்கள்?
வெளிநாட்டினரின் மீட்புக்குழுவிற்கு பதிலாக, நேபாளம் தங்களுக்கு நிதி ரீதியான உதவி தேவைப்படும் என தெரிவித்திருக்கிறது. அதே போல, பேரிழப்பின் போது இழந்த உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்குகையிலும் நிதி உதவி தேவைப்படும் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள்..!
இந்த பேரிடரில், சுமார் 469 பேர் உயிரிழந்துள்ளனர். 1545 பேர் வரை இதுவரை பலத்த காயம் ஏற்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.