• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /3 வயது குழந்தையை திருமணம் செய்த 60 வயது முதியவர்! பாகிஸ்தானில் அதிர்ச்சி..

3 வயது குழந்தையை திருமணம் செய்த 60 வயது முதியவர்! பாகிஸ்தானில் அதிர்ச்சி..

சமீபத்தில், பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. இந்த சம்பவத்தில், 60 வயது ஆண் ஒருவர், 3 வயது பெண் குழந்தையை திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 25, 2026, 15:15 IST|Updated: Sep 25, 2026, 15:24 IST
joinshare
3 வயது குழந்தையை திருமணம் செய்த 60 வயது முதியவர்! பாகிஸ்தானில் அதிர்ச்சி..
Image Credit: Pakistan Child marriage | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பாகிஸ்தானில் 60 வயது ஆண் ஒருவர், 3 வயது குழந்தையை திருமணம் செய்து கொண்டதாக பரவும் செய்தி, கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதிர்ச்சி சம்பவம்!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில், 3 வயது குழந்தை ஒன்றை பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சத்திற்கு விற்றுள்ள தகவல் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. அப்துல் பாகி என்பவர், தன் குழந்தையை விற்ற குற்றத்திற்காக சாமான் எனும் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்குழந்தையை வாங்கியதாக கூறப்ப்டும், 60 வயது நபர் சலாஹ் உதின் தற்போது வரை போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்கிறார். இந்த விவகாரம், மணமகனோ அல்லது அவரது குடும்பத்தினரோ மணப்பெண்ணுக்குப் பணம் செலுத்தும் 'வல்வார்' அல்லது 'மணப்பெண் விலை' என்ற பாரம்பரிய பஷ்டோ பழக்கத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிர்காலத்திலும் எந்த வரனும் பார்க்க கூடாது!

இது குறித்து பேசும் அவ்வூர் மக்கள், இந்த திருமணம் வெறும் காகித அளவிலேயே இருந்ததாகவும், இன்னும் முழு தொகை கொடுக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். அந்த முழு பணமும் அக்குழந்தையின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால், அக்குழந்தை அந்த முதியவருக்கு மனைவி ஆகியிருக்க கூடும். ஆனால், அந்த பணத்தை கொடுத்து முடிக்க பல வருடங்கள் எடுத்திருக்குமாம்.

மேலும் படிக்க | ”இனி புர்கா போடக்கூடாது” இத்தாலிய பிரதமர் அதிரடி அறிவிப்பு! விவரம் என்ன?

அதுவரை, இப்படி பணம் கொடுத்து வைப்பது அந்த குழந்தைக்கான துணையை அவள் வயது வந்த பிறகும் கூட, எதிர்காலத்தில் வேறு எங்கும் தேடக்கூடாது என்பதற்காகதான் என்று கூறப்படுகிறது. அதற்கு முயற்சி செய்தால், அதற்கான பின்விளைவுகள் பெரிதாக இருக்குமாம். சொல்லப்போனால், இரு குடும்பத்திற்கிடையே வெட்டு குத்து கூட நிகழுமாம்.

இந்த விஷயம் தெரிந்தவுடன், பலோசிஸ்தான் நாட்டின் முதல்வர் மிர் சர்ஃப்ராஸ் புக்டி, இந்த விஷயத்தில் புகாருக்காக காத்திருக்காமல் இது குறித்து விரைந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். பலோசிஸ்தானின் தலைமை காவல் அதிகாரி இது குறித்து பேசுகையில், அந்த குழந்தையின் பெற்றோரை கைது செய்து விட்டதாகவும், அந்த 60 வயது நபரான சலாஹ் உதினை தேடி வருவதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், அந்த குழந்தையும், அதன் தாயாரும் தற்போது தங்களின் பாதுகாப்பில் இருப்பதாக கூறி இருக்கின்றார்.

குழந்தையின் சகோதரிக்கு என்ன ஆனது?

இதற்கிடையில், குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் சிறுமியின் மூத்த சகோதரியான ஷுக்ரியா பீபி கொலை செய்யப்பட்டது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது. சுக்ரியாவை, இதற்கு முன்னரே சலாஹ் உதினின் மகனுக்கு, 15 லட்சத்திற்கு திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அப்போது, இந்த 3 வயது குழந்தையை சலாஹ் உதினுக்கு திருமணம் செய்து கொடுக்க சொல்லி கேட்டிருக்கின்றனர். அப்படி கொடுக்க வேண்டுமென்றால், தன்னுடைய 8 வயது மகளை திரும்ப அனுப்புமாறு அவர் கேட்டிருக்கிறார்.

பின்னர், அந்த 8 வயது குழந்தையான சுக்ரியா, அவர் திருமணம் செய்து கொண்ட கம்ரானால் கொலை செய்யப்பட்டுள்ளார். அக்குழந்தை வீட்டை விட்டு வெளியே வேடிக்கை பார்த்ததால், அவரை திருமணம் செய்த கம்ரானுக்கு கோபம் வந்து அவரை இரும்பு ராட்டால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகளின் தந்தை சொல்வது என்ன?

தன்னுடைய முத்த மகளின் கொலை குறித்து, பாகி அங்கிருக்கும் உள்ளூர் யூடியூபர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். தன் மகள் சுக்ரியா, அவருடைய வீட்டினரால் கொடுமைபடுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். தான், தன்னுடைய ஏழ்மை நிலை மற்றும் வீடு வாங்க வேண்டும் எனும் காரணத்தால் குழந்தைகளை குறிப்பிட்ட தொகை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துக்கொண்டதாக கூறியிருக்கிறார்.

பலோசிஸ்தானில், குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை பொருத்தவரை, Balochistan Child Marriages Restraint Act-ன் படி 18 வயதுதான் திருமண வயதாக கருதப்படுகிறது. யாரேனும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 2-3 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, 100000 முதல் 200000 பாகிஸ்தான் மதிப்பில் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | அணு ஆயுதக் கிடங்கை விரிவுபடுத்த புதிய நகரங்களை உருவாக்கும் சீனா: செயற்கைக்கோள் படங்களில் அம்பலம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia