• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /சடலத்தின் கம்மலை திருடிய 2 பேர் கைது... வைரலான வீடியோ - நேபாளத்தில் கொடூரம்

சடலத்தின் கம்மலை திருடிய 2 பேர் கைது... வைரலான வீடியோ - நேபாளத்தில் கொடூரம்

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் காதணியை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர் காதணியை திருடும் 41 வினாடி வீடியோவும் இணையத்தில் வைரலானது.

Written BySudharsan G
Published: Aug 28, 2026, 08:54 IST|Updated: Aug 28, 2026, 09:01 IST
joinshare
சடலத்தின் கம்மலை திருடிய 2 பேர் கைது... வைரலான வீடியோ - நேபாளத்தில் கொடூரம்
Image Credit: Nepal Police arrested two men for stealing victims earrings | Screengrab : X/@NepalPoliceHQ

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் (ஆக. 26) காலை நிகழ்ந்த பேரிடர் ஒட்டுமொத்த மனித சமுகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது எனலாம். பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக இந்த பேரிடர் சம்பவங்களை பார்க்க வேண்டியதாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கை நேபாளமே எதிர்கொண்டதில்லை. பல்வேறு கிராமங்கள் மண்ணுக்குள் போய்விட்டன. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியும்தான் நிரம்பியிருக்கின்றன. பாலங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் தரைமட்டமாகிவிட்டன.

உயரும் பலி எண்ணிக்கை

திபெத் - நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக 1,400க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 ஆக உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 290 இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது.

நேபாளத்தில் வைரலான வீடியோ

உலகமே நேபாளத்தை கண்டு கண்ணீர்விட்டு வரும் இந்த வேளையில், நாராயணி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களிடம் இருந்து தங்க நகைகளை திருடியதற்காக இரண்டு பேரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு ஆண்கள் இணைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தில் இருந்து, காதில் அணிந்திருந்த காதணியை திருடும் வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 41 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் குற்றவாளிகளின் முகம் தெளிவாக தெரிந்தது.

मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । pic.twitter.com/pnPlnQPn9j

— Nepal Police (@NepalPoliceHQ) August 27, 2026

வீடியோவில் பதிவான காட்சிகள்

இரண்டு ஆண்கள் சேர்ந்து ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை மரப்பலகையை வைத்தும், பெண்ணின் முடியை பிடித்து இழுத்தும் தங்கள் பக்கம் இழுத்தனர். நீரில் இருந்து வெளியே இழுத்து இரண்டு காதுகளில் இருந்தும் காதணிகளை கழற்றுவதும் வீடியோவில் தெரிந்தது. அதேநேரத்தில் அவர்களை சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்ப்பதையும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோவை தங்களது பக்கத்தில் பகிர்ந்த நேபாள போலீசார், அந்த இரண்டு ஆண்களையும் கைது செய்து விசாரணைக்கு எடுத்ததாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் காதில் இருந்து கம்மலை எடுத்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை தங்க கம்மல் என நினைத்தே திருடியுள்ளனர். ஆனால் அது தங்கமா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

2 பேரும் கைது

சிட்வான் போலீசாரின் கூற்றுப்படி, நாராயணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்துதான் காதணி எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மதன் குருங் (25) மற்றும் உமேஷ் சௌத்ரி (38) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் நேற்று (ஆக. 27) பாரத்பூர் மெட்ரோபோலிடன் சிட்டி-1 போஹ்ரா பஸ் பார்க் அருகே இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேரிடர் சூழ்ந்த பகுதியில் மனிதநேயமற்ற வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என சமூக வலைதளங்களில் சிலர் அறச்சீற்றம் அடைகின்றனர். அதேநேரத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட அந்த 2 பேர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை என்பதால் இதை செய்திருக்கலாம், பேரிடர் நாம் நினைப்பதை விட மிக மிக மோசமானது என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia