வட கொரிய அதிபர் மரணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! இது உண்மையா?
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக சர்ச்சை கிளம்பி இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பெயரை கேட்டாலே, அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல, பிற நாட்டை சேர்ந்தவர்களும் நடுங்குவர். அந்த அளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடத்துவதில் பெயர் பெற்ற ஆளாக இருக்கிறார். வட கொரியா, அதிகாரப்பூர்வமாக ஜனநாயக நாடாக கருதப்பட்டாலும், அது ஒரே ஒரு குடும்பத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சர்வாதிகார நாடாக இருக்கிறது. வடக்கொரியாவில் கிம் குடும்பத்தின் ஆட்சி 1948 முதல் பரம்பரையாக தொடர்ந்து வருகிறது. தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன், நாட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தில் இருக்கிறார்.
அதிபர் உயிரிழந்து விட்டாரா?
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு, திடீரென மூலையில் கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், பல்வேறு மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
வட கொரியாவில், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், அவர் சீனாவின் பீக்கிங் யூனியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த நிபுணர்கள் சிலர், வடகொரியாவிற்கு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும், இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் அவசர சிகிச்சைக்காக, சீனாவின் பெய்ஜிங்கிற்கு அழைத்து செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
மேலும் படிக்க | "காதலியே இல்லை.. அது வெறும் AI" – ஏமாற்றத்தை கொடுத்த 1900 கி.மீ பயணம்! என்ன நடந்தது?
பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வதந்திகள் பரவின. அமெரிக்காவில் வசிக்கும் சீன ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய Wanjun Xie என்பவர், கிம்முக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதாகவும், பெய்ஜிங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், அவரது மரணத்தைத் தொடர்ந்து சீனா ஒன்பதாயிரம் படைவீரர்களை வடகொரியத் தலைநகருக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
இந்த மரண வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகொரிய அரசு ஊடகம் கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற ஆடை மற்றும் காலணிப் பொருட்காட்சி ஒன்றில் அவர் ஆரோக்கியமாகப் பங்கேற்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டு, பரவிய தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே என அதிகாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது. இதை எடுத்து இம் ரசிகர்கள் தலைவனுக்கு எண்டு கார்டு போட்டா ஏமாத்திரிங்க அவருக்கு எண்டே கிடையாது என கமெண்ட் செய்து வருகின்றனர்
கிம் ஜாங் உன், அந்த புகைப்படங்களில், தன்னுடைய கோட் மற்றும் செருப்பை சரிபார்ப்பது போலவும், அதைப்பற்றி தன்னுடைய அதிகாரிகளிடம் தெரிவிப்பது போலவும் பதிவாகி இருக்கிறது. இருப்பினும் இது தற்போதைய புகைப்படமா, அல்லது பழைய புகைப்படமா, அல்லது திரிக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியவில்லை.
வடகொரிய அதிபர் பற்றி..
கிம் ஜாங் உன் அவருடைய கடுமையான மற்றும் கொடூர ஆட்சிமுறைக்கு பெயர் பெற்றவராக இருக்கிறார். தனது அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் என கருதுபவர்களையும், அவர் தேசத்துரோக குற்றம் சுமத்தி தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங் உன், தன்னுடைய மூத்த அண்ணன் கிம் ஜாங் நாமை 2017ஆம் ஆண்டு நச்சு வாயு மூலம் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இப்படி பல விஷயங்களை அவர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் அனைத்து குழந்தைகளுக்கும் SpaceX பங்கு! எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு