• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சென்னை டூ ராம்நாடு.. இன்று இரவு முதல் வெளுக்கப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை டூ ராம்நாடு.. இன்று இரவு முதல் வெளுக்கப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

TN Weather Update: தமிழகத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும், டெல்டா, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 20, 2026, 03:57 PM IST|Updated: Oct 20, 2026, 04:02 PM IST
joinshare
சென்னை டூ ராம்நாடு.. இன்று இரவு முதல் வெளுக்கப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?

DA Hike: அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அப்டேட்.. நாளை அகவிலைப்படி அறிவிப்பு? சம்பள உயர்வு எவ்வளவு?

2

Explainer: ஏற்றுமதி மூலம் உலகளாவிய பட்டாசுச் சந்தையை குறிவைக்கும் சிவகாசி!!

3

சென்னை டூ ராம்நாடு.. இன்று இரவு முதல் வெளுக்கப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

4

சிலுவை விழுந்து பலியான பாதிரியார்! இறக்கும் முன் மரணத்தை பற்றி பேசினாரா? அதிசயமா இருக்கே..

5

CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கனமழை வெளுத்து வாங்கியதை தொடர்ந்து, வெயில் அதிகம் இல்லாமல் மழை பெய்யக்கூடிய வானிலையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு முதல் நாளை காலை வரை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாக, சென்னையில் இன்று பகல் நேரத்திலேயே அவ்வப்போது திடீரெனக் குறுகிய நேரத்தில் தீவிரமான மழை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மழைக்கு இடையே வெயிலும் அடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து, இரவு முழுவதும் தொடர்ந்து நாளை அதிகாலை வரையிலும் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளார். இதனால் சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரையிலான நேரம் மழைக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை

கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

கடலோர பகுதிகள் மட்டுமின்றி, அவற்றை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கடலூரின் உள்பகுதிகள், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலை அமைப்புகளுடன், இலங்கைக்கு அருகே காணப்படும் மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்று ஒன்றுகூடும் சூழலை உருவாக்குவதாக பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.

இந்த அமைப்பு தமிழகத்தின் உள்பகுதிகளைக் கடந்து கேரளா வழியாக அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும் எனவும், அதன்பிறகு தென் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதே பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது.

சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரா பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சென்னை டூ ராமநாதபுரம்.. வெளுக்கப்போகும் கனமழை

இதன் காரணமாக (அக்டோபர் 20) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை (அக்டோபர் 21) தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 26 வரை தொடரும் கனமழை

அக்டோபர் 22 ஆம் தேதியன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 23 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 24 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 25 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-10-2026: சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

இன்று (20-10-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான/கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (21-10-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather