• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

தோல்விகளில் இருந்து மீள சிஎஸ்கே அணியில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ருதுராஜ் கெய்க்வாடின் ஃபார்ம், டிரேடிங் முயற்சிகள் மற்றும் எதிர்கால கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written ByR Balaji
Published: Oct 20, 2026, 02:46 PM IST|Updated: Oct 20, 2026, 02:48 PM IST
joinshare
CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

2

Ranji Trophy: தமிழ்நாடு அணி மிரட்டல் வெற்றி... சுருண்டது உத்தரகாண்ட் - சாய் கிஷோர் ஹாட்ரிக்

3

வட கொரிய அதிபர் மரணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! இது உண்மையா?

4

அண்ணன் சீர் திட்டம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

5

ஈரோட்டில் நர்ஸ் கொல்லப்பட்டது எப்படி? நகைக்காக சக ஊழியர் செய்த கொடூரம்.. விசாரணையில் பகீர்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வலுவான அணியாக உருவெடுக்க பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததால், அடுத்த சீசனில் அணியின் செயல்பாட்டை மேம்படுத்த நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதுடன் வீரர்களின் பெயர் மற்றும் அந்தஸ்தை பார்க்காமல் அவர்களது தற்போதைய ஃபார்மை அடிப்படையாக கொண்டு அணித் தேர்வை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ருதுராஜுக்கு மாற்றாக கே.எல். ராகுல்?

கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடியதாக கூறப்படும் நிலையில், அவருக்கு பதிலாக அதிரடியாக விளையாடக்கூடிய மிடில் ஆர்டர் பேட்டரை அணிக்கு கொண்டுவருவது குறித்து சிஎஸ்கே ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக ருதுராஜை டிரேடிங் முறையில் வேறு அணிக்கு அனுப்பிவிட்டு அவருக்கு பதிலாக தரமான பேட்டரை வாங்குவது குறித்து தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான், மகேந்திர சிங் தோனியுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மற்ற அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள கே.எல். ராகுலை வாங்குவதற்காக, அவருக்கு பதிலாக ருதுராஜை வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பரிமாற்றத்திற்கு டெல்லி அணி சம்மதிக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகி தெரிவிக்கின்றன. மற்ற அணிகளும் தங்களது முக்கியமான பேட்டர்களை விட்டுக்கொடுக்க தயங்கியதாக கூறப்படுகிறது.

முதல் 4 போட்டிகளில்தான் வாய்ப்பு?

டிரேடிங் முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், ஐபிஎல் 2027 சீசனில் ருதுராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதல் 4 போட்டிகளில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பது முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, ரன்கள் குவிப்பதுடன் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ருதுராஜ் இருப்பதாக தெரிகிறது.

அந்த போட்டிகளில் எதிர்பார்த்த செயல்பாட்டை வெளிப்படுத்தாவிட்டால், அவருக்கு பதிலாக இளம் வீரர் உர்வில் படேலை டாப் ஆர்டரில் களமிறங்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ருதுராஜின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லாவிட்டால் ஐபிஎல் 2028 சீசனுக்கு முன்பாக அவரை அணியிலிருந்து விடுவிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சிஎஸ்கே அடுத்த கேப்டன் யார்?

ருதுராஜின் இடம் குறித்த விவாதத்துடன் சிஎஸ்கேவின் எதிர்கால கேப்டன் யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இருவரும் இந்த போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்சி அனுபவம் இருந்தாலும், நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் நிர்வாகம் யோசிக்கலாம் என தெரிகிறது. அடுத்த சீசனில் சாம்சனுக்கு 32 வய்தாகும் நிலையில், நீண்ட கால அணி கட்டமைப்பில் அவருடைய பங்கு குறித்து ஆலோசிக்கப்படலாம்.

மறுபுறம், ஆயுஷ் மாத்ரேவுக்கு இளம் வயதிலேயே கேப்டனாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய யு19 அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு இருப்பதால், எதிர்கால தலைமை பொறுப்புக்கான தேர்வில் அவர் கவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருதுராஜுக்கு பிறகு கேப்டன்சி மாற்றம்?

ஜபிஎல் 2027 சீசனின் தொடக்கத்தில் ருதுராஜ் கேப்டனாக தொடரலாம் என கூறப்படும் நிலையில், அவரது செயல்பாட்டை பொறுத்து அணியின் முடிவுகள் மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் முதல் சில போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறினால் அணியில் அவரது இடம் குறித்த முடிவும் கேப்டன்சி மாற்றம் குறித்த ஆலோசனைகளும் முக்கியத்துவம் பெறலாம். அத்தகைய சூழலில் சஞ்சு சாம்சனை இடைக்கால கேப்டனாக நியமித்துவிட்டு எதிர்காலத்தில் ஆயுஷ் மாத்ரேவிடம் பொறுப்பை ஒப்படைக்கும் திட்டம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், ருதுராஜின் இடம், டிரேடிங் பேச்சுவார்த்தைகள் மற்றும் அடுத்த கேப்டன் தேர்வு தொடர்பாக வெளியுள்ள தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்ல. சிஎஸ்கே நிர்வாகத்தின் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த விவகாரங்களில் தெளிவு கிடைக்காது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings