SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

”எனக்கு யாருமில்லை..” ஆதரவற்ற இளைஞர் வீடியோ! விலை உயர்ந்த பரிசுகளுடன் வந்த 10 ஆயிரம் பேர்

சீனாவை சேர்ந்த ஒரு நபர், தனக்கு யாரும் இல்லை என்று கூறி அனைவரும் தன் திருமணத்திற்கு முடிந்தால் வருமாறு இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த பலர், அவருடைய திருமணத்திற்கு வரிசை கட்டி வந்துள்ளனர்.

Written By Yuvashree M
Published: Nov 02, 2026, 02:17 PM IST | Updated: Nov 02, 2026, 02:26 PM IST
Join

”எனக்கு யாருமில்லை..முடிந்தால் என் கல்யாணத்திற்கு வாருங்கள்..” என்று அழைத்த நபர் ஒருவர், தான் எதிர்பார்க்காத அளவிற்கான அன்பை சம்பாதித்திருக்கிறார். இது குறித்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

சீனாவை சேர்ந்த இளைஞருக்கு திருமணம்..!

திருமணம் என்பது, இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்வு என்பதை தாண்டி, பல சொந்த பந்தங்கள் கூடும் விழாவாக கருதப்படுகிறது. இந்த திருமண விசேஷங்களில் கூடும் உறவினர்கள், மணமக்களை வாழ்த்தி மகிழ்வர். ஆனால், சீனாவை சேர்ந்த இந்த இளைஞர், தனக்கு யாருமே இல்லை என்று கூறியிருக்கிறார்.

தன் தந்தை தான் சின்ன பிள்ளையாக பள்ளியில் படித்து கொண்டிருந்த போதே இறந்திருக்கிறார். பின்னர், இவருடைய தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். தன்னை விட்டுவிட்டு, தன் அண்ணனை மட்டும் அவர் பார்த்துக்கொண்டார் என்று அவர் கூறியிருக்கிறார்.

தான் சிறுவயதில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்தாலும், தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாழ்ந்த அந்த இளைஞர், அதற்காக சிறுக சிறுக பணத்தை சேமித்து, பின்பு திருமணத்திற்கான நாளையும் குறித்திருக்கிறார்.

ஆனால், தனக்கு உறவினர்களே இல்லையே என்று யோசித்த அவர், இதனால் தன்னுடைய திருமணம் ரொம்ப அமைதியாக நடைபெறுமோ என்று யோசித்திருக்கிறார். இந்த காரணத்தால், தன் திருமணத்திற்கு வருமாறு இணையதளவாசிகளை அவர் அழைத்திருக்கிறார். “என் திருமணத்தில் கலந்து கொள்ள பெரிதாக யாரும் இல்லை. நீங்கள் வந்தால் கண்டிப்பாக விருந்து இருக்கும். முடிந்தால் வாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

அடுத்து நடந்தது என்ன?

இளைஞரின் இந்த வீடியோவிற்கு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ரெஸ்பான்ஸ் வந்துள்ளது. இணையவாசிகள் பலர், “தோ வந்துட்டோம் மச்சான் ஃபீல் பண்ணாத..” என்று பதிவிட்டு, சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் செய்தும் காண்பித்திருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் வெறும் விருந்து சாப்பிட மட்டும் வரவில்லை. அவர்களே விருந்து சமைத்து எடுத்து வந்துள்ளனர். அது மட்டும் கிடையாது, பல்வேறு நபர்கள் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களையும் திருமணத்திற்கு பரிசாக கொடுத்துள்ளனர். பல்வேறு சமையல் கலை நிபுணர்கள், இலவசமாக அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளனர்.

கார்கள் பரிசு..!

அந்த இளைஞருக்கு, Maybach எனப்படும் மிக விலையுயர்ந்த பென்ஸ் கார் ஒன்றை ஒருவர் பரிசாக கொடுத்துள்ளார். பலர் திருமணத்திற்கான மெழுகுவர்த்திகளை எடுத்து வந்து, வீடு முழுவதும் அலங்காரம் செய்துள்ளனர்.

ஒரு இளைஞர், தன் மனதில் இருந்து வந்த ஒரு விஷயத்தை நேர்மையாக கூறிய போது அவருக்கு கிடைத்திருக்கும் அலப்பறிய அன்பு குறித்து தற்போது உலகமே பேசி வருகிறது.

பலர், அந்த நிகழ்வில் பாட்டு கச்சேரி நடத்தி மகிழ்ச்சியாக நடனமும் ஆடி இருக்கின்றனர். இதை பார்த்த பலர் அன்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், இந்த மனிதத்தை காப்பாற்றத்தான் பலரும் போராடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | 50 வருடம்.. தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழும் உலக பணக்காரர்.. எப்படி தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES