• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /வெடித்து சிதறிய விமானம்... ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் - அவர் உயிர் தப்பியது எப்படி?

வெடித்து சிதறிய விமானம்... ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் - அவர் உயிர் தப்பியது எப்படி?

ஈரானில் வெடித்து சிதறிய விமானத்தில் இருந்து, பாராசூட் உதவி இல்லாமல் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் கீழே விழுந்த அமெரிக்க வீரர் கடும் எலும்பு முறிவுகளுடன் 50 மணிநேரம் போராடி உயிர் தப்பிய கதையை அவர் சொல்லியுள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 14, 2026, 07:00 PM IST|Updated: Sep 14, 2026, 07:13 PM IST
joinshare
வெடித்து சிதறிய விமானம்... ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் - அவர் உயிர் தப்பியது எப்படி?
Image Credit: US air force officer Bravo and one of ejeaction seats of an american jet that was shot down over iran | Image Source : X/@60Minutes, @sentdefender

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஈரான் மீதான தாக்குதலின் போது அமெரிக்காவின் F-15E போர் விமானம் சூட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் கூட சரியாக செயல்படாத நிலையில், சுமார் 161 கி.மீ., வேகத்தில் அமெரிக்க விமானப்படை கலோனல் ஒருவர் கீழே விழுந்தும் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க விமானப்படை அதிகாரியான  முதுகு, கை, தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும் அவர் மலைப்பகுதியில் சுமார் 50 மணிநேரம் பதுங்கியிருந்து இறுதியில் அமெரிக்க சிறப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | இஸ்ரேலுக்கு அதிர்ச்சி: குடியேற்றப் பகுதிகளுக்கு எதிராக 12 நாடுகள் எடுத்த புதிய முடிவு

இது Bravo-வின் துணிச்சல் கதை

அமெரிக்க விமானப்படை அதிகாரியின் பெயரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை. இருப்பினும் அந்த மிஷனில் அவருக்கு சூட்டப்பட்ட பெயரான 'Bravo' என அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஈரானில் தான் சந்தித்த சோதனைகள் குறித்து CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் அந்த விமான அதிகாரி அனுபவம் பகிர்ந்துள்ளார். அவரது பேட்டியின் சுருக்கத்தை இங்கு காணலாம்.

ஈரானில் வெடித்து சிதறிய அமெரிக்க விமானம்

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, அமெரிக்க விமானப்படையின் F-15E Strike Eagle போர் விமானம் ஈரானில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, தோளில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணையால் தாக்கப்பட்டது. விமானத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் Alpha மற்றும் Bravo என்ற குறியீட்டுப் பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர். விமானம் தாக்கப்பட்டதும் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

பாராசூட் வேலை செய்யவில்லை...

ஆனால், Bravo அணிந்திருந்த பாராசூட், அந்த தாக்குதலில் சேதமடைந்திருந்ததால் சரியாக விரியவில்லை. இதனால் அவர் தரையை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தார். மணிக்கு சுமார் 112  முதல் 161 கி.மீ., வேகத்தில் தரையை நோக்கி விழுந்திருக்கலாம் என அவர் குறிப்பிடுகிறார்.

அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "பாராசூட் விரிந்துவிட்டதா என மேலே பார்த்தபோது பாராசூட் தெரியவே இல்லை. அதுதான் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பயங்கரமான தருணம்" என்றார்.

Bravo-க்கு பலத்த காயம்

கீழே விழுந்ததில் அவருக்கு முதுகு பகுதியில், கை மற்றும் தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கணுக்காலில் சுளுக்கு மற்றும் முகம், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் எதிரி படைகளிடம் சிக்காமல் இருக்க உடனடியாக அந்த பகுதியில் தப்பித்துள்ளார்.

மேலும் படிக்க | டிரம்பை விட அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்.. யார் தெரியுமா? இத்தனை கோடியா?

ஈரான் படையிடம் சிக்காத Bravo

அவர் கீழே விழுந்த பகுதி சுமார் 7 ஆயிரம் அடி மலை முகட்டை சென்றடைந்தார். அங்கு அவர் பாறைகளுக்கு இடையிலான குறுகிய பகுதியில் மறைந்துகொண்டதாக தெரிவித்தார். அவரைத் தேடி ஈரான் ஆதரவு உள்ளூர் ஆயுதம் தாங்கிய குழுக்கள் சுற்றித் திரிந்த நிலையில், Bravo அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்துள்ளார்.

இதற்கு அவரது ராணுவப் பயிற்சி பெரிதும் உதவியதாக அவரே தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவரை பிடித்து தந்தால் 60 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கி வந்த ஈரான் படை

Bravo பதுங்கியிருந்த இடத்திற்கு ஈரான் படைகள் சில நூற மீட்டர் தொலைவு வரை வந்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் எப்போதும வேண்டுமானாலும் அவர்களிடம் பிடிபடலாம் என்ற ஆபத்தான சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட Alpha

Bravo ஒருபுறம் என்றால், அவருடன் விமானத்தில் இருந்து கீழே விழுந்த Alpha சில மணிநேரங்களிலேயே அமெரிக்க சிறப்பு படையினரால் மீட்கப்பட்டார். அந்த மீட்பு நடவடிக்கையில் 21 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், Bravo-ஐ அமெரிக்க படையினரால் கண்டுபிடிக்க முடியாததால் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை தொடரப்பட்டது.

விமானங்கள், ஹெலிகாப்டர்கள், MQ-9 Reaper டிரான்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பயன்படுத்தி அமெரிக்க படை Bravo-வை தேடியது. Bravo கீழே விழுந்த அன்றிரவு, அவரால் அமெரிக்க படைகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக தெரிவித்தார்.

Bravo அமெரிக்க படைக்கு கொடுத்த தகவல்

"நான் காயமடைந்துள்ளேன், நகர்ந்துகொண்டிருக்கிறேன்" என்ற தகவலை அமெரிக்க படைகளுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் 'கடவுள் நல்லவர்'என்ற செய்தியையும் அனுப்பி தான் உயிருடன் இருப்பதை உறுதிசெய்தார்.

Bravo எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதை கண்டறிய அமெரிக்க அளவு அமைப்பான சிஐஏ உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏமாற்று உத்திகள் மற்றும் ரகசிய தொழில்நுட்பங்கள் மூலம் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 மணிநேரத்திற்கு பின்...

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 2 நாட்களுக்கு பிறகு, சுமார் 92 அமெரிக்க சிறப்புப் படையினர் Bravo-வை மீட்க ஈரானுக்குள் சென்றனர். இறுதியாக, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 50 மணிநேரத்திற்கு பிறகே Bravo பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

மீட்புக்கு பின் வந்த சிக்கல்

மீட்புப் படையினரை பார்த்த அந்த தருணம் தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என Bravo குறிப்பிட்டிருந்தார். Bravo-வை மீட்ட பிறகும் அந்த நடவடிக்கை சுமுகமாக முடியவில்லை. மீட்பு விமானம் பாலைவனத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஓடுதளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் 90க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் சிக்கிக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்கள் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக அங்கு சிக்கியிருந்த விமானத்தை அமெரிக்க ராணுவம் அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.

தான் உயிர் பிழைத்ததற்கு தனிப்பட்ட தைரியம் மட்டுமின்றி அவர் பெற்ற பயிற்சி, குழு ஒருங்கிணைப்பு, நம்பிக்கை மற்றும் தலைமைத்துவமே காரணம் என்றும் Bravo குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமெரிக்கா - ஈரான் மோதல் உச்சம்: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Asia