SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

US Midterms 2026 Winners List: 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் சமநிலையை மாற்றியுள்ளன. டெமோக்ராட்கள் செனட்டை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், ஹவுஸ் கட்டுப்பாட்டுக்கான போட்டி கடுமையாக நீடிக்கிறது. டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

Written By Shiva Murugesan
Published: Nov 04, 2026, 12:04 PM IST | Updated: Nov 04, 2026, 12:09 PM IST
Join

அமெரிக்காவில் 2026 இடைக்கால (Midterm) தேர்தல்கள் அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு என்பது இந்தத் தேர்தலின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

வாக்காளர் மனநிலையைப் பார்த்தால், 2024 தேர்தலில் டிரம்பை வெற்றிப்பெறச் செய்த கூட்டணி இந்த முறை பல இடங்களில் பலவீனமடைந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கருப்பின ஆண்கள், லத்தீனோ வாக்காளர்கள், இளைஞர்கள், எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்கள் மற்றும் கல்லூரிப் பட்டம் பெறாதவர்களிடையே குடியரசுக் கட்சியின் ஆதரவு குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெமோக்ராட்கள் வசம் சென்ற அமெரிக்க செனட்

இந்த தேர்தலின் மிகப் பெரிய அரசியல் திருப்பமாக அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டை டெமோக்ராட்கள் மீட்டுள்ளனர். பணவீக்கம், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் ஈரான் போர் தொடர்பான மக்களின் அதிருப்தி ஆகியவை வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

அதே நேரத்தில், பிரதிநிதிகள் சபை (House of Representatives) கட்டுப்பாடு யாருக்கு என்பதை உறுதியாக அறிவிக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. அதேநேரம் டெமோக்ராட்கள் ஏற்கனவே குடியரசுக் கட்சியிடமிருந்து ஏழு இடங்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?

அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House) தேர்தலில் வெற்றி பெற்ற முக்கிய வேட்பாளர்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பியா டாண்டியா வரலாற்று வெற்றி

புளோரிடாவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பியா டாண்டியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. அவர் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரை தோற்கடித்து பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்துள்ளார். இந்த வெற்றி இந்திய-அமெரிக்க சமூகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க செனட் தேர்தலில் முக்கிய முடிவுகள்

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 100 இடங்கள் கொண்ட செனட்டில் அனைத்து இடங்களும் ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வராது.

இந்த முறை முக்கியமாக வெற்றிபெற்றவர்கள்:

டெக்சாஸில் வரலாறு படைத்த ஜேம்ஸ் டலாரிகோ

டெக்சாஸ் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் ஜேம்ஸ் டலாரிகோ. அவர் குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனை தோற்கடித்து 1988க்கு பிறகு டெக்சாஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் டெமோக்ராட் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 1994க்கு பிறகு டெக்சாஸில் டெமோக்ராட்கள் பெற்ற முதல் மாநில அளவிலான வெற்றியாகவும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் தேர்தலில் டெமோக்ராட்களின் அதிரடி

பல முக்கிய மாநிலங்களில் டெமோக்ராட்கள் ஆளுநர் பதவியையும் கைப்பற்றியுள்ளனர்.

ரோட் ஐலந்து

ஹெலினா ஃபவுல்க்ஸ் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார்.

நியூயார்க்

கேத்தி ஹோகுல் மீண்டும் ஆளுநராக வெற்றி பெற்றார்.

விஸ்கான்சின்

டேவிட் க்ரௌலி வெற்றி பெற்று ஆளுநரானார்.

டெக்சாஸ்

ஜினா ஹினோஜோசா, பதவியில் இருந்த கிரெக் ஆபட்டை தோற்கடித்து மாநிலத்தின் முதல் லத்தீனா பெண் ஆளுநராக வரலாறு படைத்துள்ளார்.

ஓஹியோ

டிரம்ப் ஆதரவு பெற்ற விவேக் ராமசாமியை டெமோக்ராட் ஏமி ஆக்டன் தோற்கடித்தார்.

ஜார்ஜியா

கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஒரு மாநிலத்திற்கு முதல் கருப்பின பெண் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஐவோவா

ராப் சாண்ட் ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

ஹவுஸ் கட்டுப்பாடு யாருக்கு?

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையைப் பெற 218 இடங்கள் தேவை.

தற்போது டெமோக்ராட்கள் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா மற்றும் கென்டக்கி உள்ளிட்ட மாநிலங்களில் குடியரசுக் கட்சியிடம் இருந்த ஏழு இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

பென்சில்வேனியாவில் ஜெனெல்லே ஸ்டெல்சன், குடியரசுக் கட்சியின் ஸ்காட் பெர்ரியை தோற்கடித்தது கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் இன்னும் இறுதி தேர்தல் முடிவுகள் கால தாமதம் ஆகும் என்பதால், ஹவுஸின் கட்டுப்பாடு எந்தக் கட்சிக்கு என்பதில் முடிவு தெரியவில்லை.

தேர்தல் குறித்து டிரம்ப் என்ன கூறினார்?

தேர்தல் முடிவுகள் குறித்து தனது Truth Social தளத்தில் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், 

"நான் இந்த வாக்குச்சீட்டில் இல்லை" என்று பதிவிட்டார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், தேவையான இடங்களில் டெமோக்ராட்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செனட் கைமாறியது... டிரம்ப் அணிக்கு பின்னடைவு

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு முக்கிய எச்சரிக்கை மணி அடித்துள்ளன. செனட் கட்டுப்பாட்டை டெமோக்ராட்கள் மீட்டுள்ள நிலையில், ஹவுஸ் கட்டுப்பாட்டிற்கான போட்டியும் கடுமையாக நீடிக்கிறது. டெக்சாஸ், ஜார்ஜியா போன்ற பாரம்பரியமாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய சிக்னல்களாக பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க - அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்: டிரம்புக்கு ஷாக் கொடுத்த ஜனநாயக கட்சி.. கைமாறும் செனட் சபை.. ஏன் முக்கியம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES