தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா, தன்னுடைய 18 வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்து விட்டார். ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். இப்போது தமிழிலும் வரிசையாக பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதையடுத்து இவர் அடுத்தடுத்து தமிழில் இணைந்திருக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம்தான், தர்மன். ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் வேலைகளில் ரஜினிகாந்த் இறங்கி இருக்கிறார். இவருடன் சேர்ந்து சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். புதிதாக தற்போது இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்துள்ளனர். அதில் ஒருவர், நயன்தாரா. இவர், இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை ஸ்ரீலீலாவும் இப்படத்தில் சேர்ந்திருக்கிறார். இவருக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டர் இருக்கிறதா, அல்லது இவரும் கேமியோ ராேலில் வருகிறாரா என்பது இன்னும் தெரியவில்லை.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம்தான், ஓம். இந்த படம், வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இவர், இப்படத்தில் தனுஷுக்கு மனைவியாக ’ரோஜா’ எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இது குறித்த ப்ரமோவை சமீபத்தில் வண்டர்பார் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், ஸ்ரீலீலா குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவியாக வருகிறார். இந்த படத்தில் சாய் பல்லவியும் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், தற்போது தன்னுடைய கார் ரேஸிங் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இக்கும் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். பல நாட்களாக தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த படம், அஜித்திற்கு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் கதையுடன் அமைந்ததாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் இப்படம் குறித்து நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது அஜித்துடன் சேர்ந்து இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அப்படி அவர் கூறிய நடிகர்களின் பெயர்களில் ஸ்ரீலீலாவும் ஒருவராக இருந்தார்.
தொடர்ச்சியாக ஒரே சமயத்தில் மூத்த மற்றும் முக்கிய நடிர்களாக இருக்கும் ரஜினி, தனுஷ், அஜித் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள ஸ்ரீலீலாவிற்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குறிய நடிகையாக இருக்கிறார், மமிதா பைஜு. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ஜனநாயகன், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், பெத்தலகம் குடும்ப யூனிட் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் ‘ஹெலோ டியர்’ எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ள ‘இருண்ட வானம்’ படமும் வெளியாக காத்துக்காெண்டுள்ளது. ட்யூட் படத்திற்கு பிறகு இவருடைய மார்கெட் உயர்ந்ததால், அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து இவர் ஒரு படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இதனால், இவரும் கோலிவுட்டில் பெரிய பெயரை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, தமிழ் பெண்களை விட கேரளா மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து வரும் வெளிமாநில நடிகைகளுக்குதான் மவுசு ஜாஸ்தியாக இருக்கிறது. எனவே, கேரளாவில் இருந்து வந்துள்ள மமிதா பைஜுவும், லண்டன் ரிட்டர்ன், பெங்களூருவை இருப்பிடமாக கொண்ட ஸ்ரீலீலாவும் கண்டிப்பாக தமிழ் திரையுலகை ஆட்டிப்படைப்பர் என்பதில் ஐயமில்லை.